விஞ்ஞானத்தால் விளக்க முடியாததாகி,
அண்டம் காலம் இடையே சுழன்று திரிந்து
பூரணமாகியும் ஆகாமலும் உள்ள நிலை
பாவபுண்ணிய கணிதம் பிரம்மன் எழுத
கர்ப்பம் கர்மம் இடையே அது பாலமாகி,
முதலும் முடிவும் தொடர் ஒட்டமாகி
எண்ணமே வாசனையாய் தங்கும் நிலை
முடிவில்லா காலச் சக்கரத்தின் உள்ளே
யுகந்தோறும் வாழும் தீர்வற்ற சூட்சுமம்,
பிறப்பு இறப்பு இடையே சிக்கித் தவித்து
ஊழ்வினையில் அடைபட்டு வாழும் நிலை
பிறன்வினை சூழ்க்கேட்டால் வஞ்சிக்கப்பட்டு
ஏற்காத பாவிமனம் பழிதீர்த்து பாவம் சுமக்க,
பாம்பின்வாய் தேரையாய் பரமபதம் சறுக்கி
தன்வினையால் அல்லல்பட பிறக்கும் நிலை
பிறன்வினை சூழ்க்கேட்டால் வஞ்சிக்கப்பட்டு
ஏற்காத பாவிமனம் பழிதீர்த்து பாவம் சுமக்க,
பாம்பின்வாய் தேரையாய் பரமபதம் சறுக்கி
தன்வினையால் அல்லல்பட பிறக்கும் நிலை
எத்தனை ஜென்மங்கள் எத்தனை உறவுகள்
ஆன்மா பயணித்த ஆண்டுகள் பலலட்சம்,
வாழ்கை பருவங்களில் வாழ்ந்து சலித்து
பல திணைகள் வர்ணங்கள் பார்த்த நிலை
ஜீவனுக்குள் வந்துபோகும் வந்துபோகும்
ஜீவனுக்குள் வந்துபோகும் வந்துபோகும்
பரமாத்மாவோடு இணைந்து கலக்கும் வரை,
எரிந்தும் புதைந்தும் கழன்ற உடலைவிட்டு
வீடுபேறு அடைந்து மறுபிறவி எய்தா நிலை
ஆன்மாவை நல்வழி நடத்துவது ஆன்மீகம்
ஆன்மீகத்தின் வழிகாட்டியே ஆண்டவன்
ஆண்டவன் பாதத்தை பற்றும் ஆன்மாவுக்கு
ஆசியும் முக்தியுமே விடுதலைக்கு நிலை.
___________________________
* ஆன்மீகம் மாத இதழ் 2004. Composed by me.