About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 3 மார்ச், 2014

Preface to BOGAR-7000




அன்பர்களுக்கு வணக்கம்!
நான் மெத்தப் படித்த தமிழ் பண்டிதனல்ல, ஆன்மிகத்தில் தெளிந்து கரையேறியவனல்ல, சித்த இலக்கியங்களை உழுதுப் பார்த்தவனுமல்ல. நான் ஒரு சராசரி நிலையில் உள்ளவன்.
அதிசய சித்தர் போகர் (கற்பகம் புத்தகாலயம்) என்ற புத்தகத்தை எழுதும்போதுதான், சித்தர் நூல்கள் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இதுபோன்ற நூலை நான் எழுதவேண்டும் என பணித்ததே சித்தர் போகர் தான். சில வருடங்களுக்குமுன் அவர் தந்த இப்பணியை எடுத்துச்செய்ய ஞானமோ தெளிவோ அனுபவமோ அப்போது எனக்கு இருக்கவில்லை. அந்நூல் எழுதியபின் இவையெல்லாம் முழுமையாய் இப்போது எனக்கு வந்துவிட்டது என்று கூறிட இயலாது. அவர் இதுவரை என்னை பயிற்சியில்தான் வைத்துள்ளார் என்று நம்புகிறேன். 
முதல் நூல் எழுதுவதற்காக போகரின் சப்த்காண்டத்தைப் ஆய்வு செய்ய நேர்ந்தது. எண்ணற்ற மற்ற சித்த நூல்கள் இருக்க இதை மட்டும் ஏன் தேர்ந்தெடுத்தேன் என்று தெரியவில்லை. போகர் 7000 போன்ற பிரம்மாண்ட நீளமுள்ள சித்தர் பாடல்களை இதற்குமுன் நான் வாசித்தது கிடையாது. சித்தர் பாடல்களை மட்டுமே வெளியிடும் ஒரு பதிப்பாளரை அணுகி சப்தகாண்டத்திற்கு உரை இருக்குமா என்று கேட்டேன், இதுவரை யாரும் போடவில்லை என்றார். 
கொடுத்த பணியை செய்யாது காலம் கடத்துகிறேன் என்று நினைத்து போகரே என்னுள் இருந்து வேலை செய்தார் போலும். இதை எங்கு ஆரம்பித்து எப்படி முடிப்பது என குழப்பம் இருந்தது. அதுபோன்ற சமயத்தில் நான் எதை எழுதினால் போதுமோ அப்பாடல்கள் மட்டும் புரட்டும்போது கண்ணில் படும். அதை கோர்வையாக எழுத முதல்புத்தகம் சிறப்பாக வந்து பாராட்டையும் பெற்றது. நம்புங்கள், நான் அப்போது கூட சப்தகாண்டத்தை முழுமையாக வாசிக்கவில்லை. பாடலின் எண், குறிப்புமட்டும் எடுத்தேன். படிக்கும்போது மறைபொருள் சொற்கள் வந்து குழப்பும். அதனால் எழுதுவதற்கு முன் இதைப்பற்றி நிறைய ஆய்வு செய்தேன்.
போகருடைய நூலில் அப்படி என்னதான் சங்கதிகள் இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆசைபடுவோருக்கே இந்நூல் எழுதப்பட்டது. கரைக்கண்ட சித்த வைத்யர்களுக்கோ, ஆழம் எதிர்பாற்பவர்களுக்கோ எழுதவில்லை என்பதை சொல்லிவிடுகிறேன். ஒரு சராசரி நபருக்கு இந்த நூல் பற்றி என்ன தெரியவேண்டுமோ, அந்த அளவில் மட்டுமே என்னை எழுதவைத்தார். எத்தனையோ புலவர்களும் அறிவாளிகளும் இருக்க அவர் இப்பணி செய்ய என்னை தேர்ந்தெடுத்ததும் தெரியவில்லை.
இப்போது போகர் எழயிரத்தை முழுதுமாக வாசித்துப் பார்த்தபின் பிரமித்துப்போனேன். இந்த இரண்டாம் நூலை எழுதியபிறகும்கூட கருத்தை முழுமையாக உள்வாங்கிக் கொண்டேனா என்பது தெரியாது. மூலிகைகள், ரசவாதம், கற்பம், மாந்த்ரீகம் போன்ற தலைப்புகள் எல்லாம் எனக்கு முற்றிலும் புதிது. சப்தகாண்டத்திற்கு நாம் ஏன் பொருளுரை எழுத முயற்சிக்கக்கூடாது என்று மனதில் அவர் கொடுத்த தைரியத்தில் இந்நூல் உருவானது. பலர் இதுவரை முயற்சிக்காத ஒரு நூலைக் கையிலெடுத்து அதற்கு சாராம்சமாக எளியவுரை எழுதும் அளவிற்கு நான் புலமையும் தகுதியும் உள்ளவனா என்று நீங்கள் கேட்டால் என்னிடம் பதில் இல்லை.
வருங்காலத்தில் போகர் 7000 நூலுக்கு யாரேனும் இன்னும் விரிவாக உரை எழுதக்கூடும். அதற்கு ஒரு அடித்தளமாய் இந்நூல் விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. நான் எழுதியதில் சொற் குற்றம் பொருள் குற்றம் இருக்க நிறையவே வாய்ப்புண்டு. அதையெல்லாம் சித்தர் போகரும் அன்பார்ந்த வாசகர்களும் மன்னித்தருள வேண்டும். எழுத வழிகாட்டிய போகரின் தாள் பணிந்து  இப்புத்தகத்தை சமர்ப்பிக்கின்றேன்.
                                                                                                           எஸ். சந்திரசேகர்


Salutations!
I stand before thee as neither a learned Tamil scholar nor an enlightened spiritual figure nor a person of siddha cult who had ploughed and fathomed the depth of siddha literature. I am a Hindu with an average knowledge and basic skills.

When I attempted my first book Athisaya Siddhar BOGAR (Karpagam Publications), I had an opportunity to read the mammoth composition of seven thousand songs of Bogar called BOGAR 7000. Of course, reading it was a mega task. It happened so that a few years ago, the writing assignment was symbolically entrusted to me by Siddhar Bogar himself. As I did not possess sufficient writing experience or a fair knowledge then, I could not take over the specific task. 

Never should you presume that I have achieved it in these years. Even to this day, I will not be able to say if I stand anywhere near to be qualified to write a thesis going by the strict yardstick prescribed for competency in Tamil language and grammar. I would rather say that it was purely a task initiated, entrusted and executed by him through me. All I understood is that he has put me on intensive training.

When several other works of siddhas are available in print, I did not know as to why I chose this particular work. Till that occasion, I never came across a lengthy work like this. I approached a local publisher who holds a track record of publishing all siddha works to know whether a detailed prose explanation is available for Bogar 7000. I received a negative reply that none had attempted to write notes for it. 

As I was procrastinating, Bogar himself had triggered the impulse in me to start the work. I was totally blank and knew nothing as to how to start and finish. During such difficult times, he would show those songs that were just required to write chapter wise. This was how I authored my first book that captured accolades and compliments from readers. Frankly speaking, at that stage also, I did not go through the entire length of epic like Sapthakaandam except jotting down brief notes and song number. Since the songs have pseudo words in disguise with encrypted meaning, it was confusing and difficult to proceed ahead. It demanded reasonable research before I wielded the pen.

After studying the entire composition, I was totally surprised and spellbound. The topics like elixir, salts, herbs, alchemy and black magic are new to me. Inspite of zero knowledge on the topics, it struck me as to why I should not attempt to write an abridged explanation for sapthakaandam comprising thousands of verses. I believe the courage was seeded by none other than the siddhar. Would anyone dare to write a thesis on a subject that is totally new to his expertise? Perhaps you would ask why I took a heavy subject in depth without ground knowledge and which many scholars did not try in the past. I have no answer.

In future, somebody could possibly bring out a better version with excellence and nuance. Any way, this book would be a primitive forerunner. Going by publishing standards, though predominantly the vocabulary and language chosen for subjects on these lines have been bombastic, it was tough for a common man to understand. As a person who is against the barricades of language reach, I wanted a simple flow that will not shoo away enthusiastic readers.

A siddha mother living in Palani asked me to translate my work into English. I hesitated for the reason that this would need precision to convey the right meaning without distortion and at the same time understandable, without running for dictionary. It is my personal view that a prose work should not be a vehicle to boast one’s mastery over the language through high level vocabulary. The language style followed in many books on subjects of siddha and spirituality, address only the international native speakers of English. Even if the translation work was entrusted to some learned professors, I may not be sure whether they will understand and portray with ease the crux of what I conveyed in Tamil. Their emphasis would be more on language style and grammar than the essence. So, I decided to try it myself.

Though care has been taken, errors in interpretation and typography are expected in my classic debut in English. I beg the siddhar and readers to pardon it magnanimously. It is my soulful pleasure to dedicate the book at the holy feet of my guide, Siddhar Bogar.
                                                                                                        S.Chandrasekar