உலகிலேய மிகபெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மன்னன் தென்னிந்தியா முழுவதும், தெற்காசியா வரை வேர் பரப்பி தன் மகன் வெற்றி கொடி நாட்ட வழிவகுத்த மாமன்னன் ராச ராச சோழன். ஆட்சி காலம் கிபி.985 - 1012.
1000 வருடமாக கம்பீரமாக நிற்கும் பெரியகோவிலை கட்டிய மன்னன், உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன், மாலம், இலங்கை, ஸ்ரீவிஜயம் சுமத்ரா, கம்போடியா, தேசங்களுளையும் கங்கை வரை சென்று வென்றவன், பல பெயர்களால் வழங்கப்பட்ட மன்னன், என்று இவருடைய புகழை இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படிப்பட்ட மாமன்னன் சமாதியைப் பாருங்கள். பள்ளிப்படை கோயில் கட்ட நிதி வசூலாகிறது என்பது இங்கே பலகையில் போட்டுள்ள செய்தி.
தஞ்சை மாவட்டம் குடந்தை தாலுகா, உடையாளூர் கிராமம் (பட்டீஸ்வரம் அருகில்) முடிகொண்டான் நதிக்கரையில் ஒரு விவசாயியின் (Mr.பக்கிரிசாமி) வாழைத் தோப்பில் உள்ளது மன்னனின் சமாதி. பள்ளிப்படை கல்வெட்டுகள் குறிக்கும் இடம் இதுதான். தன் பட்டத்து அரசி உலகமுழுதுடையாள் (Ulagamadhevi) க்கு இந்த கிராமத்தை எழுதி வைத்தான். முடிமன்னனும் பிடிமண்ணில் அடங்குவான் என்பது எத்தனை உண்மை.
அதே வாழைத்தோப்பில் 2015 ல் எழுப்பப்பட்ட பள்ளிப்படை (சமாதி) கோயில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக