About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 15 மே, 2015

சோழ வாரிசு வருகிறார் ... பராக் பராக்..!

பிச்சாவரம்(பித்தர்புரம்) ராஜ ராஜ சோழனின் வாரிசுகள் மஹா ராஜ ராஜ ஸ்ரீ மன்னர் மன்னன் சூரப்ப சோழனார், சகோதரி குந்தவை, இளைய சகோதரர் மற்றும் தாயார் ராணி சாந்திதேவி அம்மாள், சிதம்பரத்தில் (தில்லை) குடமுழுக்குத் திருவிழாவில் தீட்சிதர்களால் அளிக்கப்படும் சிறப்பு மரியாதையை பெற வந்தபொழுது எடுக்கப்பட்ட படம். 

Image may contain: 4 people

அண்ணாமலை பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு 1000 ஏக்கர் நிலம் தானமாக கொடுத்த குடும்பம் இன்று ஏழ்மை நிலையில். கோடி கோடியாய் சொத்திருந்தாலும் யாருக்கும் கிடைக்காத இந்த சிறப்பு மரியாதை இவர்களுக்கு மட்டுமே தில்லையில் அளிக்கப்படும். இன்று இவர்கள் இவர்கள் ஏழ்மையில் இருக்கலாம் ஆனால் ஒரு காலத்தில் தெற்காசியாவைக் கட்டி ஆட்சி செய்த சோழனின் வாரிசுகள். சிதம்பரம் நடராஜர் கோயில் முக்கிய நிகழ்வுகளில் இச்சம்ப்ரதாயங்களை இன்றும் தில்லை தீட்சிதர்கள் கடைபிடித்து வருகிறார்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது..

வெகு விரைவில் ஸ்ரீ மன்னர் மன்னன் சூரப்ப சோழனார் அவர்களுக்கு தில்லையில் பஞ்சாட்சரப் படியில் அமரவைத்து தீட்சிதர்களால் சோழ அரசராக முடிசூட்டப்பட இருக்கின்றது. இதுபோன்ற சம்பிரதாயங்கள் இல்லையென்றால் நம் ஆட்கள் வரலாற்றையே மாற்றி எழுதி விடுவார்கள்.

சுந்தர சோழர் (கி.பி.10) காலத்து செப்பேடுகள்படி 'பிச்சாவரம் பாளையக்காரர்கள்'தான் சோழர்களின் நேரடி வம்சத்தவவர்கள் என்று அறியப்பட்டுள்ளது. தில்லை நடராஜர்தான் இவர்கள் குல தெய்வம். பட்டத்திற்கு வரும் வாரிசு, சிதம்பரத்தில் இறைவனின் கர்ப க்ருஹமான 'பஞ்சாட்சர படி' யில் அமர்த்தபடுவார். அந்த பட்டத்து வாரிசு இறைவனாகவே கருதப்படுவார்.

தில்லையின் ஆடலரசனுக்கு அபிஷேகம் செய்விக்கப்படும் அதே வலம்புரி சங்கில் நீர் எடுத்து தலைமை தீட்சிதர் அவர்கள் இந்த சோழ வாரிசுக்கு தலையில் நீர் ஊற்றி நிகழ்ச்சியை தொடங்குவார். இவருக்கு தலையில் பட்டம் கட்டி, மந்திரங்கள் ஒத பனை ஓலைகளை செருகி , அத்தி மாலை சாற்றி பட்டாபிஷேகம் செய்வார்கள். இந்த அத்தி மாலைதான் சோழர் வம்சத்து பாரம்பரிய மாலை. காலங்காலமாக தீட்சிதர்கள் தான் இதை நடத்திவைப்பது மரபு.

ராஜ சபை எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் அவரை வீற்றிருக்க செய்து, மந்திர கோஷம் மத்தியில், தலைமை தீட்சிதர் புதிய மன்னருக்கு வம்ச வாளும், புலி கொடியும் தருவார். தீட்சிதர்கள் தலைமையில் சோழ பட்டாபிஷேகம் நடக்கும் விதத்தை பற்றி சேக்கிழார் (கி பி 12) தன் பெரியபுராணத்தில் குற்றுவ நாயனார் சரித்திரம் என்ற பகுதியில் பதிவு செய்துள்ளார். குலோத்துங்கன் காலத்திலிருந்தே இது முறையாக நடந்து வருகிறதாம். கோயிலின் பேரம்பலமான சோழ மண்டகப்படி இடத்தில் மன்னர் அமர்ந்து பொது மக்கள் பிரச்சனிகளை தீர்ப்பது மரபாகும். சோழப்பேரரசு கிபி.1279ல் (13ம் நூற்றாண்டு) முடிவுக்கு வந்தது. 3ம் ராஜேந்திர சோழன்தான் கடைசியாக ஆட்சிசெய்த சோழ மன்னன்.

இவர்கள் அரியலூர் ஜமீன், மாயவரம், சிர்காழி, கடலங்குடி பாளையக்காரர்களோடு சம்பந்தம் செய்துகொள்வார்கள் என்று அறியப்படுகிறது. கிள்ளி, செம்பியன், மலையமான், என்று ஷத்ரிய குல சோழர்களுக்குள் பல உட்பிரிவுகள் வந்துவிட்டதாம். பிற்காலத்தில் கள்ளர் இனத்தவர்கள் தங்களை இந்த வம்சத்தோடு தவறாக தொடர்பு படுத்தி கொண்டு பேசுகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

Image may contain: 2 people, people standing

இது ஒருபுறம் இருக்க, ராஜராஜ சோழன் படையெடுத்துச் சென்ற காம்போடியா, மாலம், ஸ்ரீவிஜயம் சுமத்ரா, இலங்கை போன்ற தேசங்களில் சாம்ராஜ்ய்த்தையும் வம்சத்தையும் வளரத்தார். இன்றைய உணம்யான வாரிசு யார் என்ற சர்ச்சை நடப்பதாகவும், இந்த சூரப்பர் வம்சத்தை ஏற்கமாட்டோம் என்று மலேசிய தமிழர்கள் போட்ட விமர்சனத்தை முகநூலில் பார்த்தேன். அதுசரி, இவர் வம்சம் பற்றி இன்று சண்டைபோட்டு நாம் என்ன செய்யப் போகிறோம்?