எலும்பு ஒட்டி மூலிகைச் செடி இன்று கண்ணில் பட்டது. காட்டு ஆமணக்கு வளர்ந்திருந்த புதரில் இதுவும் செழித்து வளர்ந்திருந்தது. காலி நிலத்தில் எதோ களைச் செடிகள் என்று நினைத்து விட்டு வைத்திருப்பார்கள். இலை அமைப்பைப் பார்த்தால் முருங்கைக் கீரையைப் போலவே இருக்கும்.
கை/ கால் உடைந்த எலும்புப் பகுதியில் விளக்கெண்ணெய் தேய்த்து எலும்பைச் சரியான நிலையில் வைத்துப் பொருத்தி, இலைகளை முட்டையின் வெள்ளைக் கருவுடன் அரைத்து அந்தப் பகுதியில் வெளிப்பூச்சு தந்தால் பத்தே நாளில் எலும்புகள் ஒட்டிக்கொள்ளும். அசையாமல் வைக்க மேலும் கீழும் மூங்கில் குச்சியை வைத்து அதன்மீது துணியைக் கட்டி, அதைச் சுற்றியும் கருப்பு உளுத்தம் மாவுடன் சேர்த்து அரைத்த இலைப் பூச்சைப் பூசிவர குணமாகும். சுண்ணாம்பு சத்து நிறைந்த இச்செடியின் கசப்பான இலைகளைத் தைலமாகவும், கஷாயமாகவும் பயன் படுத்தலாம்.
சுண்ணாம்பு சத்து உடலில் அதிகரிக்க நம் உணவுதான் மருந்து. முருங்கை பிரண்டை முடக்கறுத்தான் ராகி நெல்லி பூசணி என பல உண்டு.
-எஸ்.சந்திரசேகர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக