ஓம் நமசிவாய 🕉️ 🌿
சந்திரமௌலி
சந்திரமோகன்
சந்திரஹாசன்
சந்திரசூடன்
சந்திரவதனன்
சந்திரசேகர்
இப்பெயர்கள் என்ன? என் முற்பிறவிகள் முதல் இப்பிறவிவரை அந்தந்தப் பிறவியில் பெற்றோர் எனக்குச் சூட்டிய நாமகரணம். 5-6 ஆம் நூற்றாண்டில் குரு போகரின் அன்பான பராமரிப்பில் அடியேன் இருந்தபோது என் பெயர் சந்திரமௌலி. அன்று முதல் அவர் தன் இடக்கையால் என் வலக்கையை இறுகப் பற்றியே வருவது என்பது ஸ்ரீ கிருஷ்ணர் - அர்ஜுனன் உறவை நினைவூட்டியது.
சந்திரமௌலி என்ற பெயர்தான் அவருக்கும் பிடித்தமான பெயரென்று அண்மையில் அறிந்தேன். இப்பிறவியில் பிரதோஷம் அன்று மதியத்திற்குப்பின் பிறந்த எனக்கு நாமகரணம் செய்யுமன்று சந்திரமௌலி/ சந்திரசேகர் என்ற இந்த இரண்டில் ஒன்றுதான் முடிவானதாம். ஆக பெயர் தேர்வானதும்கூட இறைவன் திருவுளப்படியே நடந்துள்ளது.
போகர் முதல் கண்ணப்ப நாயனார்வரை குருமார்கள் பிறவி தோறும் அமைந்தனர் என்பது பெரும் பேறு. பிரம்ம ரகசியத்தை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. 1500 வருடங்களுக்கு முன் குரு போகநாதரிடம் எப்படி வந்து சேர்ந்தேன்? அதை இன்னும் எனக்குத் தெரியப்படுத்தவில்லை. தெரிந்தபின் சொல்கிறேன். சிவசித்தம் 🙏
-எஸ்.சந்திரசேகர்
