About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 7 மே, 2016

நீதியரசரும் சித்த வைத்தியரும்


நீதிபதி வி.பலராமையா என்பதைவிட 'வைத்திய ரத்னம்' டாக்டர் பலராமையா என்றால் அனைவருக்கும் தெரியும். இவர் பல வைத்திய நூல்களை இயற்றியுள்ளார். இவரே காயகற்பம் தயாரித்து உண்டவர். அதன்பிறகு சில மாதங்களில் அவர் உடலில் நடந்த மாற்றங்கள் என்ன என்பதை சொன்னார். நீண்டநாள் வாழ்ந்தவர்.
நான் சிறுவனாக இருந்தபோது இவர் இல்லத்திற்கு 1980ல் என் பாட்டனரோடு ஒரு சமயம் அரும்பக்கத்திற்கு சென்ற ஞாபகம் இருக்கிறது. என் பாட்டனார் கட்டட பொறியாளர் என்றாலும் சித்த வைத்ய குடும்ப பின்னணி கொண்டவர். சில வைத்ய முறைகளை பற்றி இருவரும் நீண்டநேரம் பேசிக்கொண்டனர். அவர் தாய் மொழி தெலுங்கு. வைத்யன் நல்லவித மருந்துகளை ஒருவருடைய நாடிபார்த்து, தேகம் பார்த்து, ஆராய்ந்தபின் தரவேண்டும். எல்லாமருந்துகளும் எலோருக்கும் ஒவ்வாது என்பார். 'நே இச்சின மாத்ரா வைகுண்ட யாத்ரா' என்று இருக்ககூடாது என்று தமாஷ் செய்வார்.
அவர் வாழ்ந்த வீட்டில் இன்றும் ஒரு பதிப்பகம் உண்டு. 'அருள் ஜோதி பதிப்பகம், 10, ஜட்ஜ் பங்களா, அரும்பாக்கம், சென்னை 600106'. இவருடைய நூல்களை இந்த பதிப்பகம்தான் வெளியிட்டது. அவருக்குப்பின் இன்று அவருடைய சந்ததியினர் சித்த வைத்யா தொழில் செய்வதாக அறிந்தேன். அவர் எழுதிய நூல்களின் பட்டியல் கொடுத்துள்ளேன். சித்த மருத்துவத்தில் விருப்பமுள்ளவர் அதை வாங்கி பயன்பெறவும். பாடல்களும் விளக்கமும் உண்டு. நூல் விபரம்:
-----------------
1.சித்தர் மெய்ப்பொருள்
2.அகத்தியர் 12000 தொகுப்பு
3.வாதவைத்தியத்துக்காதி
4.பதார்த்த குண போதினி
5.சாகாக்கலை
6.சித்தர் கைகண்ட மருந்து
7.உங்கள் வீட்டில் சித்தர் மருந்து
8.கடவுளும் மோட்சமும்
9.முப்பு குரு (Elixir of life)
10.பொன் மொழிகள் ஆயிரம்
11.அகத்த்தியர் அந்தரங்க தீட்சாவிதி
12.சித்த மருந்து செய் பெரு முறைகள்
13.அனுப சித்த வைத்திய முறைகள்
14.THE GREATNESS OF SIDDHA MEDICINES
15.சரீரத்துவம்
16.உயிர் நீட்டும் மூலிகைகள்
17.புற்று நோயை குணபடுத்தலாம்
18.அமுத கலசம் (Bowl of nectar)
19.வள்ளலார் சித்தியா மரணமா?
20. நீடுழி வாழ வழி
----------------------
இங்கே சில அன்பர்கள் பல மூல நூல்களை ஆரியர்/திராவிடர் யாரோ மறைத்து விட்டதாய் முந்தைய பதிவுகளில் சொல்லியிருந்தார். சுமார் 60 வருடங்கள் முன்பு வரை அந்நூல்கள் இருந்தது. பிறகு அவை எல்லாம் அச்சிலிருந்து நிறுத்தப்பட்டது. சில நூல்கள் சில ஆண்டுகளுக்கு முன்னமே அப்போதைய சர்கார்/ அரசாங்கத்தால் முடக்கப்பட்டது என அறிந்தேன். சில நூல்கள் பாதிதான் அச்சில் உள்ளது, சிலது தொடர்ச்சியாக இல்லை. தஞ்சை நூலகத்திலும் இல்லை.
நபர்கள் அதை துஷ்ப்ரயோகம் செய்ய வாய்ப்புண்டு என்பதாலும் அதில் சில நவீனகால விஷயங்கள் பொதிந்துள்ளபடியால் அவற்றை தவறாகவும் ஆபத்து விளைவிக்கவும் பயன்படுத்தலாம் என்பதை கருதி பொதுசுற்றிலிருந்து நீக்கப்பட்டது என அறியமுடிந்தது. வேறு காரணங்கள் தெரியவில்லை.
அகத்தியர் 12000, போகர் 12000 போன்ற நூல்கள் இப்பட்டியலில் உண்டு. எங்கேனும் சித்தர் குடும்பத்தில் இதன் பிரதி பத்திரமாகவும் ரகசியமாகவும் இருக்கும். அவ்வளவு ஏன், இலங்கை, சீனா, ஜெர்மனிலும் இந்த அறிய நூல்களின் பிரதி போயிள்ளது. மூலநூலின் பிரதியா அல்லது அவற்றில் இடை செருகல்கள் உள்ளதா, திருத்தி அமைக்கப்பட்டதா என்பதை அறியேன்.
காரணம் தெரியாத வரை, நம் வாந்தி பேதி மலச்சிக்கலுக்குகூட ஆரியர் / திராவிடர் மீது பழிபோடுவது நமக்கு சௌகரியமாக உள்ளது. சிரிப்புதான் வந்தது..!

வியாழன், 5 மே, 2016

சுவாமி கணேஷா நந்தகிரி

இவர் சுசீந்திரத்தில் பிறந்தவர. பிறகு 4 வயதில் ஒரு மராட்டிய குடும்பம் இவரை தத்து எடுத்தது. அன்று முதல் ஷிர்டி சாய்பாபாவிடமே தஞ்சமானவர். அவரிடம் விளையாடி, மிட்டாய் வாங்கி, அடியும் வாங்கியவர். நூறாண்டுகளுக்கு முன் பாபா தன்னுடைய குடலை வாய்வழியே வெளியில் எடுத்து அலசி வேலி மீது காயப் போடுவதையும், மீண்டும் விழுங்கியதையும் நேரில் கண்டவர். பாபாவின் கைப்பிடித்து நடந்து போனவர். பாபா தன்னுடைய கௌபீனத் துணியை இவர் மீது வீசியதை இறுதி வரை பாதுகாத்து வந்தார். அவர் கொடுத்த ஒரு ரூபாய் நாணயத்தை பூசித்து வந்தவர். இறுதிவரை இவர் கண்ணாடி, பல்செட்டு அணியவில்லை, குரல் கணீரென்றே இருந்தது, மினுமினுவென தோல் சுருக்கமில்லாமல் இருந்தது. எந்த சிரமமும்மின்றி சாதாரண செல் போன்கூட உபயோகித்தார் என்றால் பாருங்களேன்.
இவர் சென்ற ஆண்டு தன்னுடைய 107வது வயதில் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மதுரமங்கலம் கிராமத்தில் தானே விருப்பபட்டு இடம் தேர்வு செய்து 29-4-2016 அன்று ஜீவ சமாதி ஆனார். ஏன் இந்த இடம் வேண்டும் என்று மெய்யன்பர்கள் கேட்டதற்கு "எனக்கு முன்னே பாபா இங்கு வந்து விட்டார். நானும் அவருடன் இருக்க வேண்டும். ஷீரடிக்கு அடுத்தபடியாக இங்கு வரவுள்ள கோயில் பிரசித்தமாகும்" என்றாராம். சமாதி மற்றும் பாபாவின் கோயில் கட்டுமான வேலைகள் பெரிய அளவில் ரூ.19 கோடி செலவில் திட்டமிட்டுள்ளார்கள்.
Image may contain: 1 person

அவர் பங்குகொண்ட மூன்றாவது கண் தொலைக்காட்சி நிகழ்ச்சி.
https://www.youtube.com/watch?v=lmuutStf8oA
https://www.youtube.com/watch?v=9gKKEE_pnEY

Image result for swami ganesha nandhagiri, madhuramangalam samadhi