இவர் சுசீந்திரத்தில் பிறந்தவர. பிறகு 4 வயதில் ஒரு மராட்டிய குடும்பம் இவரை தத்து எடுத்தது. அன்று முதல் ஷிர்டி சாய்பாபாவிடமே தஞ்சமானவர். அவரிடம் விளையாடி, மிட்டாய் வாங்கி, அடியும் வாங்கியவர். நூறாண்டுகளுக்கு முன் பாபா தன்னுடைய குடலை வாய்வழியே வெளியில் எடுத்து அலசி வேலி மீது காயப் போடுவதையும், மீண்டும் விழுங்கியதையும் நேரில் கண்டவர். பாபாவின் கைப்பிடித்து நடந்து போனவர். பாபா தன்னுடைய கௌபீனத் துணியை இவர் மீது வீசியதை இறுதி வரை பாதுகாத்து வந்தார். அவர் கொடுத்த ஒரு ரூபாய் நாணயத்தை பூசித்து வந்தவர். இறுதிவரை இவர் கண்ணாடி, பல்செட்டு அணியவில்லை, குரல் கணீரென்றே இருந்தது, மினுமினுவென தோல் சுருக்கமில்லாமல் இருந்தது. எந்த சிரமமும்மின்றி சாதாரண செல் போன்கூட உபயோகித்தார் என்றால் பாருங்களேன்.
இவர் சென்ற ஆண்டு தன்னுடைய 107வது வயதில் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மதுரமங்கலம் கிராமத்தில் தானே விருப்பபட்டு இடம் தேர்வு செய்து 29-4-2016 அன்று ஜீவ சமாதி ஆனார். ஏன் இந்த இடம் வேண்டும் என்று மெய்யன்பர்கள் கேட்டதற்கு "எனக்கு முன்னே பாபா இங்கு வந்து விட்டார். நானும் அவருடன் இருக்க வேண்டும். ஷீரடிக்கு அடுத்தபடியாக இங்கு வரவுள்ள கோயில் பிரசித்தமாகும்" என்றாராம். சமாதி மற்றும் பாபாவின் கோயில் கட்டுமான வேலைகள் பெரிய அளவில் ரூ.19 கோடி செலவில் திட்டமிட்டுள்ளார்கள்.
அவர் பங்குகொண்ட மூன்றாவது கண் தொலைக்காட்சி நிகழ்ச்சி.
https://www.youtube.com/watch?v=lmuutStf8oA
https://www.youtube.com/watch?v=9gKKEE_pnEY
https://www.youtube.com/watch?v=lmuutStf8oA
https://www.youtube.com/watch?v=9gKKEE_pnEY
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக