போகர் அருளிய 'ஜெனன சாகரம்' என்ற நூலில் பல சூட்சுமங்கள் நிறைந்துள்ளன. உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன்.
சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் சுவடியிலிருந்து முதன் முதலில் மூலப்பாடல் தொகுப்பை அச்சிட்டவர் காலஞ்சென்ற பி.ராமச்சந்திரன் அவர்கள் (தாமரை நூலகம்).
அதன்பின் நூலுக்கு முதல்முறையாக விளக்கவுரைச் சுருக்கத்தை அச்சிட்டவர் திரு. நல்லதம்பி (கற்பகம் புத்தகாலயம்). தானியங்கி அச்சு யந்திரத்தைக் கண்டுபிடித்து வடிவமைத்த சித்தரே தன் நூலுக்கான விளக்கவுரையை எப்படிபட்டவர் யந்திரத்தில் அச்சிட்டு வெளிக்கொண்டு வருவார் என்பதை, பதிப்பகம்-பதிப்பாளர் பெயரின் மறை பொருளை இந்நூலின் வாழி-விருத்தத்தில் தெளிவாகச் சொல்லிவிட்டார். இங்கே பூமாது = கற்பகவல்லி=கற்பம், புனிதன்= நல்லவன்= நல்லதம்பி. மேலோட்டமாக விருத்தப்பாடலை வாசித்தால் இதன் நுட்பம் புலப்படாது. இதை ஏன் மற்ற பத்திப்பாளர்கள் எடுத்துச் செய்யவில்லை? ஏனென்றால் அவர்களுக்குப் பிராப்தமில்லை.
நான் வளைவு போட்ட வாக்கியத்தின் பொருள்: "இந்த நூல் விளக்கத்தின் கருத்தை உலகத்தோர் அறியச்செய்ய யந்திரத்தில் அச்சிட்டு வெளிக்கொண்டு வரும் அந்த மகத்துவ புனிதன் வாழ்க, இதை படித்த யாவரும் வாழக."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக