இது வேலைக்கு ஆகுமா? வர்த்தகர்களும் மக்களும் திடீரென தங்களை மாற்றிக்கொள்ள முடியாததற்கு வாழ்க்கைச் சூழல்தான் காரணம். கடந்த 25 ஆண்டுகளில் மாறியதை மீண்டும் உதறிவிட்டு வீட்டையே புரட்டிப்போட சாத்தியப்படுமா?
படத்திலுள்ளவை எல்லாம் இன்னும் எங்கள் வீட்டில் நடைமுறையில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. எண்ணெய் தூக்கு, பனையோலை விசிறி, இலைச் சருகு, வாழையிலை தொன்னை, மெட்டல் டார்ச், புடைக்க முறம், கூஜாவில்தான் 92வரை பால் வாங்கி வந்தேன், என் பாட்டி பித்தளை சோப்பு டப்பா வைத்திருந்தார். பயன்படுத்தாததை பரண்மீது போட்டு வைத்துள்ளோம். மீண்டும் அவை பிரவேசிக்கத் தயாராகிறது.
இன்றைக்கு பாக்கு மட்டை பொருளைவிட, மந்தார / வாழை இலை பொருட்களே விலை மலிவு. ஊருக்குப் போகும்போது கூஜாவில் போய் நீர் நிரப்பிக் கொள்வது சுகாதாரம் இல்லை. நாம் அன்றாடம் பாக்கெட்டில் இங்க் ஊற்றிய Fountain பேனாவை கொண்டுபோக முடியுமா? சூப்பர் மார்கெட்டில் இனி எல்லாமே மூட்டையில் விற்பனை ஆகவேண்டும். பொறி்கடலை கடையில் முன்பெல்லாம் வண்ணம் பூசிய கூடைகள் இருந்தது போல் மீண்டும் வரவேண்டும். அரிசி இனி சாக்கு மூட்டையில்தான் வரவேண்டும். பால் பாக்கெட், மற்றும் இதர PET பாட்டில் கண்டைனர்களை உடனே அப்புறப்படுத்த முடியுமா? இந்த திடீர் மாற்றத்தால் பல பொருட்களின் விலை உயருமா குறையுமா? மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருள் மட்டும் பரவாயில்லையா? அது மட்டும் எதற்கு?
ஒரு தலைமுறை முழுக்க பிளாஸ்டிக்கோடு வளர்ந்து விட்டோம். இனி எல்லாவற்றையும் மாற்ற தனியொரு சூத்திரம் இயற்ற வேண்டும். நவீனம் போய் இனி மீண்டும் பாரம்பரிய முறைகளை எல்லாவற்றிலும் கடைப்பிடிக்க சாத்தியமா?
ஆரோக்கிய உணவை மட்டுமே உண்ணுங்கள் என்று சொல்லிவிட்டு மரபணு மாற்றிய பழங்கள், உரம் போட்ட தானியங்கள், காய்கறிகள்தான் உண்கிறோம். அஸ்திவாரமே ஆடிவிட்டது, இப்போது விழித்துக் கொண்டு என்ன செய்ய? நாள்பட்ட ஆமம் நீங்க பேதி போவதுதான் ஒரே வழி. அதற்கு உடலை தயார் செய்ய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக