ஒரு சூரியன் மட்டும் இருப்பது போலவும், முற்றிலும் அது எரிந்து பஸ்மம் ஆகிவிட்டால் எதிர்காலத்தில் பூலோக உயிர்களுக்குத் தேவையான வெளிச்சமும் வெப்பமும் கிடைக்க என்ன செய்ய என்று விஞ்ஞானிகள் கவலைப்படுகிறார்களாம். சித்தர்களின் ஆய்வுப் பாடல்களைப் படித்துப் பொருள் அறிந்தால், விஞ்ஞானிகள் பிதற்றவோ அச்சப்படவோ வேண்டாம். 🤔
'துவாதச ஆதித்யர்களில் தான் விஷ்ணு' என்று பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார். சிவன் தன்னுடைய வலது கண்ணில் சூரியனையும், இடது கண்ணில் சந்திரனையும் வைத்துள்ளதால், சூரியனை அழிவற்றவனாகவே கருதவேண்டும்.
ஒரு மஹாயுகம் என்பது நமக்கு 4,320,000 ஆண்டுகள், அதாவது 12000 பிரம்மதேவர் ஆண்டுகள் என்பதாம். 12 ராசிகளுக்கு வீதம் 12 சூரியன்கள் சுழற்சியில் வந்து போனால், தாராளமாக ஒவ்வொருவரும் 1000 தேவ ஆண்டுகள் பூரணமாக ஒளி வீசலாம். அவ்வப்போது தங்களுடைய ஒளிரும் பணி முடிந்ததும் அவர்கள் சிவ பூஜையும் யாகமும் செய்து சக்தியைத் தொடர்ந்து கூட்டுகிறார்கள். ஆதித்ய மண்டலத்தில் என்ன நடக்கிறது என்பதை அங்கே போய் போகர் பார்த்துள்ளார். ஆக ஆதித்யர்க்கு முடிவில்லை.
அதனால்தான் கோயில் கல்வெட்டுகளில் நம் மன்னர்கள் தம் ஆணைப்படி ஏற்படுத்தும் பூஜா கட்டளைகளும், திருவுண்ணாழியில் சுவாமிக்கு விளக்கு எற்றுவதையும் 'சூரியசந்திரர் உள்ளவரை தொடரவேண்டும்' என்றே வடித்தனர்.
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக