ஒரு வாசகர் அலைபேசி தொடர்பில் வந்தார். தன்னுடைய வியாபாரம் மற்றும் குடும்பத்தைப் பற்றிச் சொன்னார்.
அப்போது அவர் தனக்கு ஒரு மகன் உள்ளதாகச் சொன்னார்.
"சார், அவங்க படிக்கிறாங்க" என்றார்.
"ஓ வெரிகுட்... காலேஜ் படிக்கிற வயசுல பெரிய பையனா?" என்றேன்.
"ஐயோ இல்லீங்க... இப்பதான் மூணு வயசு ஆகுது.. ப்ளே ஸ்கூல் போறாரு" என்றார்.
"ஏங்க... அவன் குழந்தை.. அவனோடு கொஞ்சிப் பேசுற வயசு.. இப்ப மரியாதை தரணும்னு அவசியமில்லை. நான்கூட ஏதோ டிகிரி படிக்கிற பையன்னு நினைச்சுட்டேன். நீங்க செயற்கையான மரியாதை தந்து பேசினா ஒரு தாய்/தகப்பனா அந்தக் குழந்தையிடம் அன்னியோன்யமாகப் பழக முடியாது. உணர்வுகள் மட்டுப்படும். உங்களை அறியாமலே இடைவெளி வந்திடும்.. அவன் உங்க தோளுக்கு வளர்ந்தப்புறம் நீங்க ஐயா/தம்பி/ சார்னு எப்படியோ மரியாதை கொடுத்துக்கலாம். வளர்ந்தப்புறம் யாருக்கு எந்த வயசுல மரியாதை தரணும்னு அவனுக்கே தெரிய வரும். இப்போ அவனைக் குழந்தையா பாவிச்சுக் கொஞ்சிப்பேசி விளையாடுங்க. அவனோட இந்தப் பருவம் சீக்கிரம் கடந்து போயிடும்" என்றேன்.
"இப்படித்தான் பேசணும் போலனு ஊர்ல எல்லாரும் பழக்கப்படுத்திட்டாங்க சார்" என்றார். ஐயோ பாவம்!
நாம் வளர்ந்த காலத்தில் பாட்டி/தாத்தா, அம்மா/அப்பா எல்லாரும் மிக இயல்பாகப் பேசி வந்தார்கள். ஆனால் இன்றைய சமுதாயத்தின் போக்கு இப்படி ஆகிவிட்டது! 🥺🧐
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக