மணமான பெண்களுக்கு மார்பகம் மற்றும் கருப்பையில் புற்றுநோய் வருவது இக்காலத்தில் அதிகரித்துவிட்டது. இராமாயணம் காலம் முதல் கடந்த நூற்றாண்டுவரை சுமங்கலிப்பெண்கள் அனைவரும் தாலி அணிந்து வந்துள்ளனர். மஞ்சள் கயிறு அணிவது என்பது நம் சம்பிரதாயம் என்றாலும் அது மருத்துவ ரீதியாக முக்கியத்துவத்தைப் பெறுகிறது என்பதை இக்காலப் பெண்கள் அறிவதில்லை.
திருமணத்தில் தாலிக்கயிறு கட்டுவதோடு சரி. அதன்பிறகு அடுத்த ஓராண்டுக்குள் அது கழட்டி வைக்கப்படுகிறது. தாலியில் தொங்கும் திருமாங்கலியத்தைச் சுமார் நான்கைந்து பவுன் எடையுள்ள தங்கச்சங்கிலியில் கோர்த்துப் போட்டுக்கொள்கின்றனர். தாலிக்கயிறு கழுத்தில் இருந்தால் “ஐயோ பாவம், பரம ஏழை போலிருக்கு” என்று நினைக்கும் காலமிது.
நான் அறிந்தவரை முன்பெல்லாம் தாலியைத் தொப்புள்வரை தொங்கவிடும் பழக்கம் இருந்தது. ஆனால் அது காலப்போக்கில் நீளம் குறைந்து முற்றிலும் காணாமலே போய்விட்டது. மஞ்சள் தாலிக்கயிறு கட்டுவதே உபத்திரவம் என்றால் தாலம் பனையோலையைக் கட்டிகொண்ட அக்காலத்துப் பெண்களை என்ன சொல்வார்களோ?
தாலிக்கயிற்றுக்கு வாரம் இருமுறையேனும் மஞ்சள் அரைத்துப்பூசியும், மேனிக்குத் தேய்த்துக் குளித்தும் வந்தனர். இது எதற்கு? மங்கலப் பொருள் மட்டுமல்ல, புற்றுநோய் மற்றும் சருமநோய் வராமல் தடுக்கத்தான். தடியான மஞ்சள் சரடு மார்பகங்கள் மேல் எப்போதும் உராய்ந்துகொண்டே இருப்பதால் புற்றுநோய் என்பது கேள்விப்படாத ஒன்றாகும். அதுபோக அக்காலத்தில் குறைந்தது ஐந்து முதல் எட்டு குழந்தைகள் பெற்றும், பால் கொடுக்கும் காலம் நீடித்திருந்ததாலும் புற்றுநோய் என்பது வரவேயில்லை. கருப்பையும் பிரச்சனைகளின்றி இருந்தது என்பது உண்மை. மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சை ஆனபின் தாலிக்கயிறு மீண்டும் கழுத்தில் ஏற நீண்ட காலமாகும், கீமோ சிகிச்சையின் பின்விளைவால் தலைமுடி கொட்டி மொட்டையாகிறது. ஆக ஒரு கைம்பெண்ணாகவே தோற்றத்தை ஆக்கிவிடுகிறது.
நான் அறிந்த ஒரு வயதான பாட்டி அக்காலத்தில் பதினாறு வயதில் திருமணமாகிப் பன்னிரண்டு குழந்தைகள் பெற்றாள் என்றும், அதில் மூன்று குழந்தைகள் இறந்தன என்றும் கேள்விப்பட்டுள்ளேன். ஆக அந்தப் பாட்டி பன்னிரண்டு வருடங்கள் வயிற்றிலும், பன்னிரண்டு வருடங்கள் இடுப்பிலும் சுமந்தே சர்வீஸ் போட்டுவிட்டாள்’ என்று கிண்டல் அடிப்பேன். நான் பார்த்துள்ள அக்கிழவி மூப்பு காரணமாக இறந்தாளே தவிர பெரிய வியாதி எதுவுமில்லை.
ஆனால் இக்காலத்தில் பிரத்யேகமாகக் கயிறு இல்லாததால் திருடனுக்குச் சங்கிலியுடன் திருமாங்கலியமும் போனஸ் வேட்டையாக அமைந்துவிடுவது அவனுடைய அதிர்ஷ்டம். எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் அவ்வீட்டுப்பெண் கணவனுடன் வெளிநாட்டுக்குப் போகவேண்டி இருப்பதால் தன் மாமியாரின் அனுமதியுடன் கல்யாணமான சில மாதங்களிலேயே நாகரிகம் கருதி தாலியைக் கழட்டி குங்குமத்தையும் எடுத்துவிட்டாள். சந்தோஷம்! அவள் காலில் மெட்டியாவது இருந்ததாவொனப் பார்க்கத் தவறிவிட்டேன்.
அப்படிப்பார்த்தால் மஞ்சள் தாலிக்கயிறு அணியும் பழக்கமில்லாத மற்ற மதத்தினர்களுக்கு வரணுமே என்று நீங்கள் நினைக்கலாம். ஆம் உண்மைதான்! அவர்களுக்கும் வருகிறது. மருத்துவ பரிசோதனையில் அவர்களுக்கும் invasive carcinoma பரவலாக உள்ளது தெரிகிறது. கொரோனா தடுப்பூசிக்குப் பிறகு உலகெங்கும் நோய் தாக்கம் என்பது அதிகரித்துள்ளது கண்கூடு.
மஞ்சள் பூசிய கயிற்றையும் தாண்டி எப்படியோ மரபணு வழியாகவும், ஹார்மோன் சமநிலை இல்லாமையாலும் புற்றுநோய் தாக்கம் வந்தால் அது கர்மா/ விதி என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். அகத்தியர் கன்மகாண்டம் நூலில் இதைப்பற்றி விவரிக்கும்போது “வாரணமாய் நடத்துவித்த கன்மத்தாலே வந்ததடா கைக்கடங்கா நோய்களெல்லாம் மனிதர்க்காமே” என்கிறார்.
-எஸ்.சந்திரசேகர்

