About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

நூலை யார் பதிப்பிக்க வேண்டும்?


போகர் அருளிய 'ஜெனன சாகரம்' என்ற நூலில் பல சூட்சுமங்கள் நிறைந்துள்ளன. உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன்.

சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் சுவடியிலிருந்து முதன் முதலில் மூலப்பாடல் தொகுப்பை அச்சிட்டவர் காலஞ்சென்ற பி.ராமச்சந்திரன் அவர்கள் (தாமரை நூலகம்).

அதன்பின் நூலுக்கு முதல்முறையாக விளக்கவுரைச் சுருக்கத்தை அச்சிட்டவர் திரு. நல்லதம்பி (கற்பகம் புத்தகாலயம்). தானியங்கி அச்சு யந்திரத்தைக் கண்டுபிடித்து வடிவமைத்த சித்தரே தன் நூலுக்கான விளக்கவுரையை எப்படிபட்டவர் யந்திரத்தில் அச்சிட்டு வெளிக்கொண்டு வருவார் என்பதை, பதிப்பகம்-பதிப்பாளர் பெயரின் மறை பொருளை இந்நூலின் வாழி-விருத்தத்தில் தெளிவாகச் சொல்லிவிட்டார். இங்கே பூமாது = கற்பகவல்லி=கற்பம்,  புனிதன்= நல்லவன்= நல்லதம்பி. மேலோட்டமாக விருத்தப்பாடலை வாசித்தால் இதன் நுட்பம் புலப்படாது. இதை ஏன் மற்ற பத்திப்பாளர்கள் எடுத்துச் செய்யவில்லை? ஏனென்றால் அவர்களுக்குப் பிராப்தமில்லை.

நான் வளைவு போட்ட வாக்கியத்தின் பொருள்: "இந்த நூல் விளக்கத்தின் கருத்தை உலகத்தோர் அறியச்செய்ய யந்திரத்தில் அச்சிட்டு வெளிக்கொண்டு வரும் அந்த மகத்துவ புனிதன் வாழ்க, இதை படித்த யாவரும் வாழக."



திங்கள், 18 ஏப்ரல், 2016

போகர் ஜெனன சாகரம் - Bogar JENANA SAAGARAM


போகர் ஜெனன சாகரம் (பதவுரை சுருக்கம்)    பக்கங்கள் -80   ரூ.60/-
வெளியீடு: கற்பகம் புத்தகாலயம், 4/2  சுந்தரம் தெரு, தி.நகர், பாண்டி பஜார், 
சென்னை  6௦௦௦17  Ph: 044- 24314347



இந்நூலை ஆன்லைனில் பெற http://www.marinabooks.com/detailed?id=4%205010


சனி, 16 ஏப்ரல், 2016

போகர் சித்த சக்தியை இழந்தாரா?

"மூலிகைகளின் ஆய்விற்கு சீனாவிற்குச் சென்ற தமது குரு நெடு நாட்களாகியும் திரும்பாதது கண்டு கவலை அடைந்த புலிப்பாணி குருநாதரைத் தேடி ஆகாய மார்க்கமாய் புறப்பட்டுச்சென்று சீனாவில் கண்டறிந்து சக்தியிழந்த நிலையில் இருந்த அவரை மீட்டு தமது முதுகின் மீது ஏற்றிக்கொண்டு
ஆகாய மார்க்கமாக தங்களது இருப்பிடமான பழனி மலை அருகிலுள்ள "கன்னி வாடி" மலையை வந்தடைகிறார். தனது குருவான போகர் சகல விதமான சித்திகளின் ஆற்றலை இழந்து சாதாரண மனிதனைப் போல் இருப்பதைக்கண்டு புலிப்பாணி துயரமுற்று கண்ணீர் விட போகர் அவரைத்தேற்றி
சீடனே !எனது அருளாலும்,ஆசியாலும் உனக்கு அஷ்டமா சித்திகளும் கைவரப்பெற்றுள்ளன.நீ அவற்றை எனக்கு குருவாக இருந்து போதித்து விட்டால் நான் மீண்டும் எல்லாம் வல்ல சித்தனாக ஆகி விடுவேன் என்று சொன்னாராம். அதன்படி முருகன் சிலை வடித்து அந்த தண்டத்தையே தன் குருவாக பாவித்து அதற்கு உபதேசம் செய்வதுபோல் செய்து, குரு போகருக்கு எல்லாமே புலிப்பாணி சொல்லிகொடுத்தார்." இதுதான் அந்த செய்தி..

போகர் சீனத்தில் சக்தி இழந்ததையோ, சீடர் புலிப்பாணி அவருக்கு குரு உபதேசம் செய்ததைபற்றியோ எங்கேனும் சித்தர் போகர் ஒரு இம்மிகூட தன் நூலில் குறிப்பிடவில்லை..ஆனால் இதெல்லாம் இணையத்தில் வலம் வந்த பிறகு அதுவே ஆதாரக் குறிப்பாக சில கட்டுரைகளிலும் பல சமீபத்திய நூல்களிலும் வந்து இன்று வரை நிலைக்கிறது. அப்படி இருந்திருந்தால் கிபி2ல் அவர் சீடரான மகாவதார் பாபாஜி இந்த உண்மையை சொல்லி இருப்பாரே! போகர் அங்கே சாதாரணமான ஒரு முதியவர் உடலில் கூடுவிட்டு கூடு பாய்ந்து அதற்கு சக்தி கொடுத்து குண்டலினியை தட்டி ஏற்றினார். இதை அகத்தியர் ஒரு சமயம் போகரிடமே சொல்லி "பூமிதனில் கண நேரம் தங்கா சித்து, பரங்கியர் தேசத்தில் போகன் என பெயர்கொண்டாயே" என்று கூறினார். தன்னுடைய போகர் ஜெனன சாகரத்திலும் இது பற்றி ஏதும் சொல்லவில்லை.. கோரக்கரும் இதைப்பற்றி சந்திரரேகையில் சொல்லவில்லை.  

 Image result for கிரியா பாபாஜி
அப்படி என்றால் பழனி நவபாசான சிலை செய்வதற்கு முன்பாகவே பெரிச்சியூர் பைரவர் சிலை, போகர் கேசம் -பூம்பாறையில் ஒரு முருகன் சிலை என்று தசபாசானம், பஞ்சபாசானம் போன்ற கலவையில் ஒரு முன்னோட்டமாக செய்தது எதற்கு? அப்போது மட்டும் அவருக்கு சித்த சக்தி இருந்ததா? காலத்தால் பரவி வரும் கதைகள், தல புராணத்தோடு இணைந்து விடுவதால் அதுவே ஒரு புதிய பரிணாமம் எடுத்து நிகழ் காலத்திற்கு ஆதாரமாக நின்றுவிடுகிறது. சித்தர்களின் நூலாதாரங்களை மட்டுமே நாம் நம்பிடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

ஆகவே, லாவோட்சு என்ற சீன அறிஞர் அங்கே பன்னிரண்டாயிரம் வருடங்கள் இருந்தார் என்பதை சீனத்து வரலாறும், தான் அத்தனை வருடங்கள் அங்கே இருந்ததாக போகர் தன் நூலிலும் சொன்னது ஒத்துப்போகிறது.. நினைத்த மாத்திரத்தில் திருமூலரும் காலங்கியும் இவருக்கு சக்தி தர இருக்கும் போது, புலிப்பாணி மூலம்தான் மீண்டும் கற்றார் என்பது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஆதாரமுமில்லை..  சீனத்தில் மூதறிஞர் லாவோட்சுவாக இருந்தது தன் குரு போகர்தான் என்ற பிற்பாடு உண்மையை உலகிற்கு சொன்னதே மகாவதார் 'கிரியா' பாபாஜிதான் . 

போகரும்-புலிப்பாணியும், தங்கள் எல்லா பிறவிகளிலும் குரு-சீடர் ரீதியில்தான் வந்துள்ளர்.. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஸ்ரீவீரப்பிரம்மேந்திரர் என்ற சமீபத்திய அவதாரம்வரை எங்குமே சிஷ்யன் (சித்தையா) தன் குரு வீரபிரம்மத்திற்கு கற்றுக் கொடுத்ததாய் எனக்குத்தெரிந்து நிகழ்வு இல்லை. இன்னும் ஆய்வு செய்ததில் பல ரகசியங்கள் புலப்பட்டது.. தான் போகராக இருந்து மூலிகைகள் பூநீறு வஸ்துக்களை கண்டறிந்த ஊர்களில் எல்லாமே தன் மறு பிரவேசங்கள் நிகழ்ந்துள்ளது என்பதே என் ஆய்வில் அறிந்தேன். 

வியாழன், 14 ஏப்ரல், 2016

The Dwaitha concept of Taoism


In my earlier post, I brought to light the scientific inventions of the eminent siddhar Bogar through his Sapthkaandam (Bogar 7000). After consuming elixir Bogar remained in samadhi for seven yugas (song:417), and came out to carryout his duties. Under instruction from his guru Kaalangi, he flew to China through Aagaya pravesa by having Gegana gulika in his mouth and hand that helped him to swiftly ascend to sky and fly. Having reached China, he learnt and practiced alchemy and medicine to help mankind. He had to apply one of the ashta siddhis parakaaya pravesa and lived in the body of a Chinese old man, henceforth came to be known as Laotzu.

Bogar understood that this new body will not withstand several years to live. He powered it through sufficient breathing exercise and consuming elixir (kayakalpa). Bogar kindled the kundalini shakthi at Moolaadhaara energy spot. This enabled him to make the Sakthi rise up through wavy motion to unify with shiva at the Sahasra chakra in skull. After this, Bogar @ Laotzu named himself as Bo-yang, the one who achieved the path of happiness. That means one who attained the Satchithaanantha state of bliss. This enabled him to live in China for several thousand years and continue with the work entrusted by his guru. He had high esteem for his guru Kaalangi and paramaguru Tirumoolar.

In Chinese version, the Shakthi- Shiva concept is the Yin-Yang.  This implies that matter exists with two equal and opposite energies that have control over each other. Since the matter has Dwaitha vasthu, he coined it Tao-Te that lead to Taoism. This is the religion founded by Laotzu. He is regarded to have been a disciple of Confucius who was an avatar of guru Kaalangi. The Dwaitha concept of Shiva-shakthi is Taoism. The arising fiery kundalini is the flying Dragon. (However, the Chinese history does not speak about Bogar or Kaalaangi.)



The Dragon
Got frustrated with the unethical ruling dynasty, Bogar @ Laotzu decided to leave China around 4BC and head to Meru (Himalayas) hill. At the request of the fort gate keeper, it is understood he composed Tao-Te Ching. Upon reading the work of my guru, I can say that it is the Chinese version of Tirukural, a Tamil work that speaks about the moral being and way of living. At the gate, Laotzu preached him and thus came out his famous works, Tao Te Ching.  

It is believed that Bogar remained in the Meru hill for several centuries and went on to compose 7000 verses called the Sapthakaandam. Around 2AD he had come to the south to carry out his desires. Bogar was the first guru of Mahavatar Babaji who was initiated to sidha yoga kriya while doing tapas in Kathirgaamam (Srilanka). He later sent him to sage Agasthiya to finish his yoga sadhana at Pothigali hills.

Mahavatar Babaji
Perhaps, one may wonder and raise doubt about the authenticity of Bogar as Laotzu. There are references to verses of sage Agasthya and Bogar in Tamil works through which we can establish a link.

After embracing Bogar at Pothigai hills (Tirunelveli district), sage Agasthya said:
My son, you flew to a distant land, learnt sadhana
 Awakened kundalini and gave yourself a name’

Siddha Bogar mentioned in his song in second kaanto:
“Awakened the moolaathaara, realized the sachithanandam,
 Called myself Bogar, a name very unique in this world;
 Lived in the land of Parangis for twelve thousand years
 Taught salt alchemy and elixir to the white skinned Chinese”

In my research on the works of Bogar, I found that he had no where mentioned about Laotzu. As per Chinese history, Laotzu took 13 earlier incarnations in China and each spanning between 800 to 1200 years on average, thus summing to 12000. Laotzu was the final avatar of his. Since all siddha songs have pseudo names (soonya sambaashai) encrypted in songs, it is difficult to decipher direct meaning without siddha’s blessing. The Chinese history tallies with Bogar’s narration, ‘Lived in the land of parangi (foreign) for 12000 years’.  No wonder that Hindu philosophy is the base of Chinese philosophy and Dwai-tha became Tao-te.

It was Mahavatar Babaji who disclosed the secret that Lao-tzu was none other than his guru siddhar Bogar.  My beloved guru siddha Bogar revealed his identity to me few years ago and thus I came into the siddha research.  I owe my success and wisdom I gained to the holy feet of my guru. 

(This essay was contributed to Canada (Ontario) based 'Sanskriti' magazine that speaks about Indian Culture, Heritage, Achievements, Practices and Values.)

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

New release - நூல் வெளியீடு



வாசகர்கள் இந்நூலை ஆன்லைனில் வாங்க, கீழ்கண்ட இணைப்பை கிளிக் செய்யவும்.   http://www.marinabooks.com/detailed?id=4%204959

வெள்ளி, 8 ஏப்ரல், 2016

கிருஷ்ணரின் இறுதிக் காலம்

குருக்ஷேத்திர யுத்தம் முடிந்த பின்னர் கிருஷ்ணன் துவாரகை திரும்பியிருந்தார். அங்கு அவர் முப்பத்தாறு ஆண்டுகள் தர்மத்தோடு ஆட்சி புரிந்தார். தன் பிறப்பின் நோக்கங்கள் அனைத்தும் முடிவடைந்து விட்டது எனும் எண்ணமும் கிருஷ்ணனுக்கு உண்டானது.
கிருஷ்ண பரமாத்மாவின் சுதர்சன சக்கரம் மறைந்து போனது. பாஞ்சஜைன்யம் எனும் கிருஷ்ணனின் சங்கும் இருக்குமிடம் தெரியாமல் போய்விட்டது. கிருஷ்ணனின் தேரும், பலராமனின் ஏர் ஆயுதமும் காணாமல் போயின. காந்தாரி இட்ட சாபம் பலிக்கத் தொடங்கிவிட்டதோ? கிருஷ்ணனிடம் சென்று பலரும் முறையிட்டனர். செய்த பாவங்கள் தீர மக்கள் தல யாத்திரை போய்வரும்படி கிருஷ்ணன் பணித்தான். மக்களும் கிளம்பினார்கள் ஒரு கிரகண சமயத்தில். அதுவே ஒரு கெட்ட சகுனமாக ஆகிவிட்டது.
தன் இனத்தின் அழிவு மட்டுமல்ல தன்னுடைய முடிவும் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்து கொண்டான் கிருஷ்ணன். மன அமைதி நாடி அருகிலுள்ள ஒரு வனத்தினுள் சென்றான். அங்கு நெடிது வளர்ந்திருந்த புல் வெளியொன்றில் சிறிது ஓய்வெடுக்க கால்நீட்டிப் படுத்தான். அவன் உடல் முழுவதும் புல்லினுள்ளும் பாதங்கள் மட்டும் ஒன்றின் மேலொன்றாக வைத்துப் படுத்தான்.
அப்போது அந்த வனத்தினுள் வேட்டைக்கு வந்தவன் புல்வெளியில் மான் ஒன்று தலையை நீட்டிப் படுத்திருப்பது போல காட்சியளித்த கிருஷ்ணனின் பாதங்களை நோக்கி முன்பு மீனின் வயிற்றிலிருந்து மீட்டு இரும்புத் துண்டு பொருத்திய அம்பை எய்தான். அது கிருஷ்ணன் பாதங்களைத் துளைத்துக் கொண்டு உடலின் உள்ளே சென்றது. கிருஷ்ணனுக்கு உடலின் பாதங்களைத் தவிர வேறு எங்கு அடித்தாலும் மரணம் நேராது. தரையில் படுத்திருந்த கிருஷ்ணனின் கால்கள் மானின் தலையைப் போல இருந்ததால் அதை நோக்கி எய்த அம்பு கிருஷ்ணனின் உயிரைக் குடித்தது. அன்று காந்தாரி கொடுத்த சாபம் இப்படி நிறைவேறியது.
அஸ்த்தினபுரத்தில் இருந்த அர்ஜுனனுக்கு கிருஷ்ணனின் மறைவு குறித்த தகவல் நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் வியாச பகவான் மூலம் தெரியவந்தது. துவாரகை நகருக்குள் கடல் புகுந்தது. அத்தோடு பெருமை மிகுந்த அந்த நகரம் கடலினுள் மூழ்கியது. “வில்விஜயா! நீங்கள் அனைவரும் இந்த மண்ணுலகத்தில் பிறவி எடுத்த நோக்கம் நிறைவேறிவிட்டது. கிருஷ்ணனின் நோக்கமும் நிறைவேறி விட்டது. உங்களிடம் இருந்த அஸ்திரங்கள் அனைத்துக்கும் இனி வேலை இல்லாமல் போய்விட்டது. அர்ஜுனா! நீயும் உன் சகோதரர்களும் இனியும் இந்த பூவுலகில் இருக்கத் தேவையில்லை. ஆகையால் நீங்களும் புறப்படுங்கள்” என்று ஆணையிட்டார்.
அது மாசி மாதம், கிமு.3102. துவாபர யுகம் முடிவுற்றது. கலியுகம் பிறந்தது. பாரெல்லாம் பாவங்களும் துன்மார்க்க நெறிகளும் துளிர்விட்டு எழ, தர்மம் என்னும் பசு ஒற்றைக் காலில் நின்று திண்டாடியது. யுகம் கலிபுருஷனின் கட்டுப்பாட்டில் வந்தது. இக் கலியை வதம் செய்ய திருமால் 'கல்கி' அவதாரமாக வருவார். 
Image may contain: 1 person   Image may contain: text
ஓவியர்: வட்டாடி பாபைய்யா
சித்தர் போகர் தன் ஜெனனங்களைப் பற்றி சொல்லும் போது.. தானே பஞ்சபாண்டவர்களாகவும் கிருஷ்ணனாகவும் தோன்றியதாகச் சொல்கிறார். ஒன்றே பலவாக இருந்து கதாபாத்திரங்கள் நிகழும் அதிசயத்தைப் பாருங்கள்.  போகரை தரிசித்தால் திருமாலை, முருகனை, இராமனை, கிருஷ்ணனை தரிசித்ததற்கு சமம். சித்தம் இருப்பின் வாய்க்கும்.