About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 16 ஏப்ரல், 2016

போகர் சித்த சக்தியை இழந்தாரா?

"மூலிகைகளின் ஆய்விற்கு சீனாவிற்குச் சென்ற தமது குரு நெடு நாட்களாகியும் திரும்பாதது கண்டு கவலை அடைந்த புலிப்பாணி குருநாதரைத் தேடி ஆகாய மார்க்கமாய் புறப்பட்டுச்சென்று சீனாவில் கண்டறிந்து சக்தியிழந்த நிலையில் இருந்த அவரை மீட்டு தமது முதுகின் மீது ஏற்றிக்கொண்டு
ஆகாய மார்க்கமாக தங்களது இருப்பிடமான பழனி மலை அருகிலுள்ள "கன்னி வாடி" மலையை வந்தடைகிறார். தனது குருவான போகர் சகல விதமான சித்திகளின் ஆற்றலை இழந்து சாதாரண மனிதனைப் போல் இருப்பதைக்கண்டு புலிப்பாணி துயரமுற்று கண்ணீர் விட போகர் அவரைத்தேற்றி
சீடனே !எனது அருளாலும்,ஆசியாலும் உனக்கு அஷ்டமா சித்திகளும் கைவரப்பெற்றுள்ளன.நீ அவற்றை எனக்கு குருவாக இருந்து போதித்து விட்டால் நான் மீண்டும் எல்லாம் வல்ல சித்தனாக ஆகி விடுவேன் என்று சொன்னாராம். அதன்படி முருகன் சிலை வடித்து அந்த தண்டத்தையே தன் குருவாக பாவித்து அதற்கு உபதேசம் செய்வதுபோல் செய்து, குரு போகருக்கு எல்லாமே புலிப்பாணி சொல்லிகொடுத்தார்." இதுதான் அந்த செய்தி..

போகர் சீனத்தில் சக்தி இழந்ததையோ, சீடர் புலிப்பாணி அவருக்கு குரு உபதேசம் செய்ததைபற்றியோ எங்கேனும் சித்தர் போகர் ஒரு இம்மிகூட தன் நூலில் குறிப்பிடவில்லை..ஆனால் இதெல்லாம் இணையத்தில் வலம் வந்த பிறகு அதுவே ஆதாரக் குறிப்பாக சில கட்டுரைகளிலும் பல சமீபத்திய நூல்களிலும் வந்து இன்று வரை நிலைக்கிறது. அப்படி இருந்திருந்தால் கிபி2ல் அவர் சீடரான மகாவதார் பாபாஜி இந்த உண்மையை சொல்லி இருப்பாரே! போகர் அங்கே சாதாரணமான ஒரு முதியவர் உடலில் கூடுவிட்டு கூடு பாய்ந்து அதற்கு சக்தி கொடுத்து குண்டலினியை தட்டி ஏற்றினார். இதை அகத்தியர் ஒரு சமயம் போகரிடமே சொல்லி "பூமிதனில் கண நேரம் தங்கா சித்து, பரங்கியர் தேசத்தில் போகன் என பெயர்கொண்டாயே" என்று கூறினார். தன்னுடைய போகர் ஜெனன சாகரத்திலும் இது பற்றி ஏதும் சொல்லவில்லை.. கோரக்கரும் இதைப்பற்றி சந்திரரேகையில் சொல்லவில்லை.  

 Image result for கிரியா பாபாஜி
அப்படி என்றால் பழனி நவபாசான சிலை செய்வதற்கு முன்பாகவே பெரிச்சியூர் பைரவர் சிலை, போகர் கேசம் -பூம்பாறையில் ஒரு முருகன் சிலை என்று தசபாசானம், பஞ்சபாசானம் போன்ற கலவையில் ஒரு முன்னோட்டமாக செய்தது எதற்கு? அப்போது மட்டும் அவருக்கு சித்த சக்தி இருந்ததா? காலத்தால் பரவி வரும் கதைகள், தல புராணத்தோடு இணைந்து விடுவதால் அதுவே ஒரு புதிய பரிணாமம் எடுத்து நிகழ் காலத்திற்கு ஆதாரமாக நின்றுவிடுகிறது. சித்தர்களின் நூலாதாரங்களை மட்டுமே நாம் நம்பிடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

ஆகவே, லாவோட்சு என்ற சீன அறிஞர் அங்கே பன்னிரண்டாயிரம் வருடங்கள் இருந்தார் என்பதை சீனத்து வரலாறும், தான் அத்தனை வருடங்கள் அங்கே இருந்ததாக போகர் தன் நூலிலும் சொன்னது ஒத்துப்போகிறது.. நினைத்த மாத்திரத்தில் திருமூலரும் காலங்கியும் இவருக்கு சக்தி தர இருக்கும் போது, புலிப்பாணி மூலம்தான் மீண்டும் கற்றார் என்பது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஆதாரமுமில்லை..  சீனத்தில் மூதறிஞர் லாவோட்சுவாக இருந்தது தன் குரு போகர்தான் என்ற பிற்பாடு உண்மையை உலகிற்கு சொன்னதே மகாவதார் 'கிரியா' பாபாஜிதான் . 

போகரும்-புலிப்பாணியும், தங்கள் எல்லா பிறவிகளிலும் குரு-சீடர் ரீதியில்தான் வந்துள்ளர்.. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஸ்ரீவீரப்பிரம்மேந்திரர் என்ற சமீபத்திய அவதாரம்வரை எங்குமே சிஷ்யன் (சித்தையா) தன் குரு வீரபிரம்மத்திற்கு கற்றுக் கொடுத்ததாய் எனக்குத்தெரிந்து நிகழ்வு இல்லை. இன்னும் ஆய்வு செய்ததில் பல ரகசியங்கள் புலப்பட்டது.. தான் போகராக இருந்து மூலிகைகள் பூநீறு வஸ்துக்களை கண்டறிந்த ஊர்களில் எல்லாமே தன் மறு பிரவேசங்கள் நிகழ்ந்துள்ளது என்பதே என் ஆய்வில் அறிந்தேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக