அருள்மிகு வடபழனி ஆண்டவர் கோயில் வண்ண விளக்கில்...
இன்று மாலை என் அன்பு நண்பர் சிவாவுடன் சென்றேன். பக்தர்கள் கூட்டத்தோடு வரிசையில் நின்று தரிசித்து, முருகனுக்கு சந்தன காப்பு முடிந்து சோடச உபசாரங்கள் கண்டோம். விபூதிப் பிரசாதம் வாங்கிக் கொண்டபின் பிரகாரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். பிறகு, புறப்படும் நேரத்தில் ஏதோ என் சிந்தையில் தோன்ற "சிவா, உள்ளே சென்று முருகனை மீண்டும் தரிசித்து வருவோம்" என்று சொல்லிக் கொண்டே மூலவரை அருகில் தரிசிக்க முன்னே செல்ல, அங்கிருந்தோர் எதுவுமே கேட்காமல் கதவை திறந்து எங்களை உள்ளே விட, விஐபி தரிசனமே கிட்டியது. கருவறை முன் சில நிமிடங்கள் நின்று தரிசித்தோம். அங்கு புனைந்த பாடலே இது.
"வல்வினை போக்கும் பழனி முருகா
வள்ளி மணாளா செவ்வேள் அழகா;
வல்லமைத் தாராய் கலியுக வரதா
வீரபோகா அருள்செய் குருநாதா."
வள்ளி மணாளா செவ்வேள் அழகா;
வல்லமைத் தாராய் கலியுக வரதா
வீரபோகா அருள்செய் குருநாதா."
எங்களை உள்ளே வருமாறும், எங்களுக்காக அவர்கள் சிறப்பு தரிசன கதவை திறக்கவேண்டும் என்று பணித்தானோ? வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! எல்லாம் முருகனின் செயல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக