பஞ்சக்ருத்யம் எனப்படும் ஐந்து தொழில்களை விராட் விஸ்வக்ரம சதாசிவர் புரிந்து வருகிறார். இவருடைய மனைவியே விஸ்வப்பிராம்மணி (காயத்ரி) . அவருடைய பஞ்ச முகத்திலிருந்து தோன்றியவர்களால் ஐந்து ஆக்கப் பூர்வ தொழில்கள் படைக்கப்பட்டது. கொல்லர், தச்சர், கன்னார், ஸ்தபதி, தட்டார், ஆகிய பிரிவுகள் தோன்றின. ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு வேதத்தை (சாகை), ரிஷியை, பஞ்ச பூதத்தை, சூத்திரத்தை, கோத்திரத்தை ஆதாரமாகக் கொண்டு, ஹோமம் வளர்த்து, திரிபுண்டரம் இட்டு, பூணூல் அணிந்து விஸ்வகர்ம காயத்ரி மந்திரம் ஜெபித்து தங்கள் ஆசார அனுஷ்டானங்களை கடை பிடிப்பது சம்பிரதாயம்.
ஆனால் இன்று அவையெல்லாம் அடியோடு மாறிப்போய் அழிந்துவிட்டது. நிறைய விஸ்வகர்மா குலத்தினர் புலால் உண்டும் வேண்டாத செயல்களிலும் ஈடுபடுவதைக் காண்கிறேன். அவர்களுடைய ப்ரவரம் (அபிவாதனம்) தெரியாமல் உள்ளனர். ஏன்? காலத்தால் பொருளாதார வீழ்ச்சியும், வம்சங்கள் வழியே சொல்லி கொடுக்க யாரும் இல்லாமல் போனதும், நவ நாகரிகத்தின் வெளிப்பாடும், இவற்றுக்குக் காரணம்.
விஸ்வகர்மா குலத்தினரே விழித்து எழுங்கள்.! ஆன்மிக எதிர்காலம் உங்கள் கையில்தான் உள்ளது. உலகின் ஓட்டத்தை சீராக்கியும், பாரத்ததின் அத்வைத பீடங்களை நிர்வகிக்கும் மடாதிபதிகளாகவும் வரவுள்ளீர்கள். இனி வேதம் கற்றுக்கொள்ளுங்கள். திருமால் 'கல்கி' அவதாரம் எடுக்கபோவதே உங்கள் குலத்தில்தான். பிரபஞ்சத்தை சிருஷ்டித்த மயன் வம்ச சுடர் நீங்கள்தான். குமரிக் கண்டம் (எ) லெமுரியாவின் ஊர் கட்டுமான பணியை வாஸ்துபடி வடிவமைத்ததே மயன் பிரம்மரிஷி என்பதை மறவாதீர். கர்ம சாரம்படி சாபங்கள் விலகி இனி வரும் கலியுகத்தில் நீங்கள் பிரகாசிப்பீர்கள். விஸ்வகர்மா குலத்தில் பிறந்தற்கு பெருமை படுங்கள். பூர்வ புண்ணியம் செய்யாமல் மாயன் வம்சத்தில் ஜனிக்க முடியாது.
"விஸ்வகர்ம குலே ஜாத கர்ப பிராமண் நிஸ்ச்சயம், சூத்ரத்வம் நாஸ்தி தத பீஜம் பிரார்த்னம் விஸ்வகர்மனஹா |" என்று மனஸரா சில்ப சாஸ்திரம் சொல்கிறது. அதாவது "பிறப்பால் விஸ்வ பிராமணனின் பீஜத்தை சூத்திரதுவம் அண்டுவதில்லை" என்கிறது. இக்கூற்றின்படி விஸ்வ பிராமணர்கள் அனைவரும் பிறப்பால் 'பிராமணர்களே'. தேவ பிராமணர்கள், பௌருஷேய பிராமணர்கள் என்றும் அழைக்கபடுவர்.
நீங்கள் எல்லோரும் யஞ்யோபவீதம் உபநயனம் மூலம் பூணூல் போட்டுள்ளீர்கள் (?) என்று நினைக்கிறன். இனி தினம் காலையில் குளித்து முடித்ததும், இறை வழிபாடு செய்து கிழக்கு முகம் நோக்கி அமர்ந்து கீழ் காணும் விஸ்வ காயத்ரி 54 (அ) 108 முறையேனும் ஜெபிக்கவும்.
“ஓம் விராட்புருஷாய வித்மஹே விஸ்வகர்மனாய தீமஹி தந்நோ பரப்பிரம்ம ப்ரசோதயாத்.”
என் குருநாதர் சித்தர் போகர் பிறப்பால் பொற்கொல்லராக இருந்தும் மேற்படி ஐந்து தொழில்களையும் செய்துள்ளார். அவர் ஆசியுடன் எழுதி அடுத்த மாதம் வெளிவரவுள்ள பெரிய நூலில் இதன் பெருமைகளைக் கூறியுள்ளேன். வெளியீடு பற்றி விரைவில் பதிவிடுவேன்.
ஏனோ திடீரென்று என்னுள் ஒரு சிந்தனை எழ, இதை தட்டச்சு செய்து பதிவேற்றினேன்.
- எஸ்.சந்திரசேகர்
Nandru.
பதிலளிநீக்குவிஸ்வகர்மா குளத்தில் பிறந்த பூக்களின் உன்மையான குலதெய்வம் யார்
பதிலளிநீக்கு