About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 31 மார்ச், 2019

பறையர் அடையாளம்

நீண்ட நாட்களாகவே இதுபற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம் உண்டு. ஆனால் எழுதலாமோ கூடாதோ என்ற தயக்கம் இருந்தது. சாதியைப் பற்றியோ சாதிப் பெயரை சொன்னாலோ அது கெட்ட வார்த்தைக்கு சமமான அந்தஸ்தை இன்றைக்குப் பெற்றுவிட்டது.

காலங்காலமாக நம் பாரதத்தில் நான்கு வகை வர்ணங்கள் நிலவி வருகிறது. அதனுள் எராளமான சாதிப்பிரிவுகள் உட்பிரிவுகள் வரும். நாம் ஏதோவொரு வர்ணத்தை/குலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், உள்ளபடி பார்த்தால் பிறப்பால்- தொழிலால் -குணத்தால் எப்படியும் மூன்று வகையான வர்ணங்கள்கீழ் வருகிறோம். சமூகத்தில் சாதி என்பது அடையாளம். அதைத்தாண்டி அதைப் பிடித்துக் கொண்டு தொங்க ஏதுமில்லை. குறிப்பிட்ட ஒரு வர்ணத்திலோ சாதியிலோ பிறப்பதால் உயர்வோ தாழ்வோ இல்லை. இதில் இன்னொரு வசதி என்னவென்றால் நம் வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் வர்ணம் interchangeable ஆக இருந்துள்ளது. பிற்பாடு அதுவே மெள்ள மாறி பின்வரும் தலைமுறைகளுக்கு பிறப்பு வர்ணம்/சாதியாக நிலைத்தது. இதைப்பற்றி விளக்க "துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று இந் நான்கல்லது குடியும் இல்லை" என்கிறது புறநானூறு. ஆமாம், உண்மைதானே!

கிராமத்தில் எல்லா சாதிகளும் ஒன்றையொன்று சார்ந்தே இருந்தன. அதில் ஊருக்கு சுபிட்சம் கொண்டுவர ஜெபம் தபம் சங்கீர்த்தனம் மற்றும் தர்மநெறி அறிவுரை கல்வி போதனைகளைச் சொல்வது பிராமணனின் பணி. விளையாட்டு போர் பயிற்சி ஊர்காவல் துடிப்புள்ள செயல் எல்லாம் ஷத்ரியரும், உணவு தானியம் வர்த்தகம் பொருளாதரம் நிதியை கவனிக்க வைசியர்களும், கட்டளை இட்ட பணியை செய்து முடிக்க சூத்திரர்களும் இருந்தனர். இன்றைக்கு நாம் பிறப்பால் வேறு வர்ணமாக இருப்பினும் தொழிலால் எல்லோருமே சூத்திரர்கள்தான். எல்லோரும் வேலை செய்கிறோம் நமக்கு அலுவல் பணிகளை மேலதிகாரி delegate செய்ய அதை கௌரதையுடன் execute செய்கிறோம். நம் அப்துல் கலாம் பிறப்பால் முஸ்லிம் ஆனால், வகித்த பதவியால் ஷத்ரியர், ஞானத்தால்/குணத்தால்/பழக்கத்தால் பிராமணர்.

நேற்று செய்தித்தாளில் என் கண்ணில் பட்ட ஒரு செய்தி. "சாதி ஒழிப்பென்று கூறி தாழ்த்தப்பட்ட தலித் சமூகமென உளவியலாக பறையர்களை ஒடுக்கி விட்டனர் இன்றைய அரசியலாளர்கள். மானமுள்ள பறையர்கள் இதை புரிந்துக்கொண்டு அவர்களை அரசியலிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதே வீர சோழ பறையர் நலச்சங்கம் முன்வைக்கும் ஏகமனதான தீர்மானம்!"

உண்மையில் பறையர்களின் பின்புலம் என்பது உயர்வானதாகவே இருந்துள்ளது. அவர்களுக்கு சம்புரிஷி கோத்திரம். அக்குலத்தில் சமய சொற்பொழிவாளர்கள், ஆசிரியர்கள், தானியம் பண்டகதாரர்கள், விவசாயிகள், சமுதாய அறிவிப்பாளர்கள், தூதர்கள், முரசு கருவிகள் செய்வோர், பண்ணிசை வேந்தர்கள், பக்தி இலக்கியவாதிகள், என்று பலர் இருந்தனர். எல்லோருமே வேளாளர் குலத்தில் உதித்து வந்தவர்கள். பிற்பாடு அது பிளவுபட்டு பல ஜாதிகளாக மாறிட அதில் பாதிபேர் எப்படியோ பட்டியல் சமூகத்திற்குள் போய்விட்டனர். பறையர் என்றாலே மோளம் அடிப்பவர் என்ற கருத்து நிலவி விட்டது. அதற்கேற்ப அவர்களுடைய வெளிப்புறத் தோற்றம், உணவு, பழக்க வழக்கமும், brand image போல் நிலைத்து விட்டது.

உணவு தானியங்களைப் படியால் அளந்து, செய்த வேலைக்கு (பறை அளந்து) கூலியாகத் தருபவன் எப்படி கேவலமானவன் ஆகிறான்? நாராயணன் நம் எல்லோருக்கும் பறை தருபவன் என்று முதல் திருப்பாவை பாடலில் ஆண்டாள் பாடினாளே! அதனால் நாரயணன் பறையன்தானே?
பிற்பாடு அந்த அளவையின் வாயை தோலால் பூட்ட பறை மோளம் ஆனது. ஆக இது ஆங்கிலேயர் சூழ்ச்சிக்கு முன்புவரை மோசமான வார்த்தையாக இருக்கவில்லை. பிற்பாடு திரிபு ஏற்பட்டு இன்று ஜாதிப் பட்டியலில் வந்துவிட்டது. பறையர்களே! பறையராக இருக்க பெருமைப் படுங்கள்.


புதன், 27 மார்ச், 2019

காக்கைக் கரையும்

மனிதர்கள் தங்களுடைய வாழ்நாளில் பொருளை மட்டும் ஓடியோடி உழைத்துச் சம்பாதிப்பது கிடையாது, தலைமுறைகளுக்கான பாவங்களையும் சேர்த்துத்தான். அதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்.
இரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவின் வடக்கு/வடகிழக்குப் பகுதி போர்க் களத்தில் இயங்கிய தபால் நிலையத்தில் (Advance Base Army Post office) அதன் தலைமை அதிகாரியாக எங்கள் பக்கத்து கிராமத்து ஆசாமி ஒருவர் பணி செய்தார். அங்கு மாண்டுபோகும் போர் வீரர்களின் உடைமையில் உள்ள பணத்தை சேகரித்து எடுத்து வைத்துக்கொண்டு அவ்வப்போது எங்கள் ஊருக்கு மணிஆர்டர் அனுப்புவார். மூன்று ஆண்டுகள் இதுபோல் ஒருவருக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்.
யாருக்கு? ஆசிரியராகப் பணியில் இருந்த என்னுடைய பாட்டனாருக்கு. ஊரில் வேறு யோகியஸ்தன் இல்லை என்று அந்த ஆசாமி நினைத்ததால் இவருக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். ‘வெள்ளை காக்கை’ வருகிறது என்று தபால் கார்டு போடுவாரம். இறந்தவனின் ஜோபியில் எடுத்த பணம்தான் மணியார்டராக வருகிறது என்பது என் தாத்தாவுக்குத் தெரியும். ‘பெரியவர் பாவச்செயல் செய்கிறார் என்று தெரிந்தும், தன்னை நம்பி அனுப்பிய காசை அணா குறையாமல் கணக்கு வைத்து போர் முடிந்து விடுப்பில் அவர் ஊருக்கு வந்ததும், மொத்தமாக ஒப்படைத்து விட்டார்.
‘தம்பி, நீ மகா யோக்கியன். தேதி வாரியா கணக்கு வைத்து 1270ரூ 25அணா பணத்தை காபந்து பண்ணி கொடுத்திருக்கே. இந்தாடா உனக்கு ஒரு பத்து ரூபாய் வெகுமதி’ என்று சொல்லி என் தாத்தாவுக்குக் கொடுத்தராம். ‘அண்ணே... இந்த காக்காய் கம்பீரமா உங்ககிட்டேயே இருக்கட்டும். அதுதான் உங்க குடும்பத்துக்கு அழகு’ என்று பொடி வைத்துப்பேசி பணத்தை நிராகரித்தாராம்.
ஓய்வுபெற்ற தபால் அதிகாரி பிற்பாடு ஊருக்கு வந்து சேர்ந்ததும் சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு, மகோதரம், எல்லாமே ரவுண்டு கட்டி தாக்க 6௦களில் போய்ச்சேர்ந்தார். அவருடைய மனைவிக்கு தீடீரென சித்தபிரம்மைப் பிடிக்க அந்த கிழவி 8௦களில் போனார். அவர்களுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். அந்த மகன் இருபது ஆண்டுகளுக்கு முன் புற்று நோயில் மாண்டுபோக, கடந்த பத்து ஆண்டுகளில் இளைய மகள்களின் கணவர்கள் மாண்டு போனார்கள். அக்குடும்பத்து பேரக் குழந்தைகளுக்கு நடந்தவை எல்லாமே வேறு மதம்/ இனம் கலப்பு மணம்தான்.
அவருடைய மூத்த மகளுக்கு இப்போது அதிக வயதாகி விட்டது. அவரும் அவர் கணவரும் நல்ல நேர்மையானவர்கள் என்றாலும், அந்தம்மாள் நடந்துகொள்ளும் போக்கு அவருடைய பேதலித்த தாயாரின் சாயலில் வருவதைப்போல் இருக்கிறது. எழுபது ஆண்டுகள் ஆகியும் வெள்ளை காக்கை தலைமுறைகளுக்கும் நின்று அழகாகக் கரைந்து தன் வேலையைக் காட்டிக் கொண்டிருக்கிறது.
Image may contain: bird and outdoor