சுமார் இருபது வருடங்களுக்குமுன் எங்கள் உறவுக்காரர் ஒருவருக்கு இருதய பைபாஸ் சர்ஜரி நடந்தது. கடந்த மார்ச் முதல்வாரம் மாரடைப்பு வந்தது. முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தற்சமயம் அப்பல்லோ மருத்துவமனையில் ஆலோசகராக இருப்பதால், அங்கு மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்பட்டன.
கடந்த ஆண்டுகளில் உறவினர் வருடாவருடம் அந்த மருத்துவமனையில் குறித்த மாதத்தில் தவறாமல் எல்லா சோதனைகளும் எடுத்து வந்தார். எல்லாமே நார்மல் என்று இருந்தது. இம்முறை அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்ததில் ஒரு தமணி முழுக்கக் கொழுப்பு-கனிமம் அடைப்பு கண்டு பிடிக்கப்பட்டது. அதனால் அவருக்கு ஸ்டென்ட் பரிந்துரைக்கபட்டு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. அன்று அவரை நலம் விசாரிக்க மருத்துவமனைக்குச் சென்றேன். தற்செயலாக அந்த மருத்துவரும் அங்கு ரவுண்ட்ஸ் வந்திருந்தார். நான் அங்கே இருந்த அவருடைய மருத்துவ ரிபோர்டைப் படித்துப்பார்த்தேன். பேச்சுவாக்கில் அவரிடம் சில கேள்விகள் கேட்டேன்.
“டாக்டர்.. ஒவ்வொரு ஆண்டும் அவர் இங்கே ஒருநாள் இருந்து Sugar, Cholestrol, ECG, Echo, Treadmill, Haematology, CBC, X-ray, போன்ற எல்லா routine செக்கப் செய்ததை இங்கே பார்த்தேன். அப்படி இருந்தும் எப்படி அடைப்பு வந்தது? Annual checkup க்கு வரும்போது வேறு அறிகுறிகள் எதுவும் நீங்கள் கேட்கவில்லையா?” என்றேன்.
“எல்லாம் சரியாகவே இருந்தது, ஆனால் இது எப்படி என்று எனக்கும் தெரியவில்லை” என்றார்.
“இவரைப்போல் பைபாஸ் ஆனவர்களுக்கு வழக்கமான செக்கப் எல்லாம் செய்யும்போது 3D-Angiography நீங்கள் ஏன் கட்டாயமாக்கவில்லை? அதில் இந்த அளவுக்கு வளரவிடாமல் அப்போதைக்கு அப்போதே பார்த்து அடைப்பைக் கரைத்திருக்கலாமே? இந்த ஆலோசனையை உங்கள் பரிந்துரைக் குழுவிற்குச் சொல்லுங்கள். Let us not take risk” என்றேன்.
பார்வையாளர் நேரம் முடிய நான் விடைபெறும்போது அவர் என்னிடம் “I did not get your name, Doctor. In which hospital you are currently working?” என்றார். என் புருவங்கள் உயர ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தேன்.
Sorry. I am not a doctor என்று சொல்லிவிட்டுச் சிரித்தபடி நகர்ந்தேன். இருதய பைபாஸ் ஆனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இதைப் பதிவிட்டேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக