என்று மச்சமுனி 800 நூலில் பாடுகிறார்.
அதாவது, அகரமான சிவமும் உகரமான சக்தியும் நம் தேகத்தில் வாசம் செய்யும்வரை அவ்வுடலுக்கு அழிவில்லை. எட்டுமிரண்டும் சேர்ந்து இந்தப் பாழும் பஞ்சபூத உடலை அழியாத சத்தியசிவமாக மாற்றும். நவகோள்களும் அடிபணிய அந்த தேகத்தவன் சிவனின் உருவையே பெற்றிடுவான் என்று தெளிவாகக் கூறுகிறார். இவர் கருத்தையே அபிராமி அந்தாதியில் ‘தெய்வ வடிவம் தரும்’ என்ற வரியும் நினைவூட்டுகிறது.
ஆனால் உண்மையில் நடப்பதென்ன? இவ்வுடல் விரைவில் கெட்டு அழியும் வகையில் புகை பிடித்தல், மது அருந்துதல், தகாத உறவில் உடலைக் கெடுத்துக் கொள்ளுதல், போதை மருந்துக்கு அடிமையாகுதல், முக்குண தோஷங்கள் பெருகும் வகையில் எல்லா வேண்டாத பழக்கங்களும் சிவசக்தியை இந்த தேகத்திலிருந்து விரட்டியடிக்க சதி செய்யும். இது எதுவும் இல்லாமல் இயல்பாக நம் மூச்சை நன்கு உள்வாங்கி விட்டாலே காலனை ஏமாற்றலாம் என்பது சித்தர் விதி. கற்பம் நமக்குத் தேவையில்லை அது சமாதியில் போய் அமர்ந்து மகாநிஷ்டையில் இருக்கும் சித்தயோகிகளுக்கே தேவை.
மச்சமுனி பாடலுக்கு உதாரணம் என் மூதாதையர் ஸ்ரீ விபூதி சித்தர் தாத்தா. நாமக்கல் மாவட்டம் அ.குன்னத்தூர் காவிரிக்கரையில் எம் குலதெய்வ மகாமாரி கோயில் அருகே சமாதியில் இன்றும் அமர்ந்துள்ளார். அவர் கற்பம் உண்டாரா என்பது எனக்குத் தெரியவில்லை ஆனால் ஆழமான நீண்ட வாசியில் தொடர்ந்து நிலைத்துள்ளார். இவர் எனக்கு 13 தலைமுறைகளுக்கு முந்தையவர். சமாதியில் தற்போது அமர்ந்துள்ள இவருக்கு வயது 460. நடுவிலுள்ள படம் 16ஆம் நூற்றாண்டில் சமாதி பிரவேசம் செய்தபோது இருந்த மத்திம வயதுபோல் தெரிகிறது. அதுவே வலதுபக்க முகத்தில் வயதுக்கேற்ற மூப்பு தெரிகிறது. கடந்த குரு பூர்ணிமா அன்று இவருடைய சமாதி பீடத்தில் பால் அபிஷேகம் செய்தனர். அச்சமயம் தன் இருவேறு முகங்களைச் சிவலிங்கத்தில் வெளிப்படுத்தினார். அதை நான் படம் பிடித்துக்கொண்டேன்.
ஆகவே நம் தேகத்திலுள்ள சிவனையும் சக்தியையும் எவ்விதத்திலும் நிந்தித்துப் பாழாக்காமல் எந்நேரமும் வாசியில் இருந்தால் ‘தான் அவனாகும்’ நிலையை எட்டலாம்.
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக