சிவபெருமான் தன்னுடைய தேகத்தின் இடபாகத்தை சக்தியோடும், திருமாலோடும் பங்கிட்டுள்ளபடி இரண்டு படங்கள் உள்ளது. இதில் ஏன் பிரம்மாவோ இந்திரனோ சூரியனோ சரஸ்வதியோ லக்ஷ்மியோ இடம் பெறவில்லை? அப்படியான படங்கள் பார்த்துள்ளோமா?
இதன் தாற்பரியம் பற்றி தெரிந்த விஸ்வகர்மா அன்பர்கள் கமென்ட் செய்யலாம். உங்களில் யாருடைய விடை சரி என்று நாளை கழித்து பார்க்கலாம். பின்னர் வரவுள்ள பதிவுகளில் இதைப்பற்றி ஆழமாகப் பார்க்கவுள்ளோம்.
Quiz- வினாவுக்கான விடை
------------------------------------------
------------------------------------------
கடந்த பதிவுகளில் சுயம்பு விஸ்வகர்மாவின் தோற்றம் பற்றி பார்த்தோம். அவரிலிருந்து வெளிப்பட்ட மற்ற ஜீவன்களும் அவரும் வெவ்வேறு இல்லை. அவரே எல்லாமாக உருவாக்கிக்கொண்டுள்ளார்.
சத்யோஜாத, வாமதேவ, தத்புருஷ, அகோர, ஈசான என்பவையே ஐந்து முகங்கள். இதில் பிரம்மா விஷ்ணு இந்திரன் ருத்திரன் சதாசிவம் தோன்றினார்கள். இதைத்தான் ஐந்து புத்திரர்கள் என்று பார்த்தோம்.
சக்திகளில் : இச்சா சக்தி லக்ஷ்மி (வாமதேவ), கிரியா சக்தி பார்வதி (சத்யோஜாத), ஞான சகத் சரஸ்வதி (அகோர), முகங்களிருந்து சிருஷ்டிக்கப்பட்டு வெவ்வேறு விதமாகப பிறந்து உருவெடுத்தனர். இவர்கள் எப்படியெல்லாம் வந்து பிறந்தனர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
விஷ்ணுவும் பார்வதியும், வாமதேவ முகத்திலிருந்து பிறந்ததால் அவர்கள் உடன் பிறப்புகள். சிவன் தன் இடப்பாகத்தை சக்திக்கு அளித்ததால், அதே பாகத்தை விஷ்ணுவுக்கும் அளித்தார். அதனால் தான் இந்த மாதிரி படத்தை மேலே பார்க்கிறோம். "ஓம் சிவாத்மிகாய நமஹ" என்கிறோம். அதாவது 'சிவனின் ஆத்மாவாக இருப்பவர்' என்பதாகும். அது பொதுவாக, விஷ்ணு- பார்வதியை குறிக்கும். விஷ்ணுவுக்கு பார்வதி உறவு என்பதால் பார்வதிக்கு 'கிரிஜா' என்ற பெயருண்டு. அதாவது விஷ்ணுவின் உடன்பிறப்பு என்று பொருள்.
சிருஷ்டித்த சக்திகளை வெவ்வேறு முறைகளில் பிறப்பெடுக்க வைத்தார் ஈசன். எல்லா சக்திகளும் விஸ்வகர்மாவுக்குள்ளேயே தோன்றி, உறவுகள் கொண்டாடி, மீண்டும் அவருக்குள்ளேயே ஒடுங்குகிறது. நிறைய கதைகளில் சரஸ்வதியானவர், பிரம்மாவின் மகளா, மனைவியா என்று கேள்விகள் எழும். எந்த உறவானாலும் அது விஸ்வகர்மாதானே?
நாம் நம் ஒவ்வொரு பிறப்பிலும், நம்முடைய சொந்த பந்தங்களுக்கு தாயாக, தந்தையாக, மகனாக, மகளாக, மனைவியாக, மருமகனாக, இப்படி பல ஜென்மங்கள் எடுக்கிறோம். இந்த ஆத்மா பல உறவுகளை எடுக்கிற போது, விஸ்வகர்மாவும் பல சக்திகளை உருவெடுத்து பல உறவுகளாகக் காட்டியுள்ளார். அதெப்படி நீங்களே அப்பாவாகவும் கணவனாகவும் மகனாகவும் வருவீங்க? என்று யாராவது கேட்டால், முதலில் உங்களுக்கு சிரிப்பும் கோபமும் வரும், பிறகு இந்த தாற்பரியம் புரியும்போது அஞ்ஞானம் விலகும். (மறுஜென்மம ஊழ்வினை போன்ற கான்செப்டில் நம்பிக்கை இல்லாதோருக்கு இந்த சங்கதி சுத்தமாகப் புரியாது. அதனால் கிண்டல் செய்வார்கள்.) இப்படியாக, தானே நம் ஆத்மாவாக நம்முள்ளிருந்து பிறந்து புருஷ-ஸ்திரீ உறவுகளை மாற்றிப்போட்டு விளையாடுகிறார்.
அப்படியிருக்க தெய்வங்ளுக்குள் சொந்தங்கள் பற்றி சர்ச்சை எழுப்புவது 'சும்மா' என்பது நமக்குத் தெரிகிறது. இறைவனே எல்லாமாக உருவாகிக்கொண்டு ஐந்து தொழில்களை நடத்தி வருகிறார். நாதமும் பிந்துவும் விஸ்வகர்மாவுக்குள்ளிருந்து தோன்றி பிரபஞ்ச இயக்கத்தில் வெவ்வேறு உறவுகளும் பணிகளையும் தந்து புரியவைக்கிறார்.
திருப்பதியில் 'முருகனுக்கு அரோகரா' என்றாலும், பழனியில் 'கோவிந்தா கோவிந்தா' என்றாலும், சமயபுரத்தில் 'ஓம் நமச்சிவாய' என்றாலும் ஒரு தவறுமில்லை. (அப்படி மாற்றிச சொல்லும்போது, இவ்விவரம் எதுவும் தெரியாதவர்கள் அதைக் கேட்டால் சிரிப்பார்கள்.) இப்போற்றிகள் எல்லாம் பரசிவனையும்- பரசக்தியையும சென்றடைகிறது என்பது இப்போது உங்களுக்குப் புரிந்ததா?
பின்னொரு சமயம் ஒவ்வொரு முகம் பற்றி ஆழமாகப் பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக