About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 28 நவம்பர், 2016

ரசவாத சித்தர் தங்கம்


பசுவின் கோமியம் அன்றாடம் வீணாகிப்போகிறது. பஞ்சகவ்வியம் செய்யவும். வீடு தெளிக்கப் பயன் படுத்துவதற்கும், சித்த வைத்தியத்திலும் போக வேறெதுக்கும் அன்றாடம் இது பயன்படுவதாய் தெரியவில்லை. ஆனால் இந்த கோமியம் செம்பை பொன்னாக்கும் வல்லமைப் பெற்றது. ஆச்சரியத்தோடு பார்கிறீங்களோ?
அதுபோல், ஆழ்கடலிலுள்ள அடர் பாசிகளும் இரும்பை /செம்பை, தங்கமாக்கும். இதிலுள்ள பாக்டீரியாக்கள் முதலில் நீர்ம தங்கமாய் மாற்றி பிறகு திடப்படுத்துகிறது.
ஓரிலைத் தாமரையின் வேறை ஒரு ஜான் அளவு வெட்டி, அதில் பழுக்க காய்ச்சிய குண்டூசியை (ஒரு ஜாமம் வரை) செருகி வைத்து எடுத்தால், அது செப்பு ஊசியாக மாறியிருக்கும்.
இதுபோல எத்தனயோ தாவரங்கள் செம்பை தங்கமாக்க எளிமையாய் உதவுகிறது என்பது சித்தர் பாடல்களில் உள்ளது. செம்பை தங்கமாக்க அவர்கள் பயன்படுத்திய வஸ்துதான் முப்பூ. இதனோடு பச்சிலை சாற்றை பிழிந்து அரைத்து அதை அந்த செம்பின் மீது பூசி, அதன் மீது மண் சீலை அப்பி, ஒரு ஜாமம் வரட்டி புடத்தில் வைத்து எடுத்தால் பத்தரை மாற்று பொன் கிட்டும். யாருக்கு? எல்லோருக்கும் அல்ல. தன்னலம் கருதாமல், பரோபகார எண்ணம் கொண்டு தர்மநெறி வாழ்வபவர்களுக்கு மட்டுமே வாய்க்கும் என்று சொல்கிறார். பலர் கையில் இருக்கும் பணத்தை கொட்டி, மூலிகைகளை பாஷாண்ங்களை அதிக விலை கொடுத்து வாங்கி தங்கம் செய்கிறேன் என்று முயன்று தோல்வி கண்டோரே அதிகம். அது சித்தர்களுக்கான 'பிறவித்' தங்கம் என்கிறார் போகர். கதிர்வீச்சு பௌதிக முறையில் இதை 'டிரான்ஸ்முடேஷன் ஆஃப் மெடல்ஸ்' என்போம்.
வலிமையான தங்க உலோகத்தை சங்குப்பூ தாவர சாறு கரைக்கும் வல்லமை பெற்றது. சூடு படுத்த அது பஸ்மம் / தவளம் போல் வெண்மை நிறமாய் மாற்றிடும். சில சமயம் கீழ்கண்ட மூலிகைகளின் தைலம் கூட அதில் பூசி வாத வேலை செய்யலாம்.
மேலே சொன்ன அந்த அதிசய மூலிகைகள் எவை? அவை: பொன்முசுட்டை, பொன்னின்னாவாரை, பொன்னூமத்தை, சிறியாநங்கை, பெரியாள், கருப்பு கோடாலி, சிவப்பு கொடிவேலி, போன்றவை. இதுபோல இன்னும் நிறைய உண்டு. இதற்கு மூலிகை பரிச்சயம் இருந்தால்தான் சரிப்படும். இதில் தோல்வி கண்டோரை பார்த்து "தங்கம் பண்றேன்னு பொய் சொல்லிகிட்டு திரியரானுங்கோ" என்று இன்றும் ஏளனமாய் பேசுபவர்கள் உண்டு. தங்களுக்கு கிடைக்காத போது ஒரு ஏக்கம் /கோபம் வருவது ஞாயம்தானே !
இவையெல்லாம் 'போகர் 7000 -சப்தகாண்டம் ஒரு பார்வை' (லியோ புக் பப்ளிஷர்ஸ்) என்ற நூல் நான் எழுதும்போது விரிவாகத் தெரிந்து கொண்டேன். நான் தங்கம் செய்ததில்லை, செய்ய எண்ணமில்லை, சற்றும் ஆர்வமில்லை. அதுவாக வாய்க்கப்பெற்றதால் என்னிடம் சித்தர் தங்கம் வந்தது.
எல்லோரும் எங்க கிளம்பிட்டீங்க? மூலிகையை தேடிப் பறிப்பதற்கா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக