About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 19 ஜனவரி, 2017

கோமாதாவின் வெளிநாட்டு சந்ததிகள்

ஜெர்சி பசுமாடுகள் வந்துவிட்டது என்ற கவலையில் தமிழ்நாடே உள்ளது. நம் நாட்டு இனங்கள் அழிந்திடுமோ என்ற கவலையும் உங்களை வாட்டுகிறது. இல்லையா?

உலகின் எந்தவொரு பசுமாட்டிற்கும் அடிப்படை மரபணு பாரத துணைக்கண்டத்தில் இருந்துதான் போயுள்ளது. அதாவது இன்றுள்ள கலப்பின பசுக்களின் மரபணு சோதனை செய்தால், அந்த gene morphology கூற்றின்படி அதில் எங்கோ ஒரு Ancester DNA sequence நம் நாட்டின பசுக்களோடு ஒத்துப்போகும். இதுதான் பிரபஞ்சத்தின் ஜீவ சிருஷ்டி தத்வம்.
என்னதான் ஜெர்சி மாடுகள் ஐரோப்பா, இங்கிலாந்து பிரான்ஸ் பகுதிகளின் வளர்ப்பு முறைக்கு ஏற்றது என்றாலும், அதன் அடிப்படை மரபணு தன்மை ஆசியாவில்தான் நிலைத்திருக்கும். நூற்றாண்டுகளாக அங்கேயே கலப்பின தலைமுறைகள் நடந்துள்ளதால், அதன் மூதியல் மரபணு DNA pattern ல் அடர் கருப்பு கோடாக dominance தெரியாமலும் போகலாம். ஆனால் இந்த மரபணுக்கள் dormant ஆக செயல்படாமலே அதன் உடம்பில் இருக்கும். பொதுவாக Bos taurus என்னும் எருதுதான் Zebu என்ற காங்கயம் காளையின் மரபணுவை ஒத்தது. ஆக, போர்குண மரபணு மூதாதைய taurus ல் இருந்து வந்ததுதான்.
Image may contain: horseகலப்பினத்தை இந்தியாவில் வளரத்து, தக்க தீவனம், மூலிகை மருந்து, கழிச்சில், கொடுத்து வந்தால் அதன் எடை குறைந்து, பால் சுரப்பு மட்டுப்பட்டு, நம் சீதோஷ்ண நிலைக்கு மாறும். ஆனால் அதன் உடலிலுள்ள நம் நாட்டின மாடுகளின் மரபணுவை மெல்லத்தான் விழிக்கச்செய்ய வேண்டும். இதற்கு பொறுமை நிச்சயம் வேண்டும். இந்த சோதனை ஓட்டத்தினால் காங்கேய-ஜெர்ஸி கலப்பின் 2, 3 சந்ததிக்குபின் நம் நாட்டின மாடுகளின் குணாதிசயங்கள் மெல்ல வலிமைபெற்று வெளிப்பட ஆரம்பிக்கும். இது பலருக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், சந்தேகத்தையும் தரும். தாவரவியலில் க்ரேகர் மெண்டல் வகுத்த கொத்துகடல மரபணு சோதனை பற்றி +2ல படித்தது நினைவுக்கு வருதா?
கலப்பின பசுக்களின் பால் தாமச, ரஜோ குணத்தை உறுதியாகத் தரும். மன நலனுக்கு மிக கேடானது. ஒரு ஸ்லோ பாய்சன் போல. கலப்பின மாட்டு A1 பாலில் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், மற்றும் ஹார்மோன்-மரபின நோய் கோளாறு உட்பட பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. இதைவைத்துதான் A1,A 2 என்று பாலின் தன்மையை பிரித்தனர். கலபினத்தில் அதிக பால் வரும் எனபது ஒன்றே பிரதானம். மறைந்த Dr. வர்கீஸ் குரியன் - Amul, 'வெண்மை புரட்சி' கொண்டு வரும்போது கெடுபலன்களை சற்றும் சிந்திக்காமல் கலப்பின மாடுகளை இறக்குமதி செய்யச்சொன்னார். உலகளவில் பால் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றோம். ஆனால் இன்று நாம் குடிக்கும் கவர் பால்கள் எல்லாமே நன்மை இல்லை. அதனால்தான் ஊசிபோடாமல் கறக்கும் நம்மூர் A2 ஆரோக்கிய பசும்பாலுக்கு நல்ல டிமாண்ட்.

பொதுவாகவே உள்ளூர் ரக காளை மாடுகளை வீர விளையாட்டுக்குத் தயார் படுத்தும் விதமாக நடத்தப்படுவதே 'ஜல்லிக்கட்டு'. அதாவது, 'சல்லிக்காசு' பண முடிப்பை அதன் கொம்புகளில் கட்டிவிட்டு, அது ஓடும்போது அடக்கிப்பிடித்து அந்த சல்லிகாசு எடுத்தால், பரிசாகக் கிடைக்கும். காளை மாடுகளை வலிமையாகவும் சுறுசுறுப்பாகவும் நல்ல தலைமுறைகளை உண்டாக்கவும் இப்படி பராமரிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்தில் இதை வெவ்வேறு விதமாக  சொல்கிறார்கள், ஏறு தழுவுதல், சல்லிகட்டு, மஞ்சு விரட்டு, கம்பாலா, திரியோ என்று பல. மொத்தத்தில், இளைஞர்கள் வலிமையான காளைகளைத் துரத்திப் போய் ஜெயிப்பதுதான் விளையாட்டு. இதை நிலத்திலும், நீரிலும் நடத்துவர்.

எனக்குத் தெரிந்த ஒரு முதலியார் குடும்பத்தில், கொள்ளு தாத்தா காலத்திலே தங்கள் பிள்ளைகளோடு ஆப்பிரிகாவில் போய் செட்டில் ஆனார்கள். அவர்கள் பிள்ளைகளுக்கு சம்பந்தம் செய்தது மதுரை, மாயவரம். இன்று அவர்களுடைய கொள்ளுப் பேரக்குழந்தை முடி சுருட்டையாக, தோல் நிறம் சற்று மாறிவருகிறது, நாக்கு தடிப்பாக வளைந்து கொடுக்காமல் உள்ளது. அக்குடும்பத்தில் ஆப்ரிக்க கலப்பினமே இல்லை. பின் எப்படி? அங்கு கடந்த 80 வருடங்களாக வாழ்ந்து வந்ததால், நீர், மண், காற்று, ஆகாரம், அவ்வூர் சமுதாய தாக்கம் என்று பல விஷயங்கள் அக்குடும்பத்து வெளிப்பாட்டிலும், உடம்பில் மரபணு மாற்றத்தையும் செய்தது. இதை biodiversity metabolism என்பார்கள். பஞ்ச பூதங்களுக்கு அந்த சக்தி உண்டு. ஆகவே, அந்த இறக்குமதி பசுக்களை வதை செய்யாமல் இருக்கலாம். கால்நடை கல்லூரியில் இவற்றை சோதனைக்கு வைத்துக் கொண்டு முயற்சிக்கலாம்.
நம்மூர் பசுமாடுகளை விருத்தி செய்தா போதாதா, இதெல்லாம் எதுக்கோ தண்ட செலவு என்று நினைக்கத் தோணும். என்ன செய்ய! இருக்குற 'பூம்பூம்' காளை மாடுகள் காட்சிப் பொருளாகி விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக