About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 5 ஜனவரி, 2017

ஏன் இந்த நிலை?

'விஸ்வகர்மா ஐந்தொழில்' முகநூல் பக்கத்தில் ஒரு ஆச்சாரியின் மனக்குமுறல்களை கண்டேன். முன்னொரு சமயம் கோலோச்சிய விஸ்வகர்மா ஐந்தொழில் குலத்தினர் இன்று ஏன் அப்படி வாழவில்லை? சிலர் மட்டும் செல்வம் கொழிக்கும் முதலாளிகளாகியும் மாட மாளிகையில் வாழ்கிறார்கள். பல ஆச்சாரிகள் அவர்களிடம் சேவகம் செய்து சொற்ப சம்பளத்திற்கு ஜீவனம் செய்கிறார்கள். ஏன் இந்த நிலை? இதற்கு யாரை குறை சொல்லவேண்டும்? அரசியலையோ, அரசாங்கத்தையா, சமூகத்தையா, பிறஜாதி வைசியர்களையா, குடும்ப பொருளாதாரத்தையா ?

Image may contain: 1 personகுருவருளோடு ஒரு ஆன்மா பிறந்து சிறப்பான கல்வி பெற்று வாழ்க்கையில் முன்னேற அவனுக்கு கலைமகள் அருள் வேண்டும். படித்தால் மட்டும் போதுமா, அதற்கு ஏற்ப ஒரு தொழில் வித்யை அமைந்து நல்ல வருவாய் வரவேணும், இல்லையா? அதற்கு அலைமகள் அருள் வேண்டும். நமக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் ஜாதக கோள்கள் தன் பணிகளை சாதகமாகவோ/ பாதகமாகவோ செய்து கொண்டுதான் இருக்கும். எல்லா நல்ல அம்சங்களும் ஜாதகத்தில் இருந்தும்கூட ஏன் பல சமயம் யோகமும் அதிர்ஷ்டமும் வேலை செய்யாமல் போகிறது என்று ஆராய்ந்தீர்களா? அதற்கு என்ன காரணமாக இருக்கும்?

மூதாதையர் செய்த பாபம், பெற்ற சாபம், மற்றும் நம் தனிப்பட்ட பூர்வஜென்ம ஊழ்வினை தான் காரணம். இதற்கு ஏற்பதான் ஒருவருடைய குணாதிசயம், கல்வி, தொழில் வாய்ப்பு, முதலாளி, பொருளாதார சூழல், குடும்பம் எல்லாமே அமைகிறது. நம்மை தவிர வெளியாட்களை குறை சொல்ல முடியாது. நாம் எந்த ஜாதி குடும்பத்தில் போய் பிறந்துகொள்ளலாம் என்ற சாய்ஸ் நமக்கு (ஆன்மாவுக்கு) பிரம்மன் கொடுப்பதில்லை.
ஆக, இதை நாம் விரும்பி எற்றுக்கொண்டதில்லை. இதை விளக்க தெரியாதோர் ‘விதி’ என்று பொதுவாக சொல்வதுண்டு. 'வாங்கி வந்த வரம் அப்படி' என்று கிண்டலாக சொல்வோம். இதைத்தான் விராட் விஸ்வகர்மா 'சம்சார ஆரண்ய ஸ்வரூபம் 'சாங்கிய யோகம்' ஆகியவற்றில் விளக்குகிறார். ஒவ்வொரு ஆன்மாவின் பாவ புண்ணிய balance sheet தக்கவாறே மறுஜென்மம் தந்து பாடம் கற்பித்து தர்மநெறி தவறாது வாழ்ந்து தான்னை வந்தடைய செய்கிறார். இதெல்லாம் தெரிந்தும். அப்படி சதாசிவர் உரைக்கும் வழியில் நாமெல்லாம் 100% வாழ முடிகிறதா? இதற்கேற்பத்தான் மறுமையில் வாழ்க்கை நிலை.
கல்வி கேள்வி தொழிலில் சிறந்து, சாந்தமாக உள்ள ஒரு நல்லவனுக்கு ஜீவனம் ஊசலாடுகிறது. அதுவே கல்வி இல்லாமல், இறை பக்தி கொள்ளாமல், ஊரை ஏமாற்றி அதர்ம நெறியில் இருப்பவனுக்கு ராஜயோகம் கிட்டுவதும் உண்டு. இதெல்லாம் எப்படி? அவரவர்கள் வம்ச பாவ-புண்ணிய கணக்குகள் தான் காரணம். இவனெல்லாம் நல்லாதானே இருக்கான் என்று ஒப்பிட்டு, இவர்களைப் பார்த்து மோசம்போய் அதர்மத்தில் விழுகிறோம், ஆட்டம் போடுகிறோம். மூதாதையர் சேர்த்துவைத்த புண்ணியம் (எ) சொத்தை அனுபவித்து தீர்த்தாச்சு. இனி நமக்கும் நம் தலைமுறைக்கும் நாம் சேர்த்து வைத்த புண்ணியங்கள் என்ன? தேடணும், தேடிகிட்டே இருக்கணும்! 
விஸ்வகர்மா குலத்தினர் புலால் உண்பதை அடியோடு தவிர்க்க வேண்டும். காலத்தால் பொருளாதார வீழ்ச்சியும், வம்சங்கள் வழியே சொல்லி கொடுக்க யாரும் இல்லாமல் போனதும், நவ நாகரிகத்தின் வெளிப்பாடும், இவற்றுக்குக் காரணம், இவை ஜாதகத்தில் ஞானகாரக கேதுவின் நிலையில் பிரதிபலிக்கும். லக்னத்திற்கு பத்தாம் வீட்டின் பலமும் சேர்க்கையும் வைத்து அவரவர் கல்வி-தொழில் ஸ்தானம் அமைகிறது என்பது கண்கூடு.
பொருளாதார ஒப்பீடு, பொறாமை, கோபம், பழிபோடுதல், இறை நிந்தனைகள் எல்லாம் விடுத்து நம் சுயம் பற்றி சிந்திப்போம். எதிர்மறையாகவே சிந்தித்து எப்போதும் செயல்பட்டால், நமக்கு வீழ்ச்சியே! நம் எண்ணங்களே நம் வாக்கிலும் செயலிலும் தெரியும், நம்மிடமிருந்து தீய அதிர்வலைகளே வெளிப்படும். இதை உணர்ந்து நாய் பூனை காக்கை குழந்தைகூட நம்மிடம் வராது. உஷார்! இப்படியாக atitude இருந்தால் சித்தர்களையும் ஈசனையும் எப்போது நாம் கண்டு தரிசிப்பது?
"தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா,
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே,
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே."
- எஸ்.சந்திரசேகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக