நம் காதுமடல் வடிவம் கர்ப்பத்தில் உள்ள சிசுவை ஒத்திருக்கும். இங்கே படத்தில் பார்த்தாலே தெரியும். காதோர துளையிடும்போது அது தேகத்தின் எந்தெந்த பகுதி உறுப்புகளை பலம் பெறச்செய்யும் என்பதை நீங்களே காண்க. ஒப்பீடுக்காக இங்கே படத்தை இணைத்து காண்பித்துள்ளேன். 1- மூளை முதல் 14-பாதம் விரல்கள் வரை குறிக்கப்பட்டுள்ளது.
நம் சமயத்தில் பின்பற்றப்படும் சாஸ்திர சம்பிரதாயங்கள் அறிவியல்-மருத்துவம் சார்ந்ததாகவே இருக்கும். குழந்தைக்கு தீட்டு (புருடு) கழிந்த பிறகு, தாய்மாமன் மடியில் உட்கார வைத்து, ஆச்சாரி ஒரு தங்கம்/ வெள்ளி ஊசியைக் கொண்டு காது சோனையில் துளையிடுவார். பொதுவாக, ஆண்டு நிறைவுக்கு காது குத்தி மொட்டை அடிப்பார். சிசுவின் காதில் (கர்ண) மந்திர உச்சாடனம் செய்யும் போது ஏற்படும் அதிர்வுகள் குழந்தையின் திசுக்களையும் ஆன்மாவையும் சக்தியூட்டும். ஆண் குழந்தைக்கு வலது காதிலும், பெண் குழந்தைக்கு இடது காதிலும் நரம்புகள் அக்குப்ரஷர் தந்து செயல்படுகிறது. இது தெரியாதவர்கள், ஐய்யிரும், ஆச்சாரியும் பிழைப்பு ஓட்ட ஏற்படுத்தப்பட்ட சடங்கு என்று உளறுவார்கள்.
இக்காலத்தில் மருத்துவர்களை வைத்தே காது குத்துகிறார்கள். வலி நிவாரணி, நோய் தொற்று ஏற்படாமல் இருக்க ஹைட்ரொஜென் பெராக்சைடு தடவி புண் ஆற்றுகிறார்கள். காய்ச்சல் வராமல் இருக்க குழந்தைக்கு தடுப்பூசிகள் போட்டபின் ஆறு மாதம் கழித்து குத்தச் சொல்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக