தமிழ்நாடு முழுவதும் சாலைகளுக்கும் பகுதிகளுக்கும் ஏற்கனவே அரசியல் தலைவர்கள், தியாகிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. காந்தி நகர் சாலை, வல்லபாய் படேல் சாலை, ஆறுமுக நாயக்கர் எஸ்டேட், வேட்டுவ கவுண்டன் பாளையம், பாப்பாதியம்மாள் தெரு, தம்பு செட்டி சாலை, கெங்குரெட்டி தெரு, அப்பு முதலி தெரு, ஆரியகவுடா சாலை என இன்னும் பல உதாரணங்களைக் காட்டலாம். வெட்டி நேரத்தைக் கழிக்க நல்லதொரு பழைய பொழுதுபோக்கு அம்சம் நகராட்சிக்குக் கிடைத்துள்ளது.
காந்தி இனி மோகன்தாஸ் ஆகலாம். ஆனால் தாஸ் என்றால் சேவகன் அடிமை என்று பொருள்படும் என்பதால் அது கண்டனத்திற்குரியது. மோகன் என்றும், மற்றவை எல்லாம் அம்மாள், கெங்கு, தம்பு, அப்பு, வேடன் என்று நல்லவிதமாக மாற்றப்படலாம். ஆரிய-கவுடா இரண்டும் விவகாரமானவை. எதுவும் வேலைக்கு ஆகாது என்றால் இஸ்லாமியர்களின் பெயர்களை வைக்கலாம் ஆனால் அந்தப் பெயர்களிலும் ராவுத்தர் சையது பாஷா அலி எல்லாம் சாதியைக் காட்டிவிடும்.
ஆக சுவிசேஷமாய் ஆசிர்வதிக்கப்பட்ட கிறித்தவ பெயர்களைச் சூட்டுவதே சரி! 😄😂
- எஸ்.சந்திரசேகர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக