About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

அரங்கனுக்குப் பாசுரங்கள்

அரங்கனின் நினைப்பு இன்று எழ, அவனைப்பற்றி உடனே பாசுரங்கள் எழுத என்னுள்ளே ஒரு உந்துதல் இருந்தது. அவன் அருளால் அவனுக்குப் பாசுரம்-10 ஓரிரவில் எழுதி முடித்தேன். பத்து-பாசுரங்கள் எழுதுவோம் என்று என் மனமே ஓர் இலக்கை வைத்துக்கொண்டது. எந்த சிரமமும் இல்லாமல் சொற்கள் மரபு பாடல்களாக கோர்வைகளாக இணைந்தது. அதுவே இது. இதை உரக்கப் படிக்கும்போது திவ்யப்பிரபந்தம் பாடும் நிறைவு ஏற்பட்டது. ஈசன் எழுதப் பணித்த பாசுரங்கள் ஆயிற்றே!

சிவ கோவிந்த கோவிந்தா !  ஹரி கோவிந்த கோவிந்தா!


வியாழன், 19 ஜனவரி, 2017

கோமாதாவின் வெளிநாட்டு சந்ததிகள்

ஜெர்சி பசுமாடுகள் வந்துவிட்டது என்ற கவலையில் தமிழ்நாடே உள்ளது. நம் நாட்டு இனங்கள் அழிந்திடுமோ என்ற கவலையும் உங்களை வாட்டுகிறது. இல்லையா?

உலகின் எந்தவொரு பசுமாட்டிற்கும் அடிப்படை மரபணு பாரத துணைக்கண்டத்தில் இருந்துதான் போயுள்ளது. அதாவது இன்றுள்ள கலப்பின பசுக்களின் மரபணு சோதனை செய்தால், அந்த gene morphology கூற்றின்படி அதில் எங்கோ ஒரு Ancester DNA sequence நம் நாட்டின பசுக்களோடு ஒத்துப்போகும். இதுதான் பிரபஞ்சத்தின் ஜீவ சிருஷ்டி தத்வம்.
என்னதான் ஜெர்சி மாடுகள் ஐரோப்பா, இங்கிலாந்து பிரான்ஸ் பகுதிகளின் வளர்ப்பு முறைக்கு ஏற்றது என்றாலும், அதன் அடிப்படை மரபணு தன்மை ஆசியாவில்தான் நிலைத்திருக்கும். நூற்றாண்டுகளாக அங்கேயே கலப்பின தலைமுறைகள் நடந்துள்ளதால், அதன் மூதியல் மரபணு DNA pattern ல் அடர் கருப்பு கோடாக dominance தெரியாமலும் போகலாம். ஆனால் இந்த மரபணுக்கள் dormant ஆக செயல்படாமலே அதன் உடம்பில் இருக்கும். பொதுவாக Bos taurus என்னும் எருதுதான் Zebu என்ற காங்கயம் காளையின் மரபணுவை ஒத்தது. ஆக, போர்குண மரபணு மூதாதைய taurus ல் இருந்து வந்ததுதான்.
Image may contain: horseகலப்பினத்தை இந்தியாவில் வளரத்து, தக்க தீவனம், மூலிகை மருந்து, கழிச்சில், கொடுத்து வந்தால் அதன் எடை குறைந்து, பால் சுரப்பு மட்டுப்பட்டு, நம் சீதோஷ்ண நிலைக்கு மாறும். ஆனால் அதன் உடலிலுள்ள நம் நாட்டின மாடுகளின் மரபணுவை மெல்லத்தான் விழிக்கச்செய்ய வேண்டும். இதற்கு பொறுமை நிச்சயம் வேண்டும். இந்த சோதனை ஓட்டத்தினால் காங்கேய-ஜெர்ஸி கலப்பின் 2, 3 சந்ததிக்குபின் நம் நாட்டின மாடுகளின் குணாதிசயங்கள் மெல்ல வலிமைபெற்று வெளிப்பட ஆரம்பிக்கும். இது பலருக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், சந்தேகத்தையும் தரும். தாவரவியலில் க்ரேகர் மெண்டல் வகுத்த கொத்துகடல மரபணு சோதனை பற்றி +2ல படித்தது நினைவுக்கு வருதா?
கலப்பின பசுக்களின் பால் தாமச, ரஜோ குணத்தை உறுதியாகத் தரும். மன நலனுக்கு மிக கேடானது. ஒரு ஸ்லோ பாய்சன் போல. கலப்பின மாட்டு A1 பாலில் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், மற்றும் ஹார்மோன்-மரபின நோய் கோளாறு உட்பட பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. இதைவைத்துதான் A1,A 2 என்று பாலின் தன்மையை பிரித்தனர். கலபினத்தில் அதிக பால் வரும் எனபது ஒன்றே பிரதானம். மறைந்த Dr. வர்கீஸ் குரியன் - Amul, 'வெண்மை புரட்சி' கொண்டு வரும்போது கெடுபலன்களை சற்றும் சிந்திக்காமல் கலப்பின மாடுகளை இறக்குமதி செய்யச்சொன்னார். உலகளவில் பால் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றோம். ஆனால் இன்று நாம் குடிக்கும் கவர் பால்கள் எல்லாமே நன்மை இல்லை. அதனால்தான் ஊசிபோடாமல் கறக்கும் நம்மூர் A2 ஆரோக்கிய பசும்பாலுக்கு நல்ல டிமாண்ட்.

பொதுவாகவே உள்ளூர் ரக காளை மாடுகளை வீர விளையாட்டுக்குத் தயார் படுத்தும் விதமாக நடத்தப்படுவதே 'ஜல்லிக்கட்டு'. அதாவது, 'சல்லிக்காசு' பண முடிப்பை அதன் கொம்புகளில் கட்டிவிட்டு, அது ஓடும்போது அடக்கிப்பிடித்து அந்த சல்லிகாசு எடுத்தால், பரிசாகக் கிடைக்கும். காளை மாடுகளை வலிமையாகவும் சுறுசுறுப்பாகவும் நல்ல தலைமுறைகளை உண்டாக்கவும் இப்படி பராமரிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்தில் இதை வெவ்வேறு விதமாக  சொல்கிறார்கள், ஏறு தழுவுதல், சல்லிகட்டு, மஞ்சு விரட்டு, கம்பாலா, திரியோ என்று பல. மொத்தத்தில், இளைஞர்கள் வலிமையான காளைகளைத் துரத்திப் போய் ஜெயிப்பதுதான் விளையாட்டு. இதை நிலத்திலும், நீரிலும் நடத்துவர்.

எனக்குத் தெரிந்த ஒரு முதலியார் குடும்பத்தில், கொள்ளு தாத்தா காலத்திலே தங்கள் பிள்ளைகளோடு ஆப்பிரிகாவில் போய் செட்டில் ஆனார்கள். அவர்கள் பிள்ளைகளுக்கு சம்பந்தம் செய்தது மதுரை, மாயவரம். இன்று அவர்களுடைய கொள்ளுப் பேரக்குழந்தை முடி சுருட்டையாக, தோல் நிறம் சற்று மாறிவருகிறது, நாக்கு தடிப்பாக வளைந்து கொடுக்காமல் உள்ளது. அக்குடும்பத்தில் ஆப்ரிக்க கலப்பினமே இல்லை. பின் எப்படி? அங்கு கடந்த 80 வருடங்களாக வாழ்ந்து வந்ததால், நீர், மண், காற்று, ஆகாரம், அவ்வூர் சமுதாய தாக்கம் என்று பல விஷயங்கள் அக்குடும்பத்து வெளிப்பாட்டிலும், உடம்பில் மரபணு மாற்றத்தையும் செய்தது. இதை biodiversity metabolism என்பார்கள். பஞ்ச பூதங்களுக்கு அந்த சக்தி உண்டு. ஆகவே, அந்த இறக்குமதி பசுக்களை வதை செய்யாமல் இருக்கலாம். கால்நடை கல்லூரியில் இவற்றை சோதனைக்கு வைத்துக் கொண்டு முயற்சிக்கலாம்.
நம்மூர் பசுமாடுகளை விருத்தி செய்தா போதாதா, இதெல்லாம் எதுக்கோ தண்ட செலவு என்று நினைக்கத் தோணும். என்ன செய்ய! இருக்குற 'பூம்பூம்' காளை மாடுகள் காட்சிப் பொருளாகி விட்டது.

புதன், 18 ஜனவரி, 2017

Roll out the red carpet

(The essay was contributed to the Times of India, Southpole column.)

Lethargy ruled over the Pongal festival weekend when I overcame the procrastination and made it on a weekday to visit the 40th Annual Chennai Book Fair. Such an ambience was a colourful carnival to me more than anyone else. As a bilingual writer who had authored 23 books, I make it a point to greet my frontline publishers whenever the reading tent pitches in Chennai. Displaying a VIP pass royally, I jumped into the spreading crowd to swim in the ocean of books. Never we can fathom the depth of a topic or judge a book by its cover or underestimate the content by the price tag. The fresh coat of paint and a spiral array of books will pull everyone into the stall. While opening a new book to turn over the pages for a glance, the smell of fresh ink on untouched pages will pump joy and rejuvenates the starving soul. I merrily walked into all stalls presuming a red carpet has been exclusively laid out there for me. How magnanimous and courteous, the organisers were!

Soon there was an eerie silence when the Minister for Education walked past me. He dropped into some of the stalls at random to enquire about new arrivals and to receive publishers' feedback.  Before could I audibly hear his talk, an office bearer of BAPASI and also my publisher, patted my shoulder and requested me to be seated at his stall. I promised to drop into his stall after making a few rounds of pick-and-buy books at a discount. At least a crore of books should have been around. It was an overwhelming crowd that was on the slow move. Cutting across the barriers of ages and physical disability, a whopping number of 1.5 million footfalls should have been registered in these ten days.  Many kids and grown up children picked out all kinds of books that fascinated them at sight. As an avid reader and a writer, I made it a point to watch the main subjects that were mostly preferred by the book lovers. Some were behind cookery, health, diet, organic farming; some were noting down the available books on management, statistics, economics, engineering, politics; while the mixed age group went on digging the shelves for Siddhaology, religious epics, classics, literature, personality development, motivation and biographies.

When a kid hurriedly picked books of Enid Blyton and Harry Potter, its mother forced it to leave on the table saying 'where is the space to keep all books at home?' Soon the kid pulled up the face. Yes, this is the situation. Is there sufficient place to read? Does a reading atmosphere exist at all homes? Sooner we enter any middle-class house, we see dolls, faded photos, prize cups, shields, mementoes, a bunch of newspapers on teepoy and a shoe rack at a remote corner of the drawing room. Of course, a lizard or spider would also share the space. With homework and extra-curricular activities, these kids seldom get time to read the new books bought and stacked. Though in India, reading habit is not alarmingly low, the space and time for book reading are yet to improve. With technology occupying the living room, e-books are not always preferred as it is detrimental to eye nerves and brain. The healthy mode of a conventional book is always the choice to soothe eyes and read at ease.

An electronic version can never ever replace print version. When the target for sale was at fifteen crore rupees, the purpose of the fair remains well justified. Book fairs are dutifully conducted throughout the year by the Booksellers' & Publishers' Association of South India (BAPASI). At first place, I have to congratulate my publisher friend Mr.G.Olivannan, Treasurer, BAPASI. Under his supervision, the organising committee sprang up to conceive, organise and successfully conduct the event management without a glitch when the demonetization effect is being felt. A sufficient number of swiping card machines were installed, visitors never felt a pinch in using plastic currency. All safety and medical amenities were at a ready call. Ample parking slot and bus connectivity were key factors. BAPASI successfully conducts book fair in all districts of Tamilnadu every year. Chennai celebrates the event equally as much as Kolkatta does.

Mr.Oli is a multifaceted personality. A mechanical engineer, successful publisher, writer, social worker, and a hood human. He is at present the District Governor of Rotary International District 3230. His services during the December deluge and Vardha cyclone were highly laudable.

 Next only to the highest number of offset printing machines in Guttenberg, 'the little Japan' Sivakasi dots second on the world map. With the rising cost of book production, all is not well to run a publishing shop with courage. My publishers like NCBH, Vijaya, Karpagam, and Leo, who have a big banner image in the industry, are constrained to shoestring budget without compromise. The loss suffered by them during the December deluge in 2015 did not seem to dampen the spirit. Despite pending partial insurance claim settlement, they rose up like a phoenix from the water.  In spite of such a situation, they manage to make it big at every event. The Tamil diaspora had its presence at the Singapore Writers Stall that exhibited published works of ethnic writers in all genres. Educational institutions made a good purchase of books for libraries. On the other hand, the schools that provide e-Learning classrooms may not cultivate book reading attitude in children.

I wish the general public would not let down good reading habits. It gave an ecstatic feel when books authored by me were bought by readers in large number. As an author of four Siddha treatise books, when I was busy clicking close-ups of some out-of-print specimen books at the Thanjavur Saraswathi Mahal stall, a senior student from the College of Architecture and Sculpture came enquiring, 'Do you have a reprint copy of the 19th-century book, 'Manasara - Shilpa Shastra'?  I was spellbound on the wide spectrum of diverse topics preferred across the timeline circa. The readers are eagerly looking forward to the next ‘red carpet’ welcome.

S.Chandrasekar

(The author is a bilingual writer, columnist and core HR Trainer, Chennai.)

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

நூல் உலகம் உங்களை வரவேற்கிறது!

40 வது  சென்னை புத்தகக்காட்சி     
January 06 – 19, 2017
இடம்:
செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி,
(பச்சையப்பன் கல்லூரி எதிரில்), அமைந்தகரை, சென்னை.

ஆண்டுதோறும் நாட்டில் நடக்கும் பெரிய புத்தகக்காட்சிகளில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) தற்போது நடத்தும் 40வது சென்னைப் புத்தகக்காட்சியும் ஒன்று. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் புத்தகத்திற்கு என்று ஒரு நிரந்தரப் புத்தகக்காட்சி நடைபெறுகிறது. 

என் நூல்கள் உள்நாடு/வெளிநாடு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் பல மறுபதிப்புகள் வந்தன. இத்தருணத்தில் என் அன்பு பதிப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். 

ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் Marinabooks, Amazon, Snapdeal, Noolulagam, Udumalai, Nammabooks, Dial for books, ஆகியோருக்கு நன்றி

வியாழன், 5 ஜனவரி, 2017

ஏன் இந்த நிலை?

'விஸ்வகர்மா ஐந்தொழில்' முகநூல் பக்கத்தில் ஒரு ஆச்சாரியின் மனக்குமுறல்களை கண்டேன். முன்னொரு சமயம் கோலோச்சிய விஸ்வகர்மா ஐந்தொழில் குலத்தினர் இன்று ஏன் அப்படி வாழவில்லை? சிலர் மட்டும் செல்வம் கொழிக்கும் முதலாளிகளாகியும் மாட மாளிகையில் வாழ்கிறார்கள். பல ஆச்சாரிகள் அவர்களிடம் சேவகம் செய்து சொற்ப சம்பளத்திற்கு ஜீவனம் செய்கிறார்கள். ஏன் இந்த நிலை? இதற்கு யாரை குறை சொல்லவேண்டும்? அரசியலையோ, அரசாங்கத்தையா, சமூகத்தையா, பிறஜாதி வைசியர்களையா, குடும்ப பொருளாதாரத்தையா ?

Image may contain: 1 personகுருவருளோடு ஒரு ஆன்மா பிறந்து சிறப்பான கல்வி பெற்று வாழ்க்கையில் முன்னேற அவனுக்கு கலைமகள் அருள் வேண்டும். படித்தால் மட்டும் போதுமா, அதற்கு ஏற்ப ஒரு தொழில் வித்யை அமைந்து நல்ல வருவாய் வரவேணும், இல்லையா? அதற்கு அலைமகள் அருள் வேண்டும். நமக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் ஜாதக கோள்கள் தன் பணிகளை சாதகமாகவோ/ பாதகமாகவோ செய்து கொண்டுதான் இருக்கும். எல்லா நல்ல அம்சங்களும் ஜாதகத்தில் இருந்தும்கூட ஏன் பல சமயம் யோகமும் அதிர்ஷ்டமும் வேலை செய்யாமல் போகிறது என்று ஆராய்ந்தீர்களா? அதற்கு என்ன காரணமாக இருக்கும்?

மூதாதையர் செய்த பாபம், பெற்ற சாபம், மற்றும் நம் தனிப்பட்ட பூர்வஜென்ம ஊழ்வினை தான் காரணம். இதற்கு ஏற்பதான் ஒருவருடைய குணாதிசயம், கல்வி, தொழில் வாய்ப்பு, முதலாளி, பொருளாதார சூழல், குடும்பம் எல்லாமே அமைகிறது. நம்மை தவிர வெளியாட்களை குறை சொல்ல முடியாது. நாம் எந்த ஜாதி குடும்பத்தில் போய் பிறந்துகொள்ளலாம் என்ற சாய்ஸ் நமக்கு (ஆன்மாவுக்கு) பிரம்மன் கொடுப்பதில்லை.
ஆக, இதை நாம் விரும்பி எற்றுக்கொண்டதில்லை. இதை விளக்க தெரியாதோர் ‘விதி’ என்று பொதுவாக சொல்வதுண்டு. 'வாங்கி வந்த வரம் அப்படி' என்று கிண்டலாக சொல்வோம். இதைத்தான் விராட் விஸ்வகர்மா 'சம்சார ஆரண்ய ஸ்வரூபம் 'சாங்கிய யோகம்' ஆகியவற்றில் விளக்குகிறார். ஒவ்வொரு ஆன்மாவின் பாவ புண்ணிய balance sheet தக்கவாறே மறுஜென்மம் தந்து பாடம் கற்பித்து தர்மநெறி தவறாது வாழ்ந்து தான்னை வந்தடைய செய்கிறார். இதெல்லாம் தெரிந்தும். அப்படி சதாசிவர் உரைக்கும் வழியில் நாமெல்லாம் 100% வாழ முடிகிறதா? இதற்கேற்பத்தான் மறுமையில் வாழ்க்கை நிலை.
கல்வி கேள்வி தொழிலில் சிறந்து, சாந்தமாக உள்ள ஒரு நல்லவனுக்கு ஜீவனம் ஊசலாடுகிறது. அதுவே கல்வி இல்லாமல், இறை பக்தி கொள்ளாமல், ஊரை ஏமாற்றி அதர்ம நெறியில் இருப்பவனுக்கு ராஜயோகம் கிட்டுவதும் உண்டு. இதெல்லாம் எப்படி? அவரவர்கள் வம்ச பாவ-புண்ணிய கணக்குகள் தான் காரணம். இவனெல்லாம் நல்லாதானே இருக்கான் என்று ஒப்பிட்டு, இவர்களைப் பார்த்து மோசம்போய் அதர்மத்தில் விழுகிறோம், ஆட்டம் போடுகிறோம். மூதாதையர் சேர்த்துவைத்த புண்ணியம் (எ) சொத்தை அனுபவித்து தீர்த்தாச்சு. இனி நமக்கும் நம் தலைமுறைக்கும் நாம் சேர்த்து வைத்த புண்ணியங்கள் என்ன? தேடணும், தேடிகிட்டே இருக்கணும்! 
விஸ்வகர்மா குலத்தினர் புலால் உண்பதை அடியோடு தவிர்க்க வேண்டும். காலத்தால் பொருளாதார வீழ்ச்சியும், வம்சங்கள் வழியே சொல்லி கொடுக்க யாரும் இல்லாமல் போனதும், நவ நாகரிகத்தின் வெளிப்பாடும், இவற்றுக்குக் காரணம், இவை ஜாதகத்தில் ஞானகாரக கேதுவின் நிலையில் பிரதிபலிக்கும். லக்னத்திற்கு பத்தாம் வீட்டின் பலமும் சேர்க்கையும் வைத்து அவரவர் கல்வி-தொழில் ஸ்தானம் அமைகிறது என்பது கண்கூடு.
பொருளாதார ஒப்பீடு, பொறாமை, கோபம், பழிபோடுதல், இறை நிந்தனைகள் எல்லாம் விடுத்து நம் சுயம் பற்றி சிந்திப்போம். எதிர்மறையாகவே சிந்தித்து எப்போதும் செயல்பட்டால், நமக்கு வீழ்ச்சியே! நம் எண்ணங்களே நம் வாக்கிலும் செயலிலும் தெரியும், நம்மிடமிருந்து தீய அதிர்வலைகளே வெளிப்படும். இதை உணர்ந்து நாய் பூனை காக்கை குழந்தைகூட நம்மிடம் வராது. உஷார்! இப்படியாக atitude இருந்தால் சித்தர்களையும் ஈசனையும் எப்போது நாம் கண்டு தரிசிப்பது?
"தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா,
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே,
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே."
- எஸ்.சந்திரசேகர்

செவ்வாய், 3 ஜனவரி, 2017

காது குத்துதல்

நம் காதுமடல் வடிவம் கர்ப்பத்தில் உள்ள சிசுவை ஒத்திருக்கும். இங்கே படத்தில் பார்த்தாலே தெரியும். காதோர துளையிடும்போது அது தேகத்தின் எந்தெந்த பகுதி உறுப்புகளை பலம் பெறச்செய்யும் என்பதை நீங்களே காண்க. ஒப்பீடுக்காக இங்கே படத்தை இணைத்து காண்பித்துள்ளேன். 1- மூளை முதல் 14-பாதம் விரல்கள் வரை குறிக்கப்பட்டுள்ளது.

நம் சமயத்தில் பின்பற்றப்படும் சாஸ்திர சம்பிரதாயங்கள் அறிவியல்-மருத்துவம் சார்ந்ததாகவே இருக்கும். குழந்தைக்கு தீட்டு (புருடு) கழிந்த பிறகு, தாய்மாமன் மடியில் உட்கார வைத்து, ஆச்சாரி ஒரு தங்கம்/ வெள்ளி ஊசியைக் கொண்டு காது சோனையில் துளையிடுவார். பொதுவாக, ஆண்டு நிறைவுக்கு காது குத்தி மொட்டை அடிப்பார். சிசுவின் காதில் (கர்ண) மந்திர உச்சாடனம் செய்யும் போது ஏற்படும் அதிர்வுகள் குழந்தையின் திசுக்களையும் ஆன்மாவையும் சக்தியூட்டும். ஆண் குழந்தைக்கு வலது காதிலும், பெண் குழந்தைக்கு இடது காதிலும் நரம்புகள் அக்குப்ரஷர் தந்து செயல்படுகிறது. இது தெரியாதவர்கள், ஐய்யிரும், ஆச்சாரியும் பிழைப்பு ஓட்ட ஏற்படுத்தப்பட்ட சடங்கு என்று உளறுவார்கள்.

இக்காலத்தில் மருத்துவர்களை வைத்தே காது குத்துகிறார்கள். வலி நிவாரணி, நோய் தொற்று ஏற்படாமல் இருக்க ஹைட்ரொஜென் பெராக்சைடு தடவி புண் ஆற்றுகிறார்கள். காய்ச்சல் வராமல் இருக்க குழந்தைக்கு தடுப்பூசிகள் போட்டபின் ஆறு மாதம் கழித்து குத்தச் சொல்கிறார்கள்.