கனவிலும் நனவிலும் என்னை இயக்கிக் காத்தருளும் நீயின்றி எனக்குத் தனித்துவம் ஏது? பாதம் பணிந்தேன் பரம்பொருளே ! இங்கு அக்னியில் பரனும் அவர் இடது கால் கீழே பரையும் ஒருசேர காட்சி தந்துள்ளனர். நாம் எல்லோரும் அப்பரம்பரையில் வருகிறோம்.
< சிவநாதம் >
--------------------
சபைக்கோர் அரசனே அம்பலவாணனே
சிவகாமியின் சுந்தரனே நடராசனே
வெட்டவெளி சித்தாந்தத்தின் ரகசியமே
உள்ளொளியை காட்டிடுவீர் நமச்சிவாயமே!
சிவகாமியின் சுந்தரனே நடராசனே
வெட்டவெளி சித்தாந்தத்தின் ரகசியமே
உள்ளொளியை காட்டிடுவீர் நமச்சிவாயமே!
பூசைநீரை கரிமுகம் துதியால் சொரிய
சிலந்திவலை பின்னல் கீழ் இளைப்பாறிய
அகிலாண்ட நாயகியின் உன்னத நாதனே
எந்தனுக்கோர் வழி சொல்வீர் நமச்சிவாயமே!
சிலந்திவலை பின்னல் கீழ் இளைப்பாறிய
அகிலாண்ட நாயகியின் உன்னத நாதனே
எந்தனுக்கோர் வழி சொல்வீர் நமச்சிவாயமே!
அடிமுடி எட்டா அருணையின் ஜோதியே
திருவடி தொழுகிறேன் நின்னருள் வேண்டியே
உண்ணாமுலை மகிழும் அருணாச்சலமே
நினைத்திடவே முக்திதாரும் நமச்சிவாயமே!
திருவடி தொழுகிறேன் நின்னருள் வேண்டியே
உண்ணாமுலை மகிழும் அருணாச்சலமே
நினைத்திடவே முக்திதாரும் நமச்சிவாயமே!
ஆரூர் மண்ணில் பிறந்தாலே நற்கதியென
பாரோர் போற்றும் கமலையின் தலைவனே
ஏனோ அங்கு பிறந்திலன் என்செய்வேன்
பேதம்பாரா கருணை தாரீர் நமச்சிவாயமே!
பாரோர் போற்றும் கமலையின் தலைவனே
ஏனோ அங்கு பிறந்திலன் என்செய்வேன்
பேதம்பாரா கருணை தாரீர் நமச்சிவாயமே!
கண்ணப்பனும் கண்டுகளித்த காளத்தியப்பரே
காற்றிலே ஒளியாட ஒலிக்கும் நல்வேதமே
ஞானியர் போற்றும் அம்பிகையின் பிரசன்னமே
என் நாதனே பரமனே நமச்சிவாயமே !
காற்றிலே ஒளியாட ஒலிக்கும் நல்வேதமே
ஞானியர் போற்றும் அம்பிகையின் பிரசன்னமே
என் நாதனே பரமனே நமச்சிவாயமே !
- எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக