சாலையில் போகும்போது ஒரு மின்சார மயான பூமியைக் கடக்க நேரும். அங்கு மேலேயுள்ள புகைப்போக்கி (சிம்னி) என் கண்ணில் படும். அங்கு உயர்ந்து நிற்கும் அதன் வாயிலிருந்து கரும்புகை வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். உள்ளே ஒரு சகாப்தம் முடிந்தது என்று மெளனமாக பறை சாற்றும். சில சமயம் அது புகை கக்காமல் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது எனக்குள் ஒர் ஆனந்தம்.
நானும் ஒரு நாள் இப்படி புகைந்து கொண்டிருப்பதை என் ஆன்மா நின்று காணும். ஊழ்வினைகள் கழிந்ததா இல்லையா? நல்லவனா கெட்டவனா? இறைவனின் தர்மநெறிப்படி வாழ்ந்தேனா, இல்லையா? புதைந்தும் எரிந்தும் பல பிறவிகள் கண்ட என் ஆன்மாவுக்கு வீடுபேறு கிட்டுமா இல்லையா? இதை அவன் ஒருவனே தீர்மானிக்கிறான்.
ஆமா, போனபின் என்ன தெரியப்போகிறது என்று சொன்னாலும், தச வாயுக்களில் இறுதிகட்ட வாயு தன் வேலையை செய்யத் தொடங்கும் அத்தருணம் ஆன்மாவுக்கு அச்சமூட்டுவதாகவே அமையும். ஆன்ம பலம் அப்போதுதான் உண்மையாகவே வேண்டும். பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அந்த இறுதிப் பயணமே சாஸ்வதமானது என்றாலும் அதை ஏனோ உற்று நோக்க எப்போதுமே நான் விரும்பியதில்லை. 'இதுவும் கடந்துபோகும்' என்றாலும் இந்த மனநிலை எனக்கு வினோதம்தான்!
என் ஆசிரியரும் வைத்தியருமான சித்தர் போகர் என்னை பத்திரமாக அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையில் தினமும் உறங்கி காலையில் எழுகிறேன். இவ்வரியை இப்போது இங்கே டைப் செய்யும்போது SMS ரிங் அடித்தது. இப்பதிவை என் குருநாதர் ஆமோதிக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக