ஆதிசங்கரர் பிக்ஷம் எடுக்க வீடுகளுக்குச் சென்ற போது, ஓர் ஏழை பிராமணனின் குடில் முன்னே நின்று 'அம்பா! பவதி பிக்ஷாம் தேஹி' என்று கூவினார். அந்த வீட்டில் தரித்திரம் நிலவியதால், அவ்வீட்டு பெண்மணி காய்ந்த நெல்லியை வாழை இலையில் வைத்துக் கொடுத்தாள். அவர்களுடைய ஏழ்மையைக் கண்டு சங்கரர் மனம் வருந்தி செல்வத் திருமகளை நோக்கி 'கனகதார ஸ்தோத்ரம்' 21 பாடல்களை இயற்றிப்பாட, அங்கே தங்க நெல்லிக்கனிகள் மழையென பொழிந்தது.
அந்த ஏழை பிராமணின் சந்ததிதான் இங்கே படத்தில் காண்கிறீர்கள். இந்த வீடு 'பொன்னோர்த்துகொட்டு மனா' என்றும் அழைக்கபடுகிறது. காலடியிலிருந்து 22கிமீ தூரத்தில் பெரும்பாவூர்- சோட்டானிக்கர போகும் வழியில் பழந்தோட்டாம் என்ற பகுதியில் உள்ளது. இங்கே படத்தில் இருப்பவர்தான் குடும்பத் தலைவர் ஸ்ரீ நாராயணன் நம்பூதிரிபாட். அவ்வீட்டில் வசிப்பவர்கள் இவர்கள்தான்.
இப்பதிவை தட்டச்சு செய்யும்போது ஒரே மகிழ்ச்சி. ஏதோ நானே அந்த ஊரில் அந்த வீட்டில் பிறந்து சங்கரரின் மஹாத்மியத்தை சொல்வதுபோல ஒரு சிலிர்ப்பு. ஆம், என் பூர்வ ஜென்மத்தில் நான் அந்தக் குடும்பத் தொடர்பில் இருந்திருக்கணும்! அப்படி இல்லாவிட்டால் மீன்குளத்தி பகவதி 2013ல் எனக்கு மலையாளத்தை ஒரே நாளில் எழுத படிக்க நினைவு படுத்தியிருக்க மாட்டாள்.
'அம்பா மீனாக்ஷி மதுரபாஷினி சரணம் சரணம்.'
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக