ஒரு நண்பர் கீழ்கண்ட கேள்வியை என்னிடம் கேட்டார்.
"முருகன் தமிழ்க் கடவுள், அவர் வள்ளி என்ற குறத்தியை மணந்தார். ஆனால் இந்திரன் என்பது ஆரியர் கடவுள் ஆயிற்றே, இவருடைய மகள் தெய்வானையை முருகன் மணம்செய்து கொண்டதாக உள்ளது. வடக்கே வள்ளி பற்றி சொல்வதில்லை. ஸ்கந்தன் என்று வடக்கே வணங்குவர். அப்படி என்றால் இங்கு நாம் இந்திரனை ஏன் ஏற்க வேண்டும்? " என்று கேட்டிருந்தார்.
இவரைப் போன்றவர்களுக்கு நீண்ட விளக்கம் சொல்லி புரிய வைப்பது நேர விரயம் என்பதால் 'ஆமாங்க. கந்தனை கும்பிடாதீங்க. தெய்வானை சீன்லயே இல்லை. முருகனின் அறுபடைவீடுகளில் திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் எப்படியோ சேர்த்துட்டாங்க. இந்திரன் சூரியன் எல்லாம் கணக்குலேயே வெச்சுக்காதீங்க' என்று பதிலளித்தேன். அவர் ஆறுதல் அடைந்திருப்பார்!
முருகன் (நாகை) சிக்கிலில் சக்திவேல் பெற்று, அதைக்கொண்டு (கன்னியாகுமரி) திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்தபின், இந்திரன் அளித்த வாக்குபடி தெய்வானையை திருப்பரங்குன்றத்தில் (மதுரை) மணந்தான். இதெல்லாம் ஆரியர் கதைகள் என்றால் இவை தென்னாட்டில் நடக்க வேண்டாமே. வடக்கே சூரனுடன் போர் புரிய முருகனுக்கு இடமா இல்லை? இதையெல்லாம் நம்மவர்களுக்கு புரிய வைப்பது இயலாது. அவர்களும் தெரிந்துகொண்டு ஒன்றும் ஆகப்போவதில்லை.
கலியுகத் தெய்வம் நம்மக்களிடம் படாத பாடு படுகிறார். முருகன் @ கார்த்திகேயன் @ கந்தன் என்ற கதாபாத்திரம் தேர்வில் கேட்கப்படும் objective type கேள்வி போல் ஆகிவிட்டது. பிரம்மன், திருமால், இந்திரன், சுப்பிரமணியன், ராமன், கிருஷ்ணன் என்று எல்லோருமே ஆரிய கடவுள் என்றால், இத்தனை ஜெனனங்கள் எடுத்த தமிழ் சித்தர் போகரை எதில் சேர்த்துக் கொள்வது? நம் இந்திய அரசியல் போலவே ஆன்மிகத்திலும் வடக்கு-தெற்கு என்ற அளவில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.
பஞ்சமுக விஸ்வகர்மாவின் தோற்றம் பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. விஸ்வகர்மா என்றால் காயத்ரி வருகிறாள். காயத்ரி மந்திரம் என்றால் அது ஆரியர் கலாசாரம். பஞ்சமுகத்தில் தோன்றிய பிரம்மன், விஷ்ணு, சிவன், இந்திரன், சூரியன் எல்லாரும் ஆரியர்கள். அதில் தமிழ்க் கடவுள் மட்டும் எங்களுக்கு வேண்டும் என்ற எண்ணமே உள்ளது. வேணுங்கிற முகத்தை பிச்சிக்க வேண்டியதுதான். ஆனாலும் அதில் தமிழ் முகம் என்று ஏதுமில்லையே! அங்கே முருகனும், தமிழும் புலப்படாது. பஞ்சமுகத்தோடு மற்றவர்களுக்கு புலப்படாத ஆறாவது முகத்தையும் (அதோமுகம்) சேர்த்து முருகனாக உத்தித்துக் கொண்டார், பிறகே தமிழ் படைத்தார்.
மொழி வேற்றுமை வந்தாலும் வந்தது. இந்த கூட்டம் புராணங்களை நம்புவதில்லை. அப்படியானால் இங்கு பிறந்து சீனம் போன போகரும் ஆரியர் தானே? அவருடைய நூல்களை வாசித்து போற்றுவதும் தமிழ் மரபுப்படி குற்றம்தானே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக