ரோஜா. இதன் சுகந்தம், நிறம், குணம் எல்லாமே நமக்கு பல்வேறு மருத்துவ நலன்களை அள்ளித்தரும். குடல், ரத்தம், இதயம், நுரையீரல், மூளை புத்துணர்வு, ஞாபக சக்தி, கெட்ட கொழுப்பு கட்டுப்பாடு, வயிறு, கருப்பை/ஆண்மை கோளாறு, என்று பலத்துக்கும் நல்ல மருந்து. இதை தினமும் ஒரு ஸ்பூன் உண்டு வந்தால் மருத்துவப் பிரச்சனைகள் தீரும். நான் செய்யும் முறையை இங்கே சொல்கிறேன்.
ரோஜா 25 பூக்கள், தேன் ஒரு பாட்டில் (100கி). பனஞ்சக்கரை 100கி.
இதழ்களை உதிர்த்து, ஈரம் போக நன்கு துடைத்து, துணியில் பரப்பி ஆற விடுங்கள். உலர் பாட்டிலில் கொஞ்சம் இதழ்களை போடுங்கள், அதன் மேலே பனஞ்சக்கரை ஒரு ஸ்பூன் தூவுங்கள், தேன் கொஞ்சம் ஊற்றுங்கள், மீண்டும் இதழ் தூவுங்கள், இப்படியே செய்து முடியுங்கள். ஒரு மண்டலம் ஊறினால் நல்லது. அதற்கு முன்பே நன்றாக ஊறிடும். கிளறினால் இளகல் (அல்வா) போல் வரும். ஒரு ஸ்பூன் எடுத்து உள்ளங்கையில் போட்டு, அதில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு ரசித்து உண்ணுங்கள். அருமை!
விருப்பப்பட்டால் இதோடு பேரிச்சம் பழ சிறு துண்டுகளையும், ஒரு சிட்டிகை கசகசா விதைகளையும், வெள்ளரி விதைகளையும் ஒவ்வொரு layer லும் தூவி ஊறவிடலாம். கடையில் விற்கும் விலைக்கு நீங்களே செய்திடுங்கள்.
வாசனை /சென்ட்/ பன்னீர்/ நேச்சுரல் ரோஜா வாங்கி பயன் படுத்தவும். விலை சற்று குறைந்துவிட்டது. நான் 20 ரூபாய்க்கு 25 பூ வாங்கினேன். வாசமில்லா அலங்கார ரோஜா இதற்கு உதவாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக