About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 7 மார்ச், 2021

அர்த்தமுள்ள சடங்குகள்!

போன வாரம் நான் கலந்துகொண்ட ஒரு திருமணத்தில் நடந்த 'நாந்தீ தேவதா' பூஜை சடங்கைப்பற்றிச் சொல்கிறேன்‌.

வீட்டில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும் நமது முன்னோர்களின் ஆசியை அவசியம் பெறவேண்டும் என்பது மரபு.

இந்தச் சம்பிரதாயத்தை நாந்தீ சோபனம் என்ற பெயரில் திருமணத்திற்கு முதல்நாள் விரதத்தின்போது ஒன்பது அந்தணர்களை அமரவைத்துச் செய்து முடிப்பார்கள். மாப்பிள்ளை வீட்டார் பக்கம் ஹோமம் வளர்த்துச் செய்வார்கள். அதில் சில பிரிவினர் மங்கலப்பானைகளில் இந்த நாந்தீ சோபன தேவதைகளை ஆவாஹணம் செய்து வணங்குவார்கள். வம்ச விருத்தி என்பது முன்னோர்களின் ஆசியால்தான் உண்டாகும் என்பதால் இது கட்டாயம் பின்பற்றப்படுகிறது.

அதில் சொல்லப்படும் மந்திரத்தில் குலதேவதா மற்றும் பித்ரு வழிபாடு வருகிறது. முன்னோர்களின் மூன்று தலைமுறைப் பெயர்களைச் சொல்லி அவர்களுடைய ஆசியை வேண்டுவார்கள். ஒளி ரூபமாய் அவர்கள் வருகிறார்கள் என்பது ஐதீகம்.

ஹோமம் வளர்த்து அங்கு மந்திரம் ஓதப்படுகின்றபோது ஏதோ உந்துதல் வர முன் வரிசை இருக்கையிலிருந்து எழுந்தேன். மண மேடைக்கு விரைந்தேன்.   அப்போது மொபைலை எடுத்துப் படம் பிடிக்கும் சமயம் அந்த மந்திரத்தில் 'ப்ரபிதாமஹ பிதாமஹ ...' என மூதாதையர் உறவுமுறை (பூட்டன் பாட்டன் ...) பெயர்கள் உச்சரிக்கப்பட்டன. 

படம் எடுத்தபின் பெரிதாக்கிக் பார்க்கும் போது என் உடலில் நிலவிய அதிர்வுகள் அமைதியாயின. ஹோமத் தீயில் வந்த வடிவம் ஆச்சரியப்படுத்தியது. அதில் பெரிய காக்கை ஒன்று மணமகனைப் பார்த்துக் கொண்டிருந்தது. அது அவனுடைய பாட்டனும் பூட்டனும் ஆவார்கள். சாஸ்திரம் சொல்வதுபோல் அக்கணம் ஆதித்ய ஒளி ரூபமாக வந்து ஆசிகள் வழங்கியுள்ளனர்.

ஆக நம் சடங்குகள் அர்த்தமுள்ளவையே! ஆத்மார்த்தமாக மந்திரம் சொன்னால் முன்னோர் வந்து ஆசி வழங்குவர் என்ற ஐதீகம் உண்மை என்பதற்கு இப்படமே சாட்சி! ஓம் நமசிவாய.

- எஸ்.சந்திரசேகர்




2 கருத்துகள்:

  1. Dear Chandru Sir,

    I have seen your Youtube interview by Siddhar Bhoomi and also am reading your போகர் ஏழாயிரம் - விளக்கவுரை சுருக்கம் (Kindle Edition).

    Thought of sharing information about a place where Siddhars, Saptharishis led by Agathyar and Arumuganar have descended to bring an end to this Kaliyuga. This is Gnanalayam Pondicherry. Please visit their website to know more - https://www.enlightenedbeings.org/home

    Murugar has given the Kaliyuga Vedhas - 4 books - please visit the book store-https://www.enlightenedbeings.org/books

    Messages from Agathiyar, Murugar and Vallalar are available at https://www.enlightenedbeings.org/resource

    Also, please visit their youtube page to listen to Guru Annai's 48 days messages on many divine secrets related to our brain, Sun, Sounds (nadham) Eesan etc,

    https://youtube.com/playlist?list=PLCJnWPDB9CD8O6r4AB3EgJ8IG6P2OJZF0

    If you have not heard about this place, please try to know more about it. Definitely visit it as Navanatha Siddhas, 101 Siddhas, 18 Aarumuga Aatralgal (including Bogar perumaan), 18 Sakthis along Shirdi Sainath, Mahavatar SriGuru Babaji, Vallal Perumaan are manifested in the Ever-shining Lamp at Gnanalayam.

    Om Agatheeesaya Namaha

    பதிலளிநீக்கு
  2. ஞானாலயத்தில் உள்ள அணையா விளக்கில் குடி கொண்டுள்ள முருகப்பெருமானின் அம்சங்கள் -
    முருகப்பெருமானுக்கு முன்னும் பின்னும் இறங்கிய 18 ஆற்றல்கள் - திரிகோண அமைப்பில் , 9 ஆற்றல்கள் முன்னும், 9 ஆற்றல்கள் முருகருக்கு பின் இறங்கினார்கள்.

    1. வேலோன்
    2. மயிலோன்
    3. சேவலார்
    4. வீரபாகு தேவர்
    5. நம்பிராஜர்
    6. அக்னிதேவர்
    7. அருணகிரிநாதர்
    8. நக்கீரர்
    9. ஒளவையார்

    முருகப்பெருமான் ஆறுமுகனராக

    10. தெய்வயானை
    11. வள்ளி
    12. வருண பகவான் (இந்திர தேவர்)
    13. போகர்
    14. மச்சமுனிநாதர்
    15. சட்டைமுனிநாதர்
    16. கருவூரார்
    17. புலிப்பாணி சித்தர்
    18. வாயு பகவான்

    தாங்கள் கண்டிப்பாக ஞானாலயம் சென்று தீக்ஷை பெற்று அகத்தியர் அருளும் ஆத்ம விடுதலை அடைய வேண்டும்.

    ஓம் அம் அகத்தீசாய நமஹ
    ஓம் ஈஸ்வராய நமஹ

    பதிலளிநீக்கு