About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 1 மார்ச், 2026

நெடுங்கால அரசாட்சி!

எகிப்தின் Ra என்கிற ரகுகுல வம்சப் பரம்பரை புகழ்பெற்றது. எகிப்தின் அறியப்பட்ட பேரரசான சீதை-ராமேசர் பார்வோன் பரம்பரை பதினெட்டாம் வம்ச ஆட்சி கிமு1580-1350வரை நீடித்தது என்றும், மன்னர் ஆக்கனாதன், சாகரன் வழியே வந்தபின், ஆக்கனாதனின் மகன் தட்டான் கமணன் பதிமூன்றாம் பார்வேந்தனாக Pharaoh அரசாட்சி செய்தார். 

சிறிய வயதினனான கமணன் ஒன்பதாண்டுகள் மட்டுமே அரசாட்சி செய்தார். தன் மாற்றாந்தாய் மகளான அங்கசேனாபதி (எ) அங்கசேனாமணியை மணந்தார் என்று குறிப்பு உள்ளது. அக்காலகட்டத்திலேயே சுமார் இரண்டாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த மன்னராட்சியாக அப்பரம்பரை விளங்கியது என்றும், அப்போதே கெய்ரோவில் pyramid என்கிற ஆச்சரியமான பெரியமேடு அமைக்கப்பட்டிருந்தன என்று வரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். 

கமணனுக்குத் தொடை எலும்பு முறிவும் பிறகு நோய் தொற்றும் ஏற்பட்டு பத்தொன்பதாம் வயதில் வாரிசுகள் இல்லாமல் இறந்ததாகத் தெரிகிறது. அதன்பின் அரசவை ஆலோசகர் ஆய் அந்த அரசி அங்கசேனாவை மணந்துகொண்டு நான்காண்டுகள் ஆட்சி நடந்தது. இங்குள்ள படத்தில் மன்னர் கமணன், அரசி அங்கசேனாமணி, ராஜமாதா நாகபிராட்டி ஆகியோர் இருப்பதாக அங்குள்ள கல்லறை சுவரோவியம் காட்டுகிறது.

அங்கு பாதாள கல்லறைகளில் பதப்படுத்தி வைத்திருந்த மன்னர்களின் உடலில் என்ன நோய் வந்து இறந்தனர் என்பதைத் தொல்லியல் ஆய்வாளர்கள்/ விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். தங்கப்பேழையில் நவதானியங்கள் இருந்ததையும் கண்டுள்ளனர். அப்போதே புதுமையாக விவசாயப் பயிர்களைப் புகுத்திவிட்டனர் என்று உறுதி செய்துள்ளனர். 

இன்றும் உத்தர எகிப்தில் நீல நதிக்கரையின் கிழக்கே நாகா-எட்-தீர் என்ற மடாலய கிராமம் உள்ளது. அங்கே ஆயிரக்கணக்கான கல்லறைகள் கிமு3500-650 வரை ஆட்சி செய்த பரம்பரையாளர்களின் உடல்கள் உள்ளன. கடைசியாக முப்பதாம் பரம்பரை ஆட்சி நடக்கும்போது மாவீரன் அலெக்சாண்டர் போரிட்டு கைப்பற்றினான். அந்த எகிப்திய வம்சாவளி சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.

-எஸ்.சந்திரசேகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக