துபாயில் இருக்கும் என் முகநூல் நண்பர் திரு. பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட்-6 சதுரகிரிக்கு பயணம் மேற்கொண்டார். அங்கே போகும்முன் தனக்கு அங்கே சித்த தரிசனங்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படுமா என்று என்னிடம் கேட்டார். அது அவர்கள் சித்தம். எதிர்பார்ப்பு இல்லாமல் போய்வாருங்கள் என்றேன்.
சதுரகிரியில் நாவல் ஊற்று இடத்தில் நீர் ஏதும் இல்லாமல் காய்ந்த தரையாகத்தான் இருந்தது. இறங்கி closeup படங்கள் எடுத்துள்ளார்.
ஊருக்கு வந்த பிறகு படங்களை பார்க்கும்போது, அங்கே ஊற்றுப் பகுதியில் காய்ந்த இடத்தில் ஊதா-நீலம் நிறத்தில் நீர் மட்டும் தேங்கியபடி இருந்துள்ளது. "இது எப்படி எங்கள் வெறும் கண்ணுக்கு சற்றும் தென்படவில்லை? அங்குதானே நின்றிருந்தேன்" என்று ஆச்சரியபட்டார். சதுரகிரியில் பல விஷயங்கள் நம் கண்களுக்கு புலப்படாமல் சித்தர்கள் மறைத்திடுவார்கள். சித்த பூமியில் எதுவும் நடக்கும்.
முன்பெல்லாம் வந்த DSLR கேமிராவில் லென்ஸ் அட்ஜஸ்ட்மென்ட் சரியில்லாமல் போனால், சூரிய வெளிச்சத்தின் ஊடுருவலால் (color fringing) சில வண்ணங்களைக் காட்டும். ஆனால் இப்போது எல்லோரும் அதிநவீன மொபைல் கேமிராவில் எடுப்பதால் இதெல்லாம் வர வாய்ப்பில்லை படத்தில் மரங்கள், காய்ந்த குச்சிகள், பச்சை இலைகள் எல்லாம் அதனதன் நிறத்தில் இருக்க, அங்கே இல்லாத நீர் ஊற்று சுனை தோன்றியது எப்படி? வெளிச்சத்தால்தான் இந்த நீல நிறம் பட்டையாக தெரிகிறது என்று வைத்துக் கொண்டாலும், சரியாக அந்த இடத்தில் இப்படி அமைந்தது அமானுஷ்யமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக