முகம் பார்க்கும் 'கிளாசு' கண்ணாடியை சித்தர் போகர் முதன்முதலில் அறிமுகம் செய்தார். தான் செய்த plain glass ன் பின்புறம் ஈயம்-ரசம் பூச்சு தந்து செய்தார். ஆனால் இதற்கு முன்னமே நம் நாட்டில் 'செம்பு-வெள்ளீயம்' (Copper-Tin) கலவையில் செய்த வெண்கல பிடிகொண்ட முகம் பார்க்கும் கைக் கண்ணாடி சுமார் கிமு.2800 முந்தய காலத்திலேயே புழக்கத்தில் இருந்துள்ளது. இதை தர்பன், ஆயினா, ஆரசி என்று வடக்கே அழைப்பர்.
நமக்குத் தெரிந்து ராமாயணம், மகாபாரதம் ஆகிய காவியங்களில் கண்ணாடி பார்க்கும் வர்ணனைகள் வருகிறது. அந்த அலோகக் கண்ணாடியானது Glass கண்ணாடியைவிட பளபளக்கும் பிரதிபலிப்பைத் தந்தது. இதை தென்னக விஸ்வகர்மா கன்னார்கள் ரகசியமாகவே வைத்துள்ளார்கள். முதன்முதலில் கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா அருகே ஆரன்முல ஊரில்தான் இது பிரசித்தம். அதனால் இதற்கு 'ஆரன்முல கண்ணாடி' என்ற பெயருண்டு. அக்காலத்தில் மணப்பெண்ணுக்கு தரும் எட்டு மங்கலப் பொருட்களில் இதுவும் உண்டு.
இந்த கேரள விஸ்வகர்மாவினர்க்கு இந்த மெழுகு வார்ப்பு முறை (சரஸ்வதி-சிந்து சமவெளி நாகரிகம்) ரகசியம் எப்படித் தெரியும்? அவர்களுக்கு முதலில் இது தெரிந்திருக்கவில்லையாம். திருநெல்வேலி (அகத்தியர் மலை) பகுதியைச் சேர்ந்த கன்னார்களை அழைத்து வந்து இதை கேரளத்தில் அறிமுகம் செய்ததாக ஆரன்முல ஸ்ரீ பார்த்தசாரதி கோயில் ஆவணங்கள் கூறுகிறது. பிற்பாடு இத்தாலி, சீனா, எகிப்து, கிரேக்கம், பாரசீகம், அரேபியா, என்று உலகம் முழுதும் பரவியது என்பது ஆராய்ச்சியில் தெரிந்தது.
சமீபத்தில் ஒரு ஐரோப்பிய ஆய்வுக் கட்டுரையை படித்தேன். அதிலிருந்த சங்கதியை இங்கே பதிவிட்டேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக