ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனுடைய இளைய மகள் இளவரசி அம்மங்கதேவியை சாளுக்கிய பேரரசின் வேங்கிநாடு ராஜநரேந்திர மன்னனுக்கு மணம் செய்து கொடுத்தான். அப்போது தஞ்சையின் பல சதுர்வேதிமங்கலம் பகுதிகளிலிருந்து 18 அக்னிஹோத்ரம் பிராமணர்களைத் தேர்ந்தெடுத்து இளவரசியுடன் சீதனமாக 1025ஆம் ஆண்டு அனுப்பினான். இவ்விதமாக மத்யார்ஜுனம் @ திருவிடைமருதூர் கிராமத்திலிருந்து போனவர்தான் இவருடைய மூதாதையர்.
ஸ்ருங்கேரி ஸ்ரீ வித்யாரண்ய சுவாமிகள் 1336ஆம் ஆண்டில் தோற்றுவித்த விஜயநகர பேரரசானது ஹம்பியைத் தலைநகராகக்கொண்டு இயங்கியது. கிருஷ்ணதேவராயரிடம் ஆலோசகர் மற்றும் நிதி வசூல் பொறுப்பில் பணிபுரிந்தார் நம் விபூதி சித்தர் தாத்தா, மத்தியார்ஜுனம் ஸ்ரீ சுப்பாராவ். இவருடைய வேதசாஸ்திர திறமைக்கும் புலமைக்கும் வெகுமதியாக ஒரு ஸ்படிக லிங்கம் மற்றும் 9 சாளக்கிராமங்களும் மன்னர் தந்தார். 1529ஆம் ஆண்டு ஸ்ரீகிருஷ்ணதேவராயர் காலமான பிறகு தென்னிந்திய பேரரசு சரியத் தொடங்கியது. சுல்தான்கள் படை எடுப்பினால் சாம்ராஜ்ஜியம் 1646இல் மொத்தமாக வீழ்ந்தது. ஸ்ரீகிருஷ்ண தேவராயர் மறைந்ததும் அங்கே வாழப்பிடிக்காமல் புலம் பெயர்ந்து இங்கே காவிரிக்கரையில் குன்னத்தூர் அய்யம்பாளையம் அடைந்தார். இங்கேயே வாழ்ந்து 1561இல் சமாதி முகம் சென்றார். இவர் வம்சாவளியில் 13ஆவது தலைமுறையாக வருகிறேன்.
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக