About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.
kids poem லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kids poem லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 31 டிசம்பர், 2011

பாப்பா பாட்டு, For kids

பூனைக்குட்டி

பூனைக்குட்டி  பூனைக்குட்டி எங்கே வந்தாய் பூனைக்குட்டி
பானைக்குள்ளே ஒளிந்தாலும் வெளியே வரணும் பூனைக்குட்டி

குறுக்கே பாய்ந்து எலியைபிடிக்கும் குறும்புக்கார பூனைக்குட்டி
ஊரைச்சுற்றி  வீடுவந்தால் குளிப்பாயோ நீ பூனைக்குட்டி

புலியைப்போல வரிகள்கொண்ட மியாவ் மியாவ் பூனைக்குட்டி  
பாலைக்குடித்து பழம்தின்றால் பல்தேய்ப்பது யார் பூனைக்குட்டி

காலில் கூராய் நகங்கள்கொண்டு பயங்காட்டும் பூனைக்குட்டி
கோலின் மேலே ஏறி நடந்து வித்தை காட்டு பூனைக்குட்டி

பூனைக்குட்டி பூனைக்குட்டி எங்கே போறே பூனைக்குட்டி  
கழுத்தில் மணியை கட்டிவிட்டால் எப்படிப்போவே பூனைக்குட்டி


பதில் சொல்லு 
 
இரவில் பறக்கும் கீழே தொங்கும்
வால் வால் என்ன வால்?
அந்த வால் 'வௌவால்'
 
காலையில் கூவும் குப்பையை கிளரும்
வல் வல் என்ன வல்?
அந்த வல் 'சேவல்' 
 
வாலை ஆட்டும் மோப்பம் பிடிக்கும்
அந்த குட்டி என்ன குட்டி?
அந்த குட்டி 'நாய்குட்டி'
 
வண்ணங்கள் இருக்கும் துடிப்பாய் பறக்கும்
அந்த பூச்சி என்ன பூச்சி?
அந்த பூச்சி  பட்டாம்பூச்சி.