பூனைக்குட்டி
பூனைக்குட்டி பூனைக்குட்டி எங்கே வந்தாய் பூனைக்குட்டி
பானைக்குள்ளே ஒளிந்தாலும் வெளியே வரணும் பூனைக்குட்டி
குறுக்கே பாய்ந்து எலியைபிடிக்கும் குறும்புக்கார பூனைக்குட்டி
ஊரைச்சுற்றி வீடுவந்தால் குளிப்பாயோ நீ பூனைக்குட்டி
புலியைப்போல வரிகள்கொண்ட மியாவ் மியாவ் பூனைக்குட்டி
பாலைக்குடித்து பழம்தின்றால் பல்தேய்ப்பது யார் பூனைக்குட்டி
காலில் கூராய் நகங்கள்கொண்டு பயங்காட்டும் பூனைக்குட்டி
கோலின் மேலே ஏறி நடந்து வித்தை காட்டு பூனைக்குட்டி
பூனைக்குட்டி பூனைக்குட்டி எங்கே போறே பூனைக்குட்டி
கழுத்தில் மணியை கட்டிவிட்டால் எப்படிப்போவே பூனைக்குட்டி
பதில் சொல்லு
இரவில் பறக்கும் கீழே தொங்கும்
வால் வால் என்ன வால்?
அந்த வால் 'வௌவால்'
காலையில் கூவும் குப்பையை கிளரும்
வல் வல் என்ன வல்?
அந்த வல் 'சேவல்'
வாலை ஆட்டும் மோப்பம் பிடிக்கும்
அந்த குட்டி என்ன குட்டி?
அந்த குட்டி 'நாய்குட்டி'
வண்ணங்கள் இருக்கும் துடிப்பாய் பறக்கும்
அந்த பூச்சி என்ன பூச்சி?
அந்த பூச்சி பட்டாம்பூச்சி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக