ரயில் வண்டி ஆந்திர மாநிலத்தின் தாடிபத்ரி-எர்ரகுண்ட்லா இடையே ஓடிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு 3 பெட்டிகளுக்கு ஒரு கண்காணிப்பாளர் என்ற எண்ணிக்கையில் இருந்தார்கள். அது போக எப்போதும்போல் கருப்பு-வெள்ளையில் டிக்கட் பரிசோதகர் நடமாடிக்கொண்டு இருந்தார்.
ஆங்காங்கே ஸ்டேஷன்களில் 2-3 நிமிடங்கள் வண்டி நின்றது. பழம், சமோசா, கர்சீப், பூ, பிஸ்கட், புத்தகம், காய்கறிகள் விற்கும் வியாபாரிகள் ஏறினார்கள். சிலர் மாதாந்திர சீசன் டிக்கட் வைத்திருக்க சிலர் அதுவும் இல்லை. இவர்களுக்குப் பரிச்சயமான கண்காணிப்பாளர்கள் என்றால் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. பிரதி உபகாரமாக வெண்ணெய், நிலக்கடலை, பழம், காய்கறிகள், துவட்டும் துண்டு, என்று அன்பளிப்புகள் கைமாறுகிறது. நம் கண்ணில் பட்டால் கட்டுரைக்கு நல்ல தீனிதான்.
"கியோன் அந்தர் கி பிக்ரி? இவ்வனியும் லோபலகி தீஸ்கு ராக்கா" என்று உச்ச ஸ்தாயியில் ஒரு RPF காவலர் சத்தம் போட்டார். திடீரென்று ரயில்வே போலீஸ் சோதனைக்கு வந்ததும், ஒரு பெண் தான் கொண்டுவந்த மோர் பானையை அவசரமாக வெஸ்டர்ன் கழிப்பறைக்குள் கொண்டு சென்று கச்சிதமாக கிளாசெட் உள்ளே மறைத்து வைத்து சும்மா நடமாடிக் கொண்டிருந்தாள். இவளை முறைத்து அவர் பார்க்கும்போது, 'நேனு ஏமியும் அம்மலேது சார்' என்றாள். அடுத்த ஸ்டேஷனில் பானையோடு இறங்கினாள். இதுபோல் இன்னும் எத்தனைப்பேர் எதை எங்கு வைத்து விட்டு வந்து விற்பார்களோ..#?! பார்க்க ஜோராக அலங்காரம் செய்துகொண்டு வந்து இந்த சரக்குகளை விற்றால் உங்களுக்கு என்ன தெரியப்போகிறது? Bio toilets உள்ள தொலைதூர ஷதாப்தி விரைவு வண்டியில் இத்தொல்லைகள் இல்லை.
அதோனி ரயில் நிலையத்தில் இறங்கி அங்கே VLR சிற்றுண்டி ஸ்டாலில் சூடாக உப்புமா இட்லி பொட்டலங்களையும், ரயில் நீர் பாட்டிலையும், கொய்யா பழங்களும் வாங்கினேன். வேண்டிய அளவுக்கு பிஸ்கட் பழங்கள் ப்ரெட் ஜாம் + (ஆங்கில, சித்த) அவசர மருந்துகள் கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். எப்போதும் பிரயாணத்தில்
குறைவாக இலகுவான உணவையே உண்ணுங்கள்.
குறைவாக இலகுவான உணவையே உண்ணுங்கள்.
அசுத்த உணவால் வயிறு கெட்டுப்போவதைவிட உபவாசம் இருந்தாலே நன்று. ரயிலில் உள்ளே விற்றுக்கொண்டு வரும் அத்தனையையும் சிலர் தீனிப் பண்டாரமாய் வாங்கி வாங்கி விழுங்கிக் கொண்டிருப்பார்கள். இனி மோர், சர்பத், வாட்டர் பாக்கட் வாங்கிக் குடிப்பீர்களா? நீங்கள் குடிப்பீர்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக