ஆதிசேஷன் அவதாரமாகக் கருதப்படும் லக்ஷ்மணர் அம்சம்தான் வைணவ மகான் ஸ்ரீமத் ராமானுஜர். இவருக்கு இளைய ஆழ்வார், உடையவர், யதிராஜர், பாஷ்யகாரர் என்று பல திருப்பெயர்கள் உண்டு. 120 வருடங்கள் வாழ்ந்தார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பெருமாளின் அசரீரி கட்டளைப்படி இவருடைய திருமேனி 5-வது 'திருச்சுற்று' எனப்படும் அகளங்கன் திருச்சுற்றில் வசந்த மண்டபத்தில் இன்றைக்கு 880 வருடங்களுக்குமுன் புதைக்கப்பட்டது. பிறகு தானாகவே அவரது திருமேனி பூமிக்கு வெளியே தோன்றியது என்கிறார்கள். இந்த ஆண்டு அவருடைய 1000 வது ஜெயந்தி ஏப்ரலில் கொண்டாடப்பட்டது.
ஜீவசமாதியில் திரிதண்டம் கொண்டு, திருமால் அளித்த வஸ்திரம் தரித்து சின்முத்திரை காட்டும் நிலையில் காணப்படுகிறார். பார்ப்பதற்கு சிலைக்கு பற்று போட்டது போல் தெரியும். இதை நம்பாத பலர், இங்கே ஒரு சுதை உருவம் நகங்களோடும், கண் புருவங்களோடும், இமைகளோடும், நாசித் துவாரங்களோடும், குமிழ் உதடுகளோடும் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது என்றுதான் சொல்கிறார்கள். சுடுமண் சிலைதான் என்றால் இந்த preservative பந்தனம் பூச்சு எதற்கு? ஆறு மாதத்திற்கு ஒருமுறை குங்குமப்பூ சாந்து-பச்சை கற்பூரம் காப்பு சாற்றப்படுகிறது, மற்றபடி திருமஞ்ஜனம் ஏதுமில்லை என்று பட்டர் தெரிவித்தார்.
அவர் கட்டித்தழுவி தன்னுடைய சக்தியை பாய்ச்சிய திருவுருவச்லை (தானுகந்த திருமேனி) இன்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் உள்ளது. நான் சென்ற சமயம் காலையில் ராமானுஜருக்கு திருவாதிரை அன்று விசேஷ திருமஞ்சனம் நடந்து கொண்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக