படத்தில் நீங்கள் காண்பது கப்பலில் கட்டும் மணி. நியூசிலாந்தில் இது 1835ல் கண்டெடுக்கப்பட்டது. உடைந்துபோன மணியின் விளிம்பில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம் சுமார் 14ம் நூற்றாண்டு தமிழ் என்று அறியப்படுகிறது. இது 'முஹைதீன்பக் கப்பலின் மணி' என்று சொல்கிறது.
நியூசீலாந்தில் அப்போதே தமிழ் புழக்கத்தில் இருந்ததற்கு இதுதான் முதல் தடயம் என்றும், அந்நாளிலேயே தூர கிழக்கு நாடுகளையும் தாண்டி தமிழ் வணிக மாலுமிகள் ஆஸ்திரேலியா மற்றும் பாலினேஷியா தீவுகள் வரை போய் வந்த சாத்தியங்கள் நிறைய உள்ளது என்று சென்ற நூற்றாண்டின் சிறந்த மொழியியலாளர் வி.ஆர்.ராமசந்திர தீட்சிதர் பதிவு செய்துள்ளார். அல்லது லெமுரியா கண்டம் துண்டான பிறகு பழங்குடிகள் ஆங்காங்கே தங்கிவிட்டதற்கு சாத்தியமும் உள்ளது. அதெல்லாம் இங்கு நம்முடைய ஆய்வில் தெரியாமலே இருந்துள்ளது என்றுள்ளார்.
அதுபோல் சீனாவின் குவாங்கசு பட்டணத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு கிபி10-13ம் நூற்றண்டிரைச் சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. சீனாவை ஆண்ட மன்னர் குப்லாய்கான் வளமுடன் வாழவேண்டும் என்று கூறி சக்ரவர்த்தி சம்பந்தன் பெருமாள் என்பவனால் வடிக்கப்பட்டது. ஒரே கல்வெட்டில் தமிழும், சீனமும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கே சுவன்-சௌவ் என்ற ஊரில் திருக்கதலீஸ்வரம் என்ற கோயிலில் பொறிக்கப்பட்டது என்று அதில் குறிப்பும் உள்ளதாம். "செகசைக் கான் பரமன்,சித்திரை பௌர்ணமி 1203 சக ஆண்டு (கிபி.1281)" என்று உள்ளது. மன்னனின் முழுப்பெயர் குப்லாய்கான் செக்சன் கான், இவன் ஜெங்கிஸ்கானின் பேரன்.. திருக்கதலீஸ்வரம் சிவன் கோயில் இன்று உள்ளதா என்று தெரியவில்லை. இக்கோயிலின் கும்பாபிஷேகம் குப்லாய் கான் ஆணைப்படி நடந்தது என்றும் உள்ளது.
கிமு 3ம் நூற்றாண்டில் போகர் நிறுவிய தாவோயிதம் இவனுடைய ஆட்சி காலத்தில் தலைதூக்க முடியாமல் நசுக்கப்பட்டது. பிற்பாடு போகரே மிங் பேரரசின் மன்னனாக சீடர் புலிப்பாணி புடைசூழ நாட்டை மங்கோலியரிடமிருந்து மீட்டெடுத்தார் என்பதை பழைய பதிவில் ஏற்கனவே பார்த்துவிட்டோம். இதைப் பற்றி கோரக்கர் தன்னுடைய சந்திர ரேகையிலும் சூசகமாக சொல்லியிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக