என்னை ஏன் இப்படி வைத்துள்ளாய் இறைவா என்று கோபத்தில் ஒருநாளேனும் நாம் கேட்காமல் இருந்ததுண்டா? ஆனால் இவர்களைப் பாருங்கள்... அத்தனைக்கும் ஆசைப்படு என்றாலும் முகத்தில் எந்த சஞ்சலமுமின்றி ஒய்யாரமாக உள்ளனர். இதைப் பார்த்தால், நாம் உதட்டளவில் ஆன்மிகம் பேசி, நடைமுறையில் பேராசியோடுதான் மன நிறைவின்றி வாழ்கிறோம் என்பது தெரிகிறது.
கிடைத்த மாவை வைத்துக் கிண்டிய உணவுதான் இவர்களுக்கு விருந்து.அப்பாத்திரத்தை துலக்கவே வேண்டாம், அதில் ஒட்டவிடாமல் கீழே சிந்தாமல் கண்ணுங்கருத்துமாய் உண்பார்கள்.
இன்னொருபுறம், ஒருவரால் முழுதும் உண்ண முடியாத அளவுக்கு நம்மூரில் தலைவாழை விருந்து... தினம் இதுபோல் வீணாகும் உணவுக்கு அளவே இல்லை. அவர்கள் மேம்படவேண்டுமென்றால் நாம் உணவை சிக்கனமாகப் பயன்படுத்தவேண்டும். "அது அவர்கள் நாட்டின் நிலை.. அது என்னை பாதிக்காது. நான் இப்படித்தான் இருப்பேன்" என்றால் நமக்குப் பாடம் புகட்ட பேரிடர்தான் ஒரே வழி.. பணம் இருந்தாலும் வாங்கிட உணவுப் பண்டமும் குடிநீரும் இருக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக