கலப்பு மணத்தால் ஒரு பக்கம் சமத்துவ புரட்சி என்றாலும், இன்னொரு பக்கம் பக்க விளைவுகளும் உண்டு. நம் பரம்பரையில் இதுவரை பதிவாகாத புதிய நோய்கள் அடுத்த தலைமுறையைத் தாக்குகிறது. கலப்பு மணத்தால் எப்போதுமே அடுத்த சந்ததியின் மரபணுக்கள் பலம் பெறுகிறது என்று சொல்ல முடியாது. DNA கட்டமைப்பில் புதிய இடைச்செருகல்கள் வரும். அதையும் சமத்துவ கண்ணோடு எதிர்கொள்ள வேண்டியதுதான். வேறு வழி?
மரபணு மாறிய கலப்பின மாடுகளும் பயிர்களும் தலை தூக்கவேகூடாது என்று போராடி ஆர்பாட்டம் செய்து எப்படி பதைக்கிறோமோ அப்படித்தானே நம் வர்க்கமும்? இது ஏதோ புதிதாக இன்று வந்த செய்தியல்ல. 70 வருடங்களாக தெரிந்த உண்மை இதுவே! பாரத கலாசாரத்தில் பல ரகசியங்கள் புதைந்துள்ளது. அம்முறையை முடிந்தவரை எல்லோரும் கடைப்பிடித்து வந்தனர். ஆனால் இதை எல்லாம் பார்த்துக்கொண்டா காதல் வரும்? வாழ்க்கை விதிக்கபட்டபடியே நடக்கும். இனி சர்வதேச மரபணுக்கள் கலந்து உலாவரும். அதனால் நம் வர்க்கம் மெல்ல அழியத் தொடங்கும்.
அதனால்தான் சில பழங்குடியினர் வேற்று மனிதர்களை தம் இனத்தில் சேர்ப்பதில்லை. ஆப்பிரிக்க சிடி பழங்குடியினர், அமேசான் காடுகளில் வாழும் யனோமாமி, அந்தமானின் ஜாரவா, நிகோபார் சோம்பென் பழங்குடிகள், என்று எல்லாமே இப்படித்தான்.. At what cost? அப்படியும் நம் ஆட்கள் உள்ளே புகுந்து கைவரிசையைக் காட்டி இன்று அந்த பழங்குடிகளின் தோல் / கண் நிறம், தலைமுடி மாறிப்போய், நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து, ஆயுள் குறைந்து வருகிறதாம். எல்லாம் நன்றாக இருக்கும்வரை நலமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக