About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

அப்படியாவது தமிழை வளர்க்கணுமா?

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கென ஒரு துறை கம்பீரமாக இருக்கவேண்டும் என்று தமிழர்கள் விருப்படுகிறார்களாம். அதற்காக நீ நான் என்று போட்டி போட்டுக்கொண்டு நிதி வசூல் செய்து அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். அங்கே என்னென்ன துறைகள் யார் பெயரில் நிதியுதவி பெற்று இயங்குகிறது என்று பார்த்தால் தமிழனுக்கு கோபம் வரும்.
The list of named chairs at Harvard University.
Boylston Professor of Rhetoric and Oratory
Gardiner Professor of Oceanic History and Affairs
Hollis Chair of Divinity
Hollis Chair of Mathematics and Natural Philosophy
McLean Professor of Ancient and Modern History
Perkins Professorship of Astronomy and Mathematics
Wales Professor of Sanskrit
Winn Professorship of Ecclesiastical History
இதெல்லாம் பல்கலைகழகம் நேரடியாக நிதியளித்து உருவாக்கிய துறைகள். இதில் தமிழ் இல்லை. சமஸ்கிருதத்திற்கு போட்டியாக தமிழ்த் துறையை Department of South Asian Studies பிரிவில் நுழைக்க நம்மவர்கள் முக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வெள்ளைக்காரன் தமிழோ- சமஸ்கிருதமோ பேசினால் நமக்குப் புல்லரித்து வாய்ப்பிளந்து பார்ப்போம். அவன் வேட்டி கட்டிக்கொண்டு பொங்கல் கிண்டினால் அவனோடு கைகுலுக்க வேண்டும் என்று ஆசை படுவார்கள். ஆனால் இங்கே ஆங்கிலமோ சமஸ்கிருதமோ யாரும் விரும்பவில்லை. அது தனிநபர் கொள்கை, அரசியல் நிலைப்பாடு என்று விட்டுவிடலாம்.
அங்கே இத்துறையை உருவாக்க $6 மில்லியன் டாலர்கள் (சுமார் 40 கோடி ரூபாய்)தேவை. இன்னும் திரட்டவேண்டியது 6 கோடியாம்! அதற்கு வசூல் வேட்டை உலகெங்கும் நடக்கிறது. அங்கு தமிழ்த் துறை இருந்தே ஆகவேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. ஆர்வக்கோளாறில் இங்கிருக்கும் நம்மவர்கள் நிதி திரட்டி அங்கே கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த தமிழ் வசூல் வேட்டைக்காக ஹார்வர்ட் பல்கலைகழகம் தனியான வங்கிக் கணக்கை திறக்க இன்றுவரை இசைவு தெரிவிக்கவில்லை. அதனால் மேரிலாண்டில் பதிவு செய்யப்பட்ட Tamil Chair Inc என்ற அமைப்புக்கு இந்தத் தொகை போய்க்கொண்டிருக்கிறது. இந்த பணத்தை வைத்துத்தான் ஆசிரியரின் ஊதியமோ, நூல் வெளியீடோ, பயிலரங்கமோ எதுவமே கையாளப்படும். அதாவது பல்கலைக்கழகம் நேரடியாக இதில் பட்டுக்கொள்ளவில்லை.
It is a matter of great prestige for Tamils to have their language taught at the world's most prestigious Harvard University என்று சொல்கிறது. நம்முடைய காசை அங்கு கொட்டி அப்படியொன்றும் தமிழ் வளர்க்க வேண்டிய அவசியமில்லை. அந்த நிதியை இங்கு தமிழ் வளர்ச்சிக்கு பயன்படுத்தினாலே போதும். பல்லாயிரக் கணக்கான சுவடிகள் வெறும் கேட்டலாகிட்டு பிரிக்கப்பட்டுள்ளது. போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததால் இவை படிக்கப்படாமல், ஸ்கேன் செய்யாமல், ஆய்வு செய்து கையெழுத்துப் பிரதி எடுக்கப்படாமல், தட்டச்சு ஆகாமல், மெய்திருத்தம் ஆகாமல், அச்சு நூலாக வெளிவராமல் அப்படியே தஞ்சை, மதுரை, சென்னை நூலகங்களில் கிடக்கிறது. நிலை இப்படியிருக்க ஹார்வர்டில் அவன் தமிழ் படித்தால் என்ன படிக்காவிட்டால் நமக்கென்ன? அவன் இங்குவந்து படித்துவிட்டுப் போகட்டுமே! நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தருமே!
Image may contain: text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக