About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 7 பிப்ரவரி, 2018

சாதிகள் நிலைத்திருக்கும்!

"சமூகத்தைக் கொல்லும் கொடிய விடம்தான் சாதி மதம்! எல்லோரும் ஓரினமாக வெறுப்பின்றி கலந்திட வேண்டும்" என்ற வாசகத்தைப் படித்தேன்.
சாதிகள் கொடிய நோய் என்றால் அதை குணமாக்க முடியுமா? சாதிகள் இல்லாமல் எல்லோராலும் இருக்க முடியுமா? அல்லது எல்லோரும் ஒரே சாதியில் இருக்க முடிமா? சாதிகள் வேண்டாம் என்றாலும் எல்லோராலும் ஒரே மாதிரி பழக்கவழக்க வாழ்க்கை நெறிமுறைகளை வகுத்துக் கொள்ள முடியுமா? எல்லோராலும் சைவமாகவோ அசைவமாகவோ மாறிட முடியுமா? எல்லா சாதிகளும் சமம் என்றால் இட ஒதுக்கீடு தொடருமா? எல்லோருமே சமம் என்றால் எல்லோருமே எல்லா தொழில்களையும் முன்வந்து செய்வார்களா? சமம் என்றாலும் செய்யும் தொழிலை வைத்து வாழ்க்கைத் தரம் காண்பார்களா?
இக்கேள்விகளுக்குத் துல்லியமாக நடுநிலையோடு விடையளிப்பது மிகவும் கடினம். ஏன்? சமுதாயத்தில் சிறிய விழுக்காடு அளவில் உள்ளோரை விடுத்து ஏனையோரின் நிலைப்பாடும் மனவோட்டமும் எப்படி உள்ளது?
*சாதிகள் வேண்டும், இட ஒதுக்கீடு வேண்டும்
*சாதிகள் வேண்டும், கலப்பு மணம் கூடாது
*கலப்பு மணம் செய்தாலும் ஒதுங்கியே இருப்பது நலம்
*சாதிகள் கூடாது என்றாலும் எல்லோருடனும் பழக முடியாது
*எல்லா சாதியினருடன் பழகலாம், ஆனால் பழக்கவழக்கத்திற்கு நம்மை மாற்றிக்கொள்ள முடியாது
*ஒரே சாதிதான் என்றாலும் எல்லோரையுமே ஏற்க முடியாது
*ஒரே சாதியானாலும் அடித்துக்கொள்வோம் அணைத்துக்கொள்வோம்
*சாதிகள் இருக்கட்டும் ஆனால் யாரும் யாரையும் ஒடுக்கக் கூடாது, அவரவர் வழியில் இடையூறின்றி இருந்தாலே போதும்
*முற்போக்கு என்பது பட்டிமன்றத்திற்கு சரி, நடைமுறைக்கு சரிபடாது
*எல்லாமே தனிநபர் விருப்பம், ஏதும் சொல்வதற்கில்லை
இப்படித்தான் உள்ளது இன்றைய சமுதாயம். நம் முற்போக்கு எண்ணப்படி எல்லோரும் மாறவேண்டும் என்றால், நாத்திகர்களின் கொள்கையை நம்மால் ஏன் ஏற்க முடிவதில்லை? நம் நெறியை அவர்களாலும் ஏற்க முடியவில்லை. அவரவர் குடும்பம், அவரவர் விருப்பம் என்று விட்டுவிட வேண்டும். ஊரோடு ஒத்துவாழ எல்லோரும் ஒரே சிந்தனையில் இருக்க வேண்டும். அது முடியுமா?

பல சித்தர்கள் பல சாதிகளைச் சேர்ந்தவர்களே, ஆனால் சித்தநிலை எய்த அது ஒரு தடையாக இருக்கவில்லை. ஏன்? எல்லோருமே ஒரே சிவ உயர்நெறியில் சித்த மரபில் இருந்ததால்தான் சங்கமித்தனர். சித்தர்களுக்கென கோட்பாடு ஆகமவிதி என்று எல்லாமே இருந்தது என்றால் அதுவும் ஒரு சாதிதானே? எப்படிப் பார்த்தாலும் ஏதோ ஒன்றின்கீழ் அனைவரும் வந்தாக வேண்டும், பழக்கவழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். அல்லவா? ஆகவே, மனித சமுதாயத்தில் சாதிப் பிரிவுகள் என்றுமே நிலைத்திருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக