கொலை குற்றங்கள் புரிந்தால் மரண தண்டனை நிச்சயம் என்று காலங்காலமாய் தெரிந்துங்கூட நம் மக்களுக்கு பயம் வரவில்லை என்றால் சமூகத்தின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டுள்ளது. எல்லா தண்டனைகளும் மன்னிக்கப்பட வேண்டியவையே என்றால் வெறும் ஆயுள் தண்டனைக் கொடுத்து என்ன பயன்? காந்தி ஜெயந்திக்கு விடுதலை செய்யவேண்டிய நன்னடத்தை தியாகிகளா? கல்வி, ஆன்மிகம், இறைமொழி, கலாச்சாரம் இவற்றைத் தாண்டி வளர்ப்பு முறை சகவாச தோஷம் உள்ளது. கொலையுண்டவனும், கொலை செய்தவனும் மனிதன்தான். கொலை செய்தவனை கோர்ட் மன்னிக்க வேண்டும் என்றால், கொலை குற்றம் செய்யும்முன் இவன் ஏன் அவனை மன்னித்திருக்கக் கூடாது? இவன் தண்டனை தரலாம், இவனுக்கு தண்டனை தர்க்கூடாதாம்!
வீடியோ சாட்சியத்தோடு செய்யும் கொலைகள் எல்லாமே கொலை குற்றமல்ல வதம் என்றால் தேசம் முழுதும் சிறைச்சாலைகள் நிரம்பி வழியும். சிறையில் எல்லோரும் திருந்துவார்கள் என்று எந்த குருட்டு நம்பிக்கையில் நம்மூரில் எதிர்ப்பாளர்கள் பேசுகிறார்கள்? தெரியவில்லை. வெறும் 10% க்கும் குறைவாகத்தான் உலகெங்கும் கைதிகள் தாங்கள் செய்த குற்றத்திற்கு வருந்துகிறார்கள். இவர்கள் திருந்தியதாகக் காட்டிக்கொண்டாலும் ஆழ்மனதில் மூர்க்க குணம் ஒளிந்திருக்கும் என்று உளவியலாளர்கள் சொல்கிறார்கள். அது எப்போது வெளிவரும், யாரைத் தாக்கும் என்று சொல்ல முடியாது.
தஷ்வந்த் என்ன செய்தான்? 'தன் பக்கத்து வீட்டு சிறுமியை அழைத்து பலாத்காரம் செய்து, கொன்றுவிட்டு, அவளை எரித்து விட்டான். அந்த வாரம் தன் தாயைக் கொன்றான். அவளுடைய நகை பணம் திருடினான். தந்தையைக் கொல்ல திட்டமிட்டிருந்தான். அதற்குள் போலீஸ் பிடித்தது. போலீஸ் பிடியிலிருந்து தப்பியோடி மும்பையல் ஓட்டலில் மாட்டிக்கொண்டான்.' ஏங்க BE படித்த இந்த 23 வயசு பையன் செய்தது பெருங்குற்றமா? வயசை கருத்தில் கொண்டு தண்டனையை குறைக்கவும் என்று அப்பீல் செய்கிறார் இவருடைய வக்கீல். இளம் வயதைக் காரணம் காட்டி தண்டனையில் சலுகைகள் தர வேண்டுமாம்... தண்டனையே அதற்குத்தான் என்பதை 'மரண தண்டனை' எதிர்ப்பாளர்கள் ஏனோ புரிந்து கொள்வதில்லை. இது படிப்பினையைத் தராவிட்டால் இவர்கள் காலப்போக்கில் habitual ciriminals ஆகிவிடுகிறார்கள். ஏனடா திருந்தவில்லை என்று யாரும் கேட்க முடியாது. "விட்டாங்க.. உள்ள இருந்துட்டு வந்ட்டேன், அதுக்கு இன்னா இப்போ?"
இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனை என்று ஒருவனே combo punishment பல வருடங்களுக்குப் பெற்றால் அவன் வெளியில் வருவதற்குள் /மரணமடைவதற்குள் முழு கிழவன் ஆகிவிடுவான். இவனுடைய வாழ்க்கை மற்றவர்களுக்குப் பாடமாக அமையவேண்டும். நம் நாட்டில் மரண தண்டனையே இல்லையென்றால் குற்றவாளிகள் சிறையில் 'சகல' வசதிகளோடு சௌகரியமாக இருக்கவே ஆசைப்படுவார்கள். தொடரட்டும் மரண தண்டனைகள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக