About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 19 டிசம்பர், 2011

புதியதாய் பிறந்து... Just born

புதியதாய் பிறந்து...

அதிகாலை பொழுது விடியும் நேரம்
வெண்மையான பனித்துளி ஒன்று
பசுமை புல்லின் நுனியில் நிற்க,

இளஞ்சூரியனின் கிரணங்கள் எழுப்பி
பனித்துளியூடே ஒளிபட்டு தெறித்து
கோஹிநூரே தாழ்ந்திடும் அளவில் 
வர்ணஜாலம் புரிந்தது இயற்கை.

'இப்போதுதான் பிறந்தோம்' என்று 
காண்பவர் மனதில் புத்துணர்வளிக்கும்
மூடுபனி நிறைந்த மூலிகை வாசம்
இயற்கை சுவாசம் விரும்பும் நேசம்.

இலைகளின் மீது வழிந்தோடிய பனி
இயற்கை வெளியில் நன்னீராட்டி
பச்சை நிறத்தை தூய்மைப் படுத்திட  
கண்களும் சற்று இளைப்பாறும். 

புதிதாய் பிறந்த நம் எண்ணத்தில் 
இயற்கையே நம் புதிய 'தாய்'
என உடலும் உள்ளமும் பறைசாற்றும்.
========================================================
Just born
As fresh as the morning dew
that dangles on the blade,
Honey bees mistake them
for a smacking nectar.

The dispersed ray of light
through the natural water moleule
surpasses the beatiful 'Kohinoor'.

On that foggy winter dawn
the pure, cold, dazzling drops
rejuvenate the mind and body.

Mesmerizing herbal aroma
in gentle breeze of early shine,
Reminds us every morning
to make us feel 'just born'.
===================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக