About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 21 டிசம்பர், 2011

A Tribute to Mahakavi Barathi

அமரகவி


காலனை கவிதையில் உதைத்த பாரதிக்கு
கோயில் யானை காலனாய் தெரியவில்லை
காலத்தால் அழியாத அமரகவி உடலில்
கிடைத்த முதல் அடி அதுதானே.

மகாகவி ஒரு தீர்கதரிசி என்றாலும்
மிகவும் வறுமையில் வாடியது துயரம்
மகாசக்தியின் புதல்வனான இவனுக்கு
மனிதவாழ்வு கசப்பையே தந்தது.

தெரிந்த மொழிகளில் புலமை என்னே!
திறமை ஆற்றலாய் எரிந்தது ஜோதி.
எரிக்கும் பார்வையை அள்ளி வீசினான்
எண்ணத்தில் நிலைகெட்ட மனிதனை.

பாருக்குள்ளே நல்ல நாடென்றவன்
பாவங்கள் நிறைய செய்திருக்கவேண்டும்
நேருக்கு நேர் காளியை கேட்பானாம்
நலங்கெட புழுதியில் எரிந்ததற்கு.

சுடர்மிகு அறிவுடன் ஏன் படைத்தாய்  என 
சொல்லடி சிவசக்தி இக்கணமே எனக்கு,  
சொல்வதை விதி மூலம் சொல்லிவிட்டாள்
செல்லம்மா கண்ணம்மா சொல்லாததை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக