About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

Spiritual Poetry (Tamil)

< முதல் துதி >
அருகமும் எருக்கும் சிறப்புற சாற்றி
    நாளும் துதிக்கும் உன் அடியவர்க்கு
சிறுபரி மூஷிகன் சுமந்திடும் கஜமுகா
  சித்தியும் புத்தியும் அருள்வாய் வள்ளலே

 < திருச்சிற்றம்பலம் >
திருநீறு பூசி நாதனை மனம் நினைக்க
ஓதும் மறைகேட்டு நந்தியும் ஆசிதர
முன்னே கடந்து ஈசனை அடைந்து
வில்வம் சாற்றி நெஞ்சார தொழுதேனே

 < ஸ்ரீநிவாசம் >
தலையணை குடையென ஆதிசேஷன் இருக்க
அலைமகள் பொன்மலர் பாதத்தை பற்றிருக்க
சோலைஎன பாற்கடலும் வியாபித்திருக்க
காலையும் மாலையும் தேவர்கள் துதிக்கும்
வைகுண்டம் அதுவே பக்தனின் நெஞ்சே.

 < முருகன் துதி >
எளியனே சிறுவனே இனிக்கும் பாலனே
அழகனே முருகனே காக்கும் குமரனே
குன்றனே குறவனே சிரிக்கும் வேலனே
மன்னனே மைந்தனே பணிந்தேன் குகனே.

  < கலைமகள் துதி >
அன்னமும் வெண்மையும் தூய நல்லறிவாகி
ஏடும் மாலையும் ஆயகலை புலமையாகி
மீட்டும் நாதத்தில் ஸ்ருதியாகிய வித்தகியே
அருள்வாயே என் அன்னையே கலைவாணியே.

  < சிவநாதம் >
( Poem covers all the panchabootha sthalas )

 சபைக்கோர் அரசனே அம்பலவாணனே
 சிவகாமியின் சுந்தரனே நடராசனே
 வெட்டவெளி சித்தாந்தத்தின் ரகசியமே 

 உள்ளொளியை காட்டிடுவீர் நமசிவாயமே (Chidambaram)

 பூசைநீரை கரிமுகம் துதியால் சொரிய
 சிலந்திவலை பின்னல் கீழ் இளைப்பாரிய
 அகிலாண்ட நாயகியின் உன்னத நாதனே
 எந்தனுக்கோர் வழி சொல்வீர் நமசிவாயமே (Thiruvaanaika)

அடிமுடி எட்டா அருணையின் ஜோதியே 
 திருவடி தொழுகிறேன் நின்னருள் வேண்டியே
 உண்ணாமுலை மகிழும் அருணாச்சலமே
 நினைத்திடவே முக்திதாரும் நமசிவாயமே (Thiruvannamalai)

ஆரூர் மண்ணில் பிறந்தாலே நற்கதியென
 பாரோர் போற்றும் கமலையின் தலைவனே
 ஏனோ அங்கு பிறந்திலன் என்செய்வேன்
 பேதம்பாரா கருணை தாரீர் நமசிவாயமே (Thiruvaroor)

கண்ணப்பனும் கண்டுகளித்த காளத்தியப்பரே
 காற்றிலே ஒளியாட ஒலிக்கும் நல்வேதமே
 ஞானியர் போற்றும் அம்பிகையின் பிரசன்னமே
 என் நாதனே பரமனே நமசிவாயமே .             (Kalahasthi)

 < உயிருக்குள் சிவம் >
ம்மையும் அப்பனுமான சிவமே
தியந்தம் இல்லாத சிவமே
சைக்குள் பண்ணாகிய சிவமே
ன்றோனாய் காத்திடும் சிவமே
லகாளும் பரமனே சிவமே
ற்றாய் பெருக்கெடுத்த சிவமே
மனையும் தண்டித்த சிவமே
ழைக்கு மண்சுமந்த சிவமே
ம்பூதத்தை ஆளும் சிவமே
ளியாகிய அருணை சிவமே
தும் நான்மறையில் சிவமே
டத  விடமுண்ட சிவமே
முக்கண்ணனே  நமசிவாயமே.

<  கொடுமுடி நாதர் துதி  >
காவிரிக்கரை கொண்ட திருப்பாண்டிக்கொடுமுடி
கோலமுது சூழ் மும்மூர்த்தி நற் தலமதில்
தாவிஅக்கரை ஓடும் முன்வினை பாவங்கள்
தாள் பணிந்திட்டேன் சுந்தரநாயகியின் நாதனே
கூவி இக்கரையில் வன்னி நிழல் அமர்ந்து
கவி பாடும் பிறை சேகரனின் சொல்லேற்க
வாருமே நமசிவாயவே!  நமசிவாயவே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக